க1ர்மணோ ஹ்யபி1 போ3த்3த4வ்யம் போத்3த4வ்யம் ச1 விக1ர்மண: |
அக1ர்மணஶ்ச போ3த்3த4வ்யம் க3ஹனா க1ர்மணோ க3தி1: ||
17 ||
கர்மணஹ---பரிந்துரைக்கப்பட்ட செயல்; ஹி--—நிச்சயமாக; அபி----மேலும்; போத்தவ்யம்—--அறியப்பட வேண்டும்; போத்தவ்யம்—--அறியப்பட வேண்டும்; ச--—மற்றும்; விகர்மணஹ—--தடைசெய்யப்பட்ட செயல்; அகர்மணஹ—--செயலற்ற தன்மை; ச—--மற்றும்; போத்தவ்யம்—-- அறியப்பட வேண்டும்; கஹனா—--ஆழமான; கர்மணஹ----செயல்; கதிஹி----உண்மையான பாதை
Translation
BG 4.17: பரிந்துரைக்கப்பட்ட செயல், தவறான செயல், மற்றும் செயலற்ற தன்மை ஆகிய மூன்றின் தன்மையையும் நீ புரிந்து கொள்ள வேண்டும். இவற்றைப் பற்றிய உண்மை ஆழமானது மற்றும் புரிந்துகொள்வது கடினம்.
Commentary
செயல் (கர்ம்), தடைசெய்யப்பட்ட செயல் (விகர்ம்), செயலின்மை (அகர்ம்) என மூன்று வகையாக ஸ்ரீ கிருஷ்ணரால் செயல் பிரிக்கப்பட்டுள்ளது.
செயல்: கர்ம் என்பது புலன்களை ஒழுங்குபடுத்துவதற்கும் மனதைத் தூய்மைப்படுத்துவதற்கும் ஶாஸ்திரங்களால் பரிந்துரைக்கப்படும் மங்களகரமான செயலாகும்.
தடைசெய்யப்பட்ட செயல்: விகர்மம் என்பது சாதகமற்ற செயலாகும், ஏனெனில் அவை தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆன்மாவை சீரழிக்கும்.
செயலின்மை: அகர்ம் என்பது விளைவுகளுடன் பற்று இல்லாமல், கடவுளின் மகிழ்ச்சிக்காக மட்டுமே செய்யப்படும் செயலாகும். அவர்களுக்கு எந்த கர்மவினைகளும் இல்லை, மேலும் அவை ஆன்மாவை சிக்க வைக்காது.