Bhagavad Gita: Chapter 4, Verse 19

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா4: கா1மஸங்க1ல்ப1வர்ஜிதா1: |

ஞானாக்3னித3க்341ர்மாணம் த1மாஹுஹுப1ண்டித1ம் பு3தா4: ||19||

யஸ்ய--—யாருடைய; ஸர்வே--—ஒவ்வொரு; ஸமாரம்பாஹா—--முயற்சிகளும்; காம--—பொருள் இன்பங்களுக்கான ஆசைகளை; ஸங்கல்ப--—தீர்க்க; வர்ஜிதாஹா—--இல்லாமல்; ஞான—--தெய்வீக அறிவாகிய; அக்னி—--அக்கினியில்; தக்த--—எரிக்கப்பட்ட; கர்மாணம்--—செயல்களாக இருக்கின்றனவோ; தம்--—அவரை; ஆஹுஹு—--என்பர்; பண்டிதம்—--ஒரு முனிவர்; புதாஹா--—ஞானமுள்ளவர்

Translation

BG 4.19: யாரொருவர் செய்யும் செயலின் பொருள் ஆசையில் இருந்து விடுபட்டு செய்யும் வேலையின் எதிர்வினையை தெய்வீக அறிவின் நெருப்பில் எரிக்கிறார்களோ அவர்களை ஞானிகள் என்று ஞானம் பெற்ற முனிவர்கள் கூறுகிறார்கள்.

Commentary

ஆன்மா, பேரின்பக் கடலாக இருக்கும் கடவுளின் ஒரு சிறு அங்கமாக இருப்பதால், இயற்கையாகவே ஆனந்தத்தைத் தேடுகிறது. இருப்பினும், பொருள் ஆற்றலால் மூடப்பட்டிருக்கும், ஆன்மா தவறாக பொருள் உடலுடன் தன்னை அடையாளப்படுத்துகிறது. இந்த அறியாமையில், அது ஜட உலகில் இருந்து பேரின்பத்தை அடைய செயல்களைச் செய்கிறது. இந்த செயல்கள் சிற்றின்ப மற்றும் மன இன்பத்திற்கான விருப்பத்தால் தூண்டப்படுவதால், அவை ஆன்மாவை கர்ம வினைகளில் பிணைக்கின்றன.

இதற்கு நேர்மாறாக, ஆன்மா தெய்வீக அறிவால் பிரகாசிக்கப்படும்போது, ​​அது தேடும் பேரின்பம் புலன்களின் பொருள்களிலிருந்து அல்லாமல், மாறாக கடவுளுக்கு அன்பான சேவை செய்வதன் மூலம் அடையப்படும் என்பதை உணருகிறது. அதன் பிறகு கடவுளின் மகிழ்ச்சிக்காக ஒவ்வொரு செயலையும் செய்ய முயல்கிறது. 'நீ என்ன செய்தாலும் எதைச் சாப்பிட்டாலும் புனிதமான நெருப்புக்கு எதை காணிக்கையாக செலுத்தினாலும், அன்பளிப்பாக எதை வழங்கினாலும், என்ன தவம் செய்கிறாயோ ஓ குந்தியின் மகனே, அவற்றை எனக்கு பிரசாதமாக செய்.' (பகவத் கீதை 9.2) அத்தகைய ஞானம் பெற்ற ஆன்மா பொருள் இன்பங்களையும் சுயநல செயல்களையும் துறந்து ,எல்லா செயல்களையும் கடவுளின் இன்பத்திற்காக அர்ப்பணிக்கும் போது அத்தகைய செயல்கள் கர்மவினைகளை உண்டாக்குவதில்லை, அவை தெய்வீக அறிவின் நெருப்பில் அழிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

Watch Swamiji Explain This Verse