அத்தியாயம் 4: ஞான கர்ம ஸன்யாஸ யோகம்

அறிவு மற்றும் செயல் துறைகளின் யோகம்

அர்ஜுனனுக்கு அளிக்கும் அறிவின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த, ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் அதன் பழமையான தோற்றத்தை வெளிப்படுத்துகிறார். இந்த அறிவு முறை எவ்வாறு நித்திய விஞ்ஞானம் என்பதை அவர் விளக்குகிறார், இந்த நித்திய விஞ்ஞானத்தை அவர் ஆதியில் சூரிய பகவானுக்கு கற்பித்தார். மேலும், இது ஒரு தொடர்ச்சியான பாரம்பரியத்தில் புனிதமான மன்னர்களுக்கு வழங்கப்பட்டது. அவர் இப்போது அதே உயர்ந்த யோக அறிவியலை அவரின் அன்பான நண்பரும் பக்தருமான. அர்ஜுனனுக்கு வெளிப்படுத்துகிறார். தற்காலத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி இந்த அறிவியலை சூரியக் கடவுளுக்கு யுகங்களுக்கு முன்பே கற்றுக் கொடுத்தார் என்று அர்ஜுனன் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்ரீ கிருஷ்ணர் தனது வம்சாவளியின் தெய்வீக மர்மத்தை வெளிப்படுத்துகிறார். கடவுள் பிறாவத மற்றும் நித்தியமானவர் என்றாலும், அவருடைய யோகமாய சக்தியால், அவர் தர்மத்தை (நீதியின் பாதையை) நிறுவ பூமியில் அவதரிக்கிறார் என்று அவர் விளக்குகிறார். இருப்பினும், அவரது பிறப்பு மற்றும் செயல்பாடுகள் தெய்வீகமானது மற்றும் பொருள் குறைபாடுகளால் ஒரு போதும் கறைபபடுவது இல்லை. இந்த இரகசியத்தை அறிந்தவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அவருடைய பக்தியில் ஈடுபட்டு, அவரை அடையும் போது, ​​மீண்டும் இவ்வுலகில் பிறப்பதில்லை.

‘இந்த அத்தியாயம் பின்னர் செயலின் தன்மையை விளக்குகிறது மற்றும், மூன்று கோட்பாடுகளை விவாதிக்கிறது- செயல், செயலற்ற தன்மை மற்றும் தடைசெய்யப்பட்ட செயல். யோகிகள் பெரும்பாலான மனத்தை ஈர்க்கும் செயல்களைச் செய்யும்போது கூட செயலற்றநிலையில் இருக்கிறார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது, இதனால் அவர்கள் கர்ம வினைகளின் ஆசாபாசத்தில் உழலுலவதில்லை .’இந்த ஞானத்தைக் கொண்டு, பண்டைய முனிவர்கள், வெற்றி அல்லது தோல்வி, மகிழ்ச்சி அல்லது துன்பம், புகழ் அல்லது அவப்பெயர் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல், கடவுளின் மகிழ்ச்சிக்காக தியாகம் செய்யும் செயலாக மட்டுமே தங்கள் பணிகளைச் செய்தனர். தியாகம் என்பது பல்வேறு வகையானது, அவற்றில் பல இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.. யாகம் சரியாக அர்ப்பணிக்கப்படும் போது, ​​அதன் எச்சங்கள் அமிர்தம் போல் மாறும். அத்தகைய அமிர்தத்தை உட்கொள்வதன் மூலம், யாகத்தை மேற்கொள்பவர்கள் அசுத்தங்களிலிருந்து தூய்மைப்படுத்தப்படுகிறார்கள். எனவே, தியாகம் எப்போதும் சரியான உணர்வுகளுடனும், அறிவுடனும் செய்யப்பட வேண்டும். அறிவு என்ற படகின் உதவியுடன், மிகப்பெரிய பாவிகளும் கூட பொருள் துயரங்களின் கடலைக் கடக்கிறார்கள். அத்தகைய அறிவு, உண்மையை உணர்ந்த ஒரு உண்மையான ஆன்மீக குருவிடம் இருந்து பெற வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனுடைய குருவாக, அறிவின் வாளை எடுத்து, அவரது இதயத்தில் எழுந்த சந்தேகங்களைத் துண்டித்து, எழுந்து நின்று தனது கடமையைச் செய்யும்படி கேட்கிறாரர்.

 

ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் : இந்த நித்திய யோக விஞ்ஞானத்தை நான் சூரியக் கடவுளான விவஸ்வானுக்குக் கற்றுக் கொடுத்தேன், அவர் அதை மனுவுக்குக் கொடுத்தார்; மற்றும் மனு, அதை இக்ஷ்வாகுவிடம் அறிவுறுத்தினார்.

எதிரிகளை அடிபணியச் செய்பவரே, துறவிகளான மன்னர்கள் இந்த யோக அறிவியலை தொடர்ச்சியான பாரம்பரியத்தில் பெற்றனர். ஆனால் காலப்போக்கில், அது உலகத்திடம் இல்லாமல் போனது.

யோகத்தைப் பற்றிய அதே மிக உயர்ந்த ரகசியமான பண்டைய அறிவை இன்று நான் உனக்கு வெளிப்படுத்துகிறேன், ஏனென்றால் எனது நண்பன் மற்றும் பக்தனான உன்னால் இந்த ஆழ்நிலை ஞானத்தை புரிந்துகொள்ள முடியும்.

அர்ஜுனன் கூறினார்: நீங்கள் விவஸ்வானுக்குப் பிறகுதான் பிறந்தீர்கள். தொடக்கத்தில் நீங்கள் அவருக்கு இந்த அறிவியலை அறிவுறுத்தினீர்கள் என்பதை நான் எப்படி புரிந்துகொள்வது?

பகவான் கூறினார்: அர்ஜுனனே, நீயும் நானும் பல பிறவிகள் பெற்றிருக்கிறோம். ஓ பரந்தபா, நான் நான் உன்னுடைய அனைத்து பிறவிகளையும் நினைவில் வைத்திருக்கும் பொழுது நீ அவைகளை மறந்து விட்டாய்.

நான் பிறக்காதவனாக இருந்தாலும், எல்லா உயிர்களுக்கும் இறைவனாக இருந்தாலும், அழியாத இயல்புடையவனாக இருந்தாலும், என்னுடைய தெய்வீக யோகமாய சக்தியினால் நான் இந்த உலகில் தோன்றுகிறேன்.

அர்ஜுனா, எப்பொழுதெல்லாம் தர்மம் குறைகிறதோ, அநியாயம் அதிகமாகிறதோ, அப்போது நான் பூமியில் என்னை வெளிப்படுத்துகிறேன்.

ஸன்மார்க்கத்தைப் பாதுகாக்கவும், பழிபாவத்திற்கு அஞ்சாதவர்களை அழிக்கவும், தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவும், நான் இந்த பூமியில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன்.

ஓ அர்ஜுனா, எனது பிறப்பு மற்றும் செயல்பாடுகளின் தெய்வீக தன்மையைப் புரிந்து கொள்பவர்கள், உடலை விட்டு வெளியேறிய பிறகு, மீண்டும் பிறக்க வேண்டியதில்லை, ஆனால் எனது நித்திய இருப்பிடத்திற்கு வருவார்கள்.

பற்று, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, என்னில் முழுமையாக மூழ்கி, என்னிடத்தில் அடைக்கலமாகி, கடந்த காலத்தில் பலர் என்னைப் பற்றிய அறிவால் தூய்மையடைந்து, அதனால் எனது தெய்வீக அன்பை அடைந்தனர்.

எந்த வழியில் மக்கள் என்னிடம் சரணடைகிறார்களோ, அதற்கேற்ப நான் கைமாறு செய்கிறேன். பிருதையின் மகனே, தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் என் வழியைப் பின்பற்றுகிறார்கள்.

இவ்வுலகில், பொருள் வெகுமதிகள் விரைவாக வெளிப்படுவதால் பொருள் சார்ந்த செயல்களில் வெற்றி பெற விரும்புவோர், தேவலோக தெய்வங்களை வணங்குகிறார்கள்.

மக்களின் குணங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப நான்கு வகையான தொழில்கள் என்னால் உருவாக்கப்பட்டன. நான் இந்த அமைப்பை உருவாக்கியவன் என்றாலும், என்னைச் செய்யாதவனாகவும் நித்தியமானவனாகவும் அறிந்துகொள்.

செயல்பாடுகள் என்னைக் களங்கப்படுத்தாது, செயலின் பலனை நான் விரும்புவதுமில்லை. இந்த வழியில் என்னை அறிந்தவன் வேலையின் கர்ம வினைகளுக்கு ஒருபோதும் கட்டுப்படுவதில்லை.

இந்த உண்மையை அறிந்து, பழங்காலத்தில் விடுவிப்பு நாடுபவர்கள் கூட செயல்களைச் செய்தார்கள். எனவே, அந்த முனிவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நீங்களும் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

செயல் என்றால் என்ன, செயலற்ற தன்மை என்றால் என்ன? அறிவாளிகள் கூட இதை தீர்மானிப்பதில் குழப்பம் அடைகிறார்கள். இப்போது நான் உனக்கு செயலின் ரகசியத்தை விளக்குகிறேன், அதை அறிவதன் மூலம் நீ பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடலாம்.

பரிந்துரைக்கப்பட்ட செயல், தவறான செயல், மற்றும் செயலற்ற தன்மை ஆகிய மூன்றின் தன்மையையும் நீ புரிந்து கொள்ள வேண்டும். இவற்றைப் பற்றிய உண்மை ஆழமானது மற்றும் புரிந்துகொள்வது கடினம்.

செயலில் செயல் இன்மையையும் செயலின்மையில் செயலையும் பார்ப்பவர்கள் உண்மையிலேயே மனிதர்களில் ஞானமுள்ளவர்கள். எல்லா வகையான செயல்களையும் செய்தாலும், அவர்கள் யோகிகள் மற்றும் அவர்கள் எல்லா செயல்களிலும் வல்லவர்கள்.

யாரொருவர் செய்யும் செயலின் பொருள் ஆசையில் இருந்து விடுபட்டு செய்யும் வேலையின் எதிர்வினையை தெய்வீக அறிவின் நெருப்பில் எரிக்கிறார்களோ அவர்களை ஞானிகள் என்று ஞானம் பெற்ற முனிவர்கள் கூறுகிறார்கள்.

இத்தகைய மக்கள், தங்கள் செயல்களின் பலன்களின் மீதான பற்றுதலைக் கைவிட்டு, எப்போதும் திருப்தியடைகிறார்கள். மற்றும் வெளிப்புற விஷயங்களைச் சார்ந்து இருக்க மாட்டார்கள். செயல்களில் ஈடுபட்டாலும், அவர்கள் எதையும் செய்வதில்லை.

எதிர்பார்ப்புகள் மற்றும் உரிமை உணர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, மனமும் புத்தியும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டால், அவர்கள் தங்கள் உடலால் செயல்பட்டாலும் அவர்களுக்கு எந்தப் பாவமும் ஏற்படாது.

பொறாமையிலிருந்து விடுபட்டு, தன்னிச்சையாக வரும் எந்த ஆதாயத்தில் திருப்தியுடையவருமாக, வாழ்க்கையின் இருமைகளுக்கு அப்பாற்பட்டவையாக வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலையில் இருப்பதால், எல்லாவிதமான செயல்களை செய்யும்போதும் அவர்கள் தங்கள் செயல்களுக்குக் கட்டுப்படுவதில்லை.

அவர்கள் பொருள் பற்றுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மற்றும், அவர்களின் புத்தி தெய்வீக அறிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் எல்லா செயல்களையும் ஒரு தியாகமாக (கடவுளுக்கு) செய்வதால், அவர்கள் எல்லா கர்மவினைகளிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

இறையுணர்வில் முழுவதுமாக மூழ்கியவர்களுக்கு நைவேத்தியம் ப்ரஹ்மம், அதைச் செலுத்தும் கரண்டி ப்ரஹ்மம், நிவேதனம் செய்யும் செயல் ப்ரஹ்மம், யாகம் செய்யும் நெருப்பும் ப்ரஹ்மம். இவ்வாறு எல்லாவற்றையும் கடவுளாக கருதுபவர்கள் இவ்வாறு எளிதாக அவரை அடைகிறார்கள்.

சில யோகிகள் தேவலோக தெய்வங்களுக்கு பொருள் காணிக்கைள் அளித்து வழிபடுகிறார்கள். மற்றவர்கள் பரம சத்தியத்தின் நெருப்பில் சுயத்தை தியாகம் செய்து பரிபூரணமாக வணங்குகிறார்கள்.

மற்றவர்கள் கேட்கும் மற்றும் பிற புலன்களை கட்டுப்படுத்தும் யஞ்ஞ நெருப்பில் தியாகம் செய்கிறார்கள் இன்னும் சிலர் புலன்களின் யஞ்ஞ நெருப்பில் ஒலி மற்றும் புலன்களின் பிற பொருட்களை தியாகம் செய்கிறார்கள்.

சிலர், அறிவால் ஈர்க்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட மனதின் நெருப்பில் தங்கள் அனைத்து புலன்களின் செயல்பாடுகளையும் தங்கள் உயிர் ஆற்றலையும் வழங்குகிறார்கள்.

சிலர் தங்கள் செல்வத்தை தியாகம் செய்கிறார்கள், மற்றவர்கள் கடுமையான துறவறத்தை தியாகமாக அர்ப்பணிக்கின்றனர். சிலர் யோகப் பயிற்சிகளின் எட்டு மடங்கு பாதையை பயிற்சி செய்கிறார்கள், இன்னும் சிலர் வேதங்களைப் படித்து, கடுமையான சபதங்களை கடைப்பிடிக்கும் போது தியாகமாக அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இன்னும் சிலர் உள்வரும் மூச்சில் வெளியேறும் மூச்சை தியாகம் செய்கிறார்கள், சிலர் உள்வரும் மூச்சை வெளிச்செல்லும் சுவாசத்தில் வழங்குகிறார்கள். சிலர் ப்ரணாயாமத்தை கடினமாகப் பயிற்சி செய்கிறார்கள், உயிர்-ஆற்றலின் ஒழுங்குமுறையில் முழுமையாக உள்வாங்கப்பட்டு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சுவாசங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் உணவை உட்கொள்வதைக் குறைத்து, உயிர்-சக்தியில் மூச்சை தியாகமாக வழங்குகிறார்கள். இந்த தியாகத்தை அறிந்தவர்கள் அனைவரும் இத்தகைய நிகழ்ச்சிகளின் விளைவாக தங்கள் அசுத்தங்களிலிருந்து தூய்மையடைந்தவர்கள்.

தியாகத்தின் ரகசியத்தை அறிந்து, அதில் ஈடுபடுபவர்கள், அமிர்தம் போன்ற அதன் எஞ்சியவற்றை உட்கொண்டு, பூரண சத்தியத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். ஓ குருக்களில் சிறந்தவனே, தியாகம் செய்யாதவர்கள் இம்மையிலோ மறுமையிலோ மகிழ்ச்சியைக் காண முடியாது.

இந்த பல்வேறு வகையான தியாகங்கள் அனைத்தும் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு வகையான வேலைகளிலிருந்து தோன்றியவை என அறிந்து கொள்; இந்த புரிதல் பொருள் அடிமைத்தனத்தின் முடிச்சுகளை வெட்டுகிறது.

எதிரிகளை அடக்குபவனே, எந்த விதமான உடல் அல்லது பொருள் தியாகத்தை விட அறிவுடன் செய்யப்படும் யாகம் மேலானது. ஓ பார்த்தா. இறுதியில் அனைத்து தியாகங்களும் தெய்வீக அறிவில் முடிவடைகின்றன.

ஆன்மீக குருவை அணுகி உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். பயபக்தியுடன் அவரிடம் விசாரித்து அவருக்கு சேவை செய்யுங்கள். அத்தகைய ஞானம் பெற்ற துறவி சத்தியத்தை கண்டதால் உங்களுக்கு அறிவை வழங்க முடியும்.

இந்த வழியைப் பின்பற்றி, ஒரு குருவிடம் ஞானம் பெற்ற பிறகு, ஓ அர்ஜுனா, இனி நீ மாயையில் விழமாட்டாய். அந்த அறிவின் வெளிச்சத்தில், எல்லா உயிரினங்களும் உன்னதத்தின் பகுதிகள் மற்றும் எனக்குள் இருப்பதை நீ பார்ப்பாய்.

எல்லா பாவிகளிலும் மிகவும் ஒழுக்கக்கேடானவர்களாகக் கருதப்படுபவர்கள் கூட, தெய்வீக அறிவின் படகில் தங்களை உட்காரவைத்துக்கொண்டு இந்த ஜட வாழ்வின் கடலைக் கடக்க முடியும்.

எரிக்கப்பட்ட நெருப்பு விறகுகளை சாம்பலாக்குவது போல, ஓ அர்ஜுனா, அறிவின் நெருப்பு ஜடச் செயல்களின் அனைத்து எதிர்வினைகளையும் சாம்பலாக்குகிறது.

இவ்வுலகில் தெய்வீக அறிவைப் போல் தூய்மைப்படுத்துவது வேறு எதுவும் இல்லை. நீண்டகால யோகப் பயிற்சியின் மூலம் மனத்தூய்மை அடைந்த ஒருவர், சரியான நேரத்தில் இதயத்தில் அத்தகைய அறிவைப் பெறுகிறார்.

எவரொருவர் ஆழமான நம்பிக்கையுடன் தங்கள் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்த பழகுகிறார்களோ அவர்கள் தெய்வீக அறிவை அடைகிறார்கள். இத்தகைய ஆழ்நிலை அறிவின் மூலம், அவர்கள் விரைவில் நிரந்தரமான உயர்ந்த அமைதியை அடைகிறார்கள்.

ஆனால் நம்பிக்கையோ, அறிவோ இல்லாதவர்கள், சந்தேகப்படும் இயல்புடையவர்கள், வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். சந்தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சி இல்லை.

ஓ அர்ஜுனா, கர்மத்தை துறந்தவர்களையும், அறிவினால் சந்தேகங்கள் நீங்கியவர்களையும், சுய அறிவில் நிலைபெற்றவர்களையும் செயல்கள் பிணைப்பதில்லை.

எனவே, அறிவு என்ற வாளால், உன் உள்ளத்தில் எழுந்த ஐயங்களை அறுத்து விடு. பரத வம்சத்தில் தோன்றியவனே, உன்னை கர்ம யோகத்தில் நிலைநிறுத்து. எழுந்திரு, எழுந்து செயலாற்று!