Bhagavad Gita: Chapter 7, Verse 3

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு க1ஶ்சித்3யத1தி1 ஸித்34யே |

யத1தா1மபி ஸித்3தா4னாம் க1ஶ்சின்மாம் வேத்2தி21த்1த்1வத1: ||3||

மனுஷ்யாணாம்--—மனிதர்களின்; ஸஹஸ்ரேஷு--—பல ஆயிரங்களில்; கஶ்சித்--—யாரோ ஒருவரே; யததி--—பாடுபடுகிறார்; ஸித்தயே--—முழுமைக்காக; யததாம்--—முயற்சி செய்பவர்களில்; அபி-—கூட; ஸித்தானாம்--—முழுமையை அடைந்தவர்களின்; கஶ்சித்—--யாரோ ஒருவரே; மாம்—--என்னை; வேத்தி--—அறிகிறான்; தத்வதஹ---உண்மையில்

Translation

BG 7.3: மனிதப் பிறப்பைப் பெற்றவர்களில் ஒரு சிலர் மட்டுமே முழுமை பெற முயல்கிறார்கள். ஆயிரக்கணக்கான பரிபூரண ஆன்மாக்களில் கூட, என்னுடைய பிரதானமான நிலையையும், தெய்வீக மகிமையையும் அறிந்தவர்கள் மிகவும் அரிதானவர்கள்.

Commentary

இந்த வசனத்தில் ஸித்3தி4 என்ற சொல் பரிபூரணத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பல உட்பொருள்கள் மற்றும் அர்த்தங்களுடன் ஏற்றப்பட்ட வார்த்தை. சமஸ்கிருத அகராதியிலிருந்து ஸித்தி என்ற வார்த்தையின் சில அர்த்தங்கள் : இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை அடைதல், சாதனை, வெற்றி, செயல்திறன், நிறைவேற்றம், ஒரு பிரச்சனையின் தீர்வு, சமையல் அல்லது ஒரு பணியை முடித்தல், குணப்படுத்துதல், குறிவைத்தல், முதிர்ச்சியடைதல், உயர்ந்த மகிழ்ச்சி, பேரின்பம், அசாதாரண திறன் அல்லது இயல்பான அறிவாற்றல், முழுமை. ஸ்ரீ கிருஷ்ணர் ஆன்மீகப் பாதையில் முழுமைக்காக சித்தி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், மேலும், 'அர்ஜுனா, எண்ணற்ற ஆத்மாக்களில்,ஒரு சிறிய விகிதம் மட்டுமே மனித உருவத்தை பெற்றுள்ளது. மனிதப் பிறப்பைப் பெற்றவர்களில் ஒரு சிலர் மட்டுமே முழுமை பெற முயல்கிறார்கள். ஆயிரக்கணக்கான பரிபூரண ஆன்மாக்களில் கூட, என்னுடைய பிரதானமான நிலையையும், தெய்வீக மகிமையையும் அறிந்தவர்கள் மிகவும் அரிதானவர்கள.’

ஆன்மிகப் பயிற்சிகளில் முழுமையை அடைந்த ஆன்மாக்கள் ஏன் சத்தியத்தில் கடவுளை அறியவில்லை? ஏனென்றால், பக்தி (இறைவனிடம் அன்பான பக்தி) இல்லாமல் அவரை அறியவோ உணரவோ முடியாது. கர்மம், ஞானம், ஹட யோகம் அல்லது பிற நுட்பங்களைக் கடைப்பிடிக்கும் ஆன்மீக ஆர்வலர்கள், பக்தியில் ஈடுபடாமல், கடவுளை அறிய முடியாது. பகவத் கீதையிலேயே, ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உண்மையைப் பலமுறை வலியுறுத்துகிறார்:

‘அவர் எங்கும் வியாபித்திருந்தாலும், எல்லா ஜீவராசிகளும் அவரில் நிலைத்திருந்தாலும், பக்தியின் மூலமாகவே மட்டுமே அவரை அறிய முடியும்.’ 8.22

அர்ஜுனா, கலப்படமில்லாத பக்தியினால் மட்டுமே உன் முன் நின்று கொண்டிருக்கிற என்னை நான் உள்ளது போலவே அறிய முடியும். எதிரிகளை எரியூட்டு பவனே, இதன்மூலம் என் தெய்வீக தரிசனம் திரை பெற்றவுடன் ஒருவர் என்னுடன் ஐக்கியமாக முடியும்.’ 11.54.

‘ஆகவே, தங்கள் ஆன்மீக பயிற்சியில் பக்தியைச் சேர்க்காத ஆன்மீக ஆர்வலர்களின் கடவுளைப் பற்றிய புரிதல் செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாட்டு அறிவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையான உண்மையைப் பற்றிய அனுபவ அறிவை அவர்கள் பெறுவதில்லை.’ 18.55

பல மனிதர்களில் ஒருவர் அவரை சத்தியத்தில் அறிவார் என்று கூறிய ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது அவருடைய ஆற்றல்களின் பொருள் மற்றும் ஆன்மீக பரிமாணங்களை விளக்குகிறார். அவர் முதலில் அபார பிரகிருதியை அறிமுகப்படுத்துகிறார், இது ஒரு தாழ்ந்த ஆனால் கடவுளின் ஆற்றலான பொருள் ஆற்றலின் செயற்களம் ஆகும்.