Bhagavad Gita: Chapter 3, Verse 15

1ர்ம ப்3ரஹ்மோத்34வம் வித்3தி4 ப்3ரஹ்மாக்ஷரஸமுத்34வம் |

1ஸ்மாத்1ஸர்வக3தம் ப்3ரஹ்ம நித்1யம் யஞ்ஞே ப்ரதி1ஷ்டி21ம் ||15||

கர்ம—--கடமைகள்; ப்ரஹ்ம—--வேதங்களில்; உத்பவம்—--வெளிப்படுத்தப்பட்டது; வித்திஹி—--நீ அறிய வேண்டும்; ப்ரஹ்ம--—வேதங்கள்; அக்ஷர—--அழியாத (கடவுளிடமிருந்து); ஸமுத்பவம்—--நேரடியாக வெளிப்பட்டது; தஸ்மாத்—--எனவே; ஸர்வ-கதம்—--அனைத்தும் நிறைந்த; ப்ரஹ்ம-—இறைவன்; நித்யம்--—நித்தியமாக; யஞ்ஞே-—--யாகத்தில்; ப்ரதிஷ்டிதம்—--நிறுவப்பட்டது.

Translation

BG 3.15: மனிதர்களுக்கான கடமைகள் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன, மேலும் வேதங்கள் கடவுளால் வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே, எங்கும் நிறைந்த இறைவன் தியாகச் செயல்களில் நித்தியமாக இருக்கிறார்.

Commentary

வேதங்கள் கடவுளின் மூச்சிலிருந்து தோன்றியவை: அஸ்ய மஹதோ1 பூ41ஸ்ய நிஶ்வஶித1மேத1த்3யத்3ரிக்3வேதோ3 யஜுர்வேத3ஹ ஸாமவேதோ3 ’த1வங்கி3ரஸஹ ப்3ரிஹத்1 அரண்யக்1 உப1னிஷத3ம் 4.5.11) ‘ரிக்வேதம், யஜுர் வேதம், ஸாமவேதம், அதர்வ வேதம் ஆகிய நான்கு வேதங்களும் ஒப்புயர்வற்ற தெய்வீக புருஷனின் சுவாசத்தில் இருந்து தோன்றியவை.’ இந்த நித்திய வேதங்களில், மனிதர்களின் கடமைகள் கடவுளால் வகுக்கப்பட்டுள்ளன. இந்த கடமைகள் தங்கள் செயல்பாட்டின் மூலம், உலகப் பற்றில் மூழ்கியவர்கள் படிப்படியாக தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வதற்கும், அறியாமையின் போக்கிலிருந்து உணர்ச்சியின் நிலைக்கும், பின்னர் நற்குணத்தின் நிலைக்கும் தங்களை உயர்த்திக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடமைகளை யஞ்ஞமாக அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். எனவே, கடவுளுக்குப் யஞ்ஞமாக அர்ப்பணிக்கப்படும் கடமைகள் உண்மையில் தெய்வீகமாகவும், கடவுளின் இயல்பாகவும் உள்ளது. மற்றும், அவரிடமிருந்து வேறுபட்டதாகவும் இல்லை.

1ந்த்1ர ஸார் யஞ்ஞத்தை ஒப்புயர்வற்ற பகவானே என்று கூறுகிறது:

யஞ்ஞோ யஞ்ஞ பூ1மாம்ஶ் சை1வ யஞ்ஞஶோ யஞ்ஞ யஞ்ஞபா4வனஹ

யஞ்ஞபுக்1 சே1தி11ஞ்சா1த்1மா யஞஞேஷ்விஞ்யோ ஹரிஹி ஸ்வயம்

பாகவதத்தில் (11.19.39), ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவ் இடம் கூறுகிறார்: ‘யஞ்ஞோ ஹம் ப43வத்33மஹ' 'வஶுதேவனின் மகனான நான் யஞ்ஞம்' என்று வேதங்கள் கூறுகின்றன: ‘யஞ்ஞோ வை விஷ்ணுஹு‘ யக்ஞம் உண்மையில் பகவான் ஸ்ரீ விஷ்ணுவே.’ இந்தக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தும் ஸ்ரீ கிருஷ்ணர், தியாகத்தின் செயலில் கடவுள் என்றென்றும் இருக்கிறார் என்று இந்த வசனத்தில் கூறுகிறார்.

Watch Swamiji Explain This Verse