Bhagavad Gita: Chapter 5, Verse 16

ஞானேன து113ஞ்ஞானம் யேஷாம் நாஶித1மாத்1மன: |

தே1ஷாமாதி1த்1யவஜ்ஞானம் ப்1ரகா1ஶயதி11த்11ரம் ||16||

ஞானேன--—தெய்வீக அறிவால்; து—--ஆனால்; தத்—-அது; அஞ்ஞானம்—--அறியாமை; யேஷாம்---—யாருடைய; நாஶிதம்--—அழிக்கப்பட்டுவிட்டது; ஆத்மனஹ—-தன்னுடைய; தேஷாம்--—அவர்களின்; ஆதித்ய-வத்—--சூரியனைப் போல; ஞானம்—--அறிவு; ப்ரகாஶயதி—--ஒளிருகிறது; தத்—--அது; பரம்----உன்னத உரு பொருள்

Translation

BG 5.16: ஆனால் தெய்வீக அறிவால் அறியாமையை வென்றவர்களுக்கு சூரியன் உதிக்கும்போது எல்லாவற்றையும் ஒளிரச் செய்வது போல, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உன்னதமான பொருள் வெளிப்படுகிறது.

Commentary

இரவின் இருளை நீக்குவதில் சூரியனின் சக்தி ஒப்பற்றது. ராமாயணம் கூறுகிறது:

ராகா11தி 1 ஷோட3ஸ வஹீன் தா1ராக1ன ஸமுதா3யி

ஸக1ல கி 3ரின்ஹ ​​த3வ லாயிய பி 3னு ரபி 3 ராதி 1 ந ஜாயி

‘முழு நிலவின் ஒருங்கிணைந்த ஒளி இருந்தபோதிலும், மேகமற்ற வானத்தில் இரவு மேகங்கள் இல்லாத நட்சத்திரங்கள் உள்ளபோதிலும் இரவின் இருள் அகலுவது இல்லை. ஆனால் சூரியன் உதிக்கும் தருணத்தில், இரவு அவசரமாக வெளியேறுகிறது.’ மிகவும் பிரகாசமான சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருளால் தாக்கு பிடிக்க முடியாது. அறியாமை இருளை அகற்றுவதில் கடவுளின் தெய்வீக அறிவின் ஒளி அதற்கு ஒத்த விளைவை கொண்டுள்ளது.

மாயைகளை உருவாக்குவதற்கு இருள் பொறுப்பு. திரையரங்கத்தின் இருளில், திரையில் விழும் வெளிச்சம் யதார்த்தத்தின் மாயையை உருவாக்கி, மக்கள் அதைப் பார்ப்பதில் மூழ்கிவிடுகிறார்கள். இருப்பினும், திரையரங்கில் உள்ள ப்ரதான விளக்குகள் எரியும்போது, ​​மாயை கலைந்து, மக்கள் ஒரு திரைப்படத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று உணர்கிறார்கள். அவ்வாறே, அறியாமை இருளில், நாம் உடலுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம், மேலும் நம் செயல்களைச் செய்பவர்களாகவும் அனுபவிப்பவர்களாகவும் கருதுகிறோம். கடவுளின் அறிவின் ஒளி பிரகாசமாக பிரகாசிக்கத் தொடங்கும் போது, ​​மாயை அவசரமாக பின்வாங்குகிறது, மேலும் ஆன்மா தனது உண்மையான ஆன்மீக அடையாளத்திற்கு விழித்தெழுகிறது; அது ஒன்பது வாயில்கள் நகரத்தில் தொடர்ந்து வாழ்ந்தாலும் கூட. கடவுளின் ஜட சக்தி (அவித்3யா சக்தி) அதை இருளில் மூடியதால் ஆன்மா மாயையில் விழுந்தது. கடவுளின் ஆன்மீக ஆற்றல் (வித்யா சக்தி) அறிவின் ஒளியால் அதை ஒளிரச் செய்யும் போது மாயை அகற்றப்படுகிறது.

Watch Swamiji Explain This Verse