Bhagavad Gita: Chapter 6, Verse 8

ஞானவிஞ்ஞானத்1ருப்1தா1த்1மா கூ11ஸ்தோ2 விஜிதே1ன்த்3ரிய: |

யுக்1த இத்1யுச்1யதே1 யோகீ3 ஸமலோஷ்டா1ஶ்மகா1ஞ்ச1ன: ||8||

ஞான—--அறிவு; விஞ்ஞான----உணரப்பட்ட அறிவு, ஞானத்தை உணர்ந்து; த்ரிப்த ஆத்மா—--முழு திருப்தி அடைந்தவர்; கூட-ஸ்தஹ—--குழப்பமில்லாத; விஜித-இந்த்ரியஹ----புலன்களை வென்றவர்; யுக்தஹ—--உயர்ந்த பரமாத்மாவுடன் இடை-விடாது தொடர்பு கொண்டவர்; இதி--—இவ்வாறு; உச்யதே--—கூறப்படுகிறார்; யோகி--—ஒரு யோகி; ஸம--—சமமாக பார்க்கிறார்; லோஷ்டர--—கூழாங்கற்ககளையும்; அஷ்ம—--கற்களையும்; காஞ்சனஹ--—தங்கத்தையும்

Translation

BG 6.8: அறிவு மற்றும் பாகுபாடுகளால் திருப்தியடைந்து, தங்கள் புலன்களை வென்ற யோகிகள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இடையூறு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் அழுக்கு, கற்கள், மற்றும் தங்கம் அனைத்தையும் ஒரே மாதிரியாகப் பார்க்கிறார்கள்.

Commentary

ஞானம் அல்லது அறிவு என்பது குருவிடம் கேட்பதன் மூலமும், வேதங்களைப் படிப்பதன் மூலமும் பெறப்பட்ட தத்துவார்த்த புரிதல் ஆகும். விஞ்ஞானம் என்பது அந்த அறிவை அக விழிப்புணர்வாக உணர்ந்து, உள்ளிருந்து உதயமான ஞானம். மேம்பட்ட யோகியின் புத்தி ஞானம் மற்றும் விஞ்ஞானம் இரண்டாலும் ஒளிர்கிறது. இந்த ஞானத்துடன், யோகி அனைத்து ஜடப் பொருட்களையும் ஜட ஆற்றலின் மாற்றங்களாகப் பார்க்கிறார். அத்தகைய யோகி, அந்தப் பொருள்களின் சுயமாக ஈர்க்கும் தன்மையின் அடிப்படையில் பொருள்களை வேறுபடுத்துவதில்லை. ஞானம் பெற்ற யோகி எல்லாவற்றையும் கடவுளுடனான உறவில் பார்க்கிறார். ஜட ஆற்றல் இறைவனுக்குச் சொந்தமானது என்பதால், அனைத்தும் அவருடைய சேவைக்காகவே உள்ளன.

கூ11ஸ்த2 என்ற சொல், பொருள் ஆற்றலுடன் தொடர்பு கொள்ளும் புலன்களின் ஏற்ற இறக்கமான உணர்வுகளிலிருந்து மனதைத் விலக்கி, இன்பமான சூழ்நிலைகளைத் தேடாமலும், விரும்பத்தகாதவற்றைத் தவிர்க்காமலும் இருப்பவரைக் குறிக்கிறது. விஜிதே1ந்தி3ரிய புலன்களை அடக்கிய வரை குறிக்கிறது. யுக்த1 என்ற சொல்லுக்கு ஒப்புயர்வற்ற கடவுளுடன் இடைவிடாது தொடர்பு கொண்டவர் என்று பொருள். அத்தகைய நபர் கடவுளின் தெய்வீக பேரின்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறார், எனவே உணர்ந்த அறிவின் மூலம் முழு திருப்தி அடைந்த அல்லது ஒரு த்ரிப்தாத்மாவாக ஆகிறாரர்.