Bhagavad Gita: Chapter 6, Verse 21

ஸுக2மாத்1யன்தி11ம் யத்11த்3பு3த்3தி4க்3ராஹ்யமதீ1ந்த்3ரியம் |

வேத்1தி1 யத்1ர ந சை1வாயம் ஸ்தி21ஶ்ச1லதி11த்1த்1வத1: ||21||

ஸுகம்--—மகிழ்ச்சி; ஆத்யந்திகம்--—வரம்பற்ற; யத்--—எது; தத்—--அது; புத்தி—--புத்தி; க்ராஹ்யம்--—கிரகிக்க; அதீந்த்ரியம்—--புலன்களைக் கடந்து; வேத்தி—-அறிந்து; யத்ர--—அதில்; ந—ஒருபோதும் இல்லை; ச--—மற்றும்; ஏவ--—நிச்சயமாக; அயம்—அவன்; ஸ்திதஹ--—நிலைத்திருக்கும்;-சலதி--—விலகுவது; தத்வதஹ--—நித்திய உண்மை

Translation

BG 6.21: ஸமாதி என்று அழைக்கப்படும் யோகத்தின் அந்த மகிழ்ச்சியான நிலையில், ஒருவன் உன்னதமான தெய்வீக பேரின்பத்தை அனுபவிக்கிறான், அந்த நிலையில் நிலைத்து இருக்கும் பொழுது, நித்திய சத்தியத்திலிருந்து ஒருவன் ஒருபோதும் விலகுவதில்லை.

Commentary

நாம் பேரின்பக் கடலான கடவுளின் சிறுபகுதிகள் ஆனதால் பேரின்பத்திற்கான ஏக்கம் ஆன்மாவின் உள்ளார்ந்த இயல்பு. இதை நிலை நிறுத்தும் வேத ஶாஸ்திரங்களில் இருந்து பல மேற்கோள்கள் வசனம் 5.21 இல் குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லையற்ற ஆனந்தக் கடலான கடவுளின் இயல்பை வெளிப்படுத்தும் மேலும் சில மேற்கோள்கள் இங்கே:

ரஸோ வை ஸஹ ரஸம் ஹ்யேவாயம் லப்44வா நந்தீ34வதி1

(தை1த்1தி1ரிய உபநி1ஷத3ம் (2.7)

‘கடவுள் அவரே ஆனந்தம் ; தனிப்பட்ட ஆன்மா அவரை அடைவதில் ஆனந்தமாகிறது.’

ஆனந்த3மயோ ‘ப்4யா ஸாத்1 (ப்1ரஹ்ம ஸுத்தி1ரம் (1.1.12)

‘கடவுள் ஆனந்தத்தின் உண்மையான வடிவம்.’

ஸத்1ய ஞானானந்தா1னந்த3 மாத்1ரைக1 ரஸ மூர்த்11யஹ

(பா43வத1ம் 10.13.54)

'கடவுளின் தெய்வீக வடிவம் நித்தியம், அறிவு மற்றும் பேரின்பம் ஆகியவற்றால் ஆனது. ‘

ஆனந்த3 ஸிந்து4 மத்3ய த1வ வாஸா, பி 3னு ஜானே க11 மரஸி ப்1யாஸா

(ராமாயணம்)

‘ஆனந்தக் கடலாகிய கடவுள் உங்களுக்குள் அமர்ந்திருக்கிறார். அவரை அறியாமல், மகிழ்ச்சிக்கான உங்கள் தாகம் எப்படித் தணியும்?’

நாம் மிக நீண்ட காலமாக பரிபூரண பேரின்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம், நாம் செய்யும் அனைத்தும் அந்த ஆனந்தத்தின் தேடலில் செய்யப்படுவதாகும். இருப்பினும், மனமும் புலன்களும், உண்மையான பேரின்பத்தின் நிழலான பிரதிபலிப்பை மட்டுமே உணர்கின்றன. இந்த சிற்றின்ப திருப்தியானது, கடவுளின் எல்லையற்ற பேரின்பத்திற்காக ஏங்கும் ஆன்மாவின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுகிறது.

மனம் இறைவனுடன் இணைந்திருக்கும் போது, ​​ஆன்மா புலன்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட விவரிக்க முடியாத மற்றும் உன்னதமான பேரின்பத்தை அனுபவிக்கிறது. இந்த நிலை வேத சாஸ்திரங்களில் சமாதி என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி முனிவர் கூறுகிறார்:

ஸமாதி4ஸித்3தி4ரீஶ்வரப்ர1ணிதா4னாத்1 (ப11ஞ்சலி யோக்33ர்ஶன் 2.45)

‘ஸமாதியில் வெற்றி பெற, ஒப்புயர்வற்ற கடவுளிடம் சரணடையுங்கள்.'

ஸமாதி நிலையில், முழுமையான திருப்தியையும், மனநிறைவையும் அனுபவிக்கும் நிலையில், ஆன்மாவுக்கு ஆசைப்படுவதற்கு எதுவும் மிச்சமில்லை; இதனால் ஒரு கணம் கூட முழுமையான சத்தியத்தில் இருந்து விலகாமல் உறுதியாக நிலைபெறுகிறது.