யத்1ரோப1ரமதே1 சி1த்1த1ம் நிருத்3த4ம் யோக3ஸேவயா |
யத்1ர சை1வாத்1மனாத்1மானம் ப1ஶ்யன்னாத்1மனி து1ஷ்யதி1 ||20||
யத்ர--—எப்பொழுது; உபரமதே--—உள்மகிழ்வுடன் இருக்கிறார்; சித்தம்--—மனம்; நிருத்தம்--—கட்டுப்படுத்தப்பட்ட; யோக-ஸேவயா—--யோகா பயிற்சியால்; யத்ர—--எப்பொழுது; ச--—மற்றும்; ஏவ--—நிச்சயமாக; ஆத்மனா--—தூய்மைப்படுத்தப்பட்ட மனதின் மூலம்; ஆத்மானம்—--ஆன்மாவை; பஷ்யன்—--பாரத்து; ஆத்மனி--—தன்னிடத்தில்; துஷ்யதி--—திருப்தியுடன் இருக்கிறார்
Translation
BG 6.20: யோகப் பயிற்சியால் மனம், பொருள் செயல்களில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு, அமைதியடையும் போது, யோகி தூய்மையான மனதின் மூலம் ஆன்மாவைப் பார்க்க முடியும், மேலும் அவர் உள் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடைகிறார்.
Commentary
தியானத்தின் செயல்முறை மற்றும் அதன் தனிச்சிறப்பு நிலையை விவரித்த பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது அத்தகைய முயற்சியின் முடிவுகளை வெளிப்படுத்துகிறார். மனம் தூய்மையடைந்தால், உடல், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றிலிருந்து தன்னை (சுயத்தை) வேறுபடுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, ஒரு டம்ளரில் சேற்று நீர் இருந்தால், அதை நம்மால் பார்க்க முடியாது. இருப்பினும், நாம் தண்ணீரில் படிகாரத்தைப் போட்டால், சேறு படிந்து, தண்ணீர் தெளிவடைகிறது. அதேபோல், மனமும் அசுத்தமாக இருக்கும்போது, அது ஆன்மாவைப் பற்றிய உணர்வை மறைக்கிறது, மேலும் ஆத்மாவைப் பற்றிய எந்த ஒரு வேத அறிவும் தத்துவார்த்த மட்டத்தில் மட்டுமே இருக்கும். ஆனால் மனம் தூய்மையாகும்போது ஆன்மா நேரடியாக உணர்தல் மூலம் உணரப்படுகிறது.