அத்தியாயம் 8: அக்ஷர ப்ரஹ்ம யோகம்

நித்திய கடவுளின் யோகம்

இந்த அத்தியாயம் உபநிடதங்களில் இன்னும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள பல முக்கியமான விதிமுறைகள் மற்றும் கருத்துக்களை சுருக்கமாக விளக்குகிறது. மரணத்திற்குப் பிறகு ஆன்மாவின் இலக்கை நிர்ணயிக்கும் காரணிகளையும் இது விவரிக்கிறது. உடலை விட்டுப் பிரியும் பொழுது இறைவனை நினைவு செய்ய முடிந்தால், நாம் நிச்சயமாக அவரை அடைவோம். எனவே, நமது அன்றாட வேலைகளை செய்யும் பொழுது, ​​அவரைப் பற்றி எப்பொழுதும் சிந்திக்க வேண்டும். அவருடைய, தன்மைகள், தேவ சுபாவங்கள் மற்றும் நற்பண்புகளை நினைத்து நாம் அவரை நினைவு கூறலாம். அவருடைய நாமங்களை உச்சரிப்பதன் மூலம் நாம் உறுதியான ஒருமுக யோகச் சிந்தனையை கடைப்பிடிக்க வேண்டும். பிரத்தியேகமான பக்தியின் மூலம் நம் மனதை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்பொழுது, ​​இந்த பொருள் பரிமாணத்தைத் தாண்டி ஆன்மீக துறைக்குச் செல்வோம்.

 

அத்தியாயம் பின்னர், பொருள் துறையில் இருக்கும் பல்வேறு இருப்பிடடங்களைப் பற்றி பேசுகிறது. படைப்பின் சுழற்சியில், இந்த உறைவிடங்களும் அவற்றில் உள்ள பல உயிரினங்களும் தோன்றி, கலைக்கும் நேரத்தில் மீண்டும் கடவுளில் உள்வாங்கும் செயல்முறையை இது விளக்குகிறது. இருப்பினும், இந்த வெளிப்படையான மற்றும் வெளிப்படுத்தப்படாத படைப்புக்கு அப்பாற்பட்டது கடவுளின் தெய்வீக இருப்பிடமாகும். ஒளியின் பாதையைப் பின்பற்றுபவர்கள் இறுதியில் தெய்வீக இருப்பிடத்தை அடைகிறார்கள், இந்த மரண உலகத்திற்கு ஒருபொழுதும் திரும்ப மாட்டார்கள், அதே நேரத்தில், இருளின் பாதையைப் பின்பற்றுபவர்கள் முடிவில்லாத பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு சுழற்சியில் இடம் பெயர்கிறார்கள்.

அர்ஜுனன் கூறினார்: ஓ ஒப்புயர்வற்றவரே, ப்ரஹ்மம் என்றால் என்ன? (முழு உண்மை), அத்யாத்மா என்றால் என்ன?, கர்மா என்றால் என்ன? அதிபூதம் என்று கூறப்படுவது எது, அதிதெய்வம் என்று கூறப்படுவது யார்? உடலில் அதியஞ்ஞன் யார், அவர் எவ்வாறு அதியஞ்ஞன்? ஓ கிருஷ்ணா, உறுதியான மனம் கொண்டவர்களால் மரணத்தின் பொழுது நீங்கள் எப்படி அறியப்படுவீர்கள்?

பகவான் கூறினார்: அழியாத உன்னதமான பொருள் ப்ரஹ்மன் என்று அழைக்கப்படுகிறது; ஒருவரின் சுயமே அத்யாத்மா என்று அழைக்கப்படுகிறது. உயிரினங்களின் பொருள் ஆளுமை மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பான செயல்கள் கர்மா அல்லது பலனளிக்கும் நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஓ தேசோரூபம் கொண்ட ஆத்மாக்களில் சிறந்தவரே, தொடர்ந்து மாறிவரும் உடல் வெளிப்பாடு அதிபூதம் எனப்படும்; இந்த படைப்பில் தேவலோக கடவுள்களை தலைமை தாங்கும் கடவுளின் உலகளாவிய வடிவம் அதிதெய்வம் என்று அழைக்கப்படுகிறது; ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிக்கும் நான், அதியஞ்ஞன் அல்லது அனைத்து தியாகங்களின் இறைவன் என்று அழைக்கப்படுகிறேன்.

மரணத்தின் போது என்னை நினைத்து உடலை துறப்பவர்கள் என்னிடம் வருவார்கள். இதில் நிச்சயமாக எந்த சந்தேகமும் இல்லை.

குந்தியின் மகனே, ஒருவர் இறப்பின் பொழுது உடலைத் துறக்கும் நேரத்தில் எதனை நினைவு செய்கிறாரோ, அந்த நிலையை எப்பொழுதும் அத்தகைய சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறார்.

ஆதலால், எப்பொழுதும் என்னை நினைவு செய்து, போர் செய்யும் கடமையையும் செய். மனமும் புத்தியும் என்னிடம் சரணடைந்தால், நீ நிச்சயமாக என்னை அடைவாய்; இதில், எந்த சந்தேகமும் இல்லை.

ஓ பார்த், பயிற்சியின் மூலம், உன்னத தெய்வீக புருஷனான என்னை நினைவு செய்வதில் நீ தொடர்ந்து மனதை ​​விலகாமல் ஈடுபடுத்தும்பொழுது, நீ நிச்சயமாக என்னை அடைவாய்.

கடவுள் ஸர்வ ஞானமும் பெற்றவர், மிகவும் பழமையானவர், கட்டுப்படுத்துபவர், நுட்பமானதை விட நுட்பமானவர், அவர் அனைவரின் ஆதரவு, மற்றும் கற்பனை செய்ய முடியாத தெய்வீக வடிவத்தை உடையவர்; அவர் சூரியனை விட பிரகாசமானவர் மற்றும் அனைத்து அறியாமை இருளுக்கும் அப்பாற்பட்டவர். எவரொருவர், மரணத்தின் சமயம் யோகப் பயிற்சியால் அசையாத மனதுடன் புருவங்களுக்கு இடையே பிராணனை (உயிர் காற்றை) நிலைநிருத்தி, மிகுந்த பக்தியுடன் தெய்வீகப் பெருமானை நிலையாக நினைவு கூறுவாரோ, அவர் கடவுளை நிச்சயமாக அடைவார்.

வேத அறிஞர்கள் அவரை அழியாதவர் என்று வர்ணிக்கின்றனர்; பெரிய துறவிகள் ப்ரஹ்மச்சரியத்தின் சபதத்தை கடைப்பிடித்து, உலக இன்பங்களைத் துறந்து அவருக்குள் நுழைகிறார்கள். அந்த இலக்கை அடையும் பாதையை இப்பொழுது சுருக்கமாக உனக்கு விளக்குகிறேன்.

உடலின் அனைத்து வாயில்களையும் அடக்கி, மனதை இதயப் பகுதியில் நிலைநிருத்தி, உயிர் மூச்சை தலைக்கு இழுத்து, உறுதியான யோகச் செறிவில் நிலைபெற வேண்டும்.

பரம புருஷனாகிய என்னை நினைவு செய்து, ஓம் என்ற எழுத்தை உச்சரித்துக்கொண்டே உடலை விட்டுப் பிரிந்தவன், உன்னதமான இலக்கை அடைவான்.

ஓ பார்த்தா, எப்பொழுதும் என்னைப் பற்றியே பிரத்யேக பக்தியுடன் நினைக்கும் அந்த யோகிகளுக்கு, அவர்கள் தொடர்ந்து முழுமையாக என்னில் ஈடுபடுவதால் என்னை எளிதில் அடைய முடியும்.

என்னை அடைந்த பிறகு, பெரிய ஆத்மாக்கள் இந்த உலகில் மறுபிறப்பிற்க்கு உட்பட்டவர்கள் அல்ல, அது நிலையற்றது மற்றும் துன்பம் நிறைந்தது, ஏனென்றால் அவர்கள் உயர்ந்த பரிபூரணத்தை அடைந்துள்ளனர்.

ஓ அர்ஜுனா, இந்த பொருள் சிருஷ்டியின் அனைத்து உலகங்களிலும், ப்ரஹ்மாவின் உயர்ந்த இருப்பிடம் வரை, நீ மறுபிறப்புக்கு உட்பட்டு இருப்பாய். ஆனால், குந்தியின் மகனே, என்னுடைய இருப்பிடத்தை அடைந்தவுடன், மறுபிறப்பு இல்லை.

ப்3ரஹ்மாவின் ஒரு நாள் (கல்பம்) ஆயிரம் சுழற்சிகள் நீடிக்கும். நான்கு யுகங்கள் (மஹாயுகம்) ஆயிரம் சுழற்சிகள் நீடிக்கும், மேலும் அவரது இரவும் அதே காலத்திற்கு நீடிக்கிறது. இதை அறிந்த ஞானிகள் இரவும் பகலும் பற்றிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.

ப்3ரஹ்மாவின் நாளின்தோற்றத்தில், அனைத்து உயிரினங்களும் வெளிப்படையான மூலத்திலிருந்து வெளிப்படுகின்றன. மேலும் அவரது இரவில், அனைத்து உடலமைந்த உயிரினங்களும் மீண்டும் அவற்றின் வெளிப்படுத்தப்படாத மூலத்தில் ஒன்றிணைகின்றன.

ப்ரஹ்மாவின் வருகையுடன் பல உயிரினங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன, மேலும் அண்ட இரவின் வருகையில் மீண்டும் உள் வாங்கப்படுகின்றன, அடுத்த அண்ட நாளின் வருகையில் தானாகவே வெளிப்படும்.

இந்த வெளிப்படுத்தப்பட்ட மற்றும், இன்னும் வெளிப்படுத்தப்படாத படைப்பிற்கு அப்பாற்பட்ட வெளிப்படுத்தப்படாத நித்திய பரிமாணம் உள்ளது. மற்ற அனைத்தும் முடிவுறும் பொழுதிலும் இந்த நித்திய பரிமாணத்தின் ஆதிக்கம் நின்றுவிடுவதில்லை.

அந்த வெளிப்படுத்தப்படாத பரிமாணமே மிக உயர்ந்த இலக்காகும், அதை அடைந்தவுடன், இந்த மரண உலகத்திற்கு ஒருவர் திரும்புவதில்லை. அதுவே எனது உயர்ந்த இருப்பிடம்.

ஒப்புயர்வற்ற எல்லோரிலும் மேலான தெய்வீக புருஷர் இருப்பில் உள்ள அனைத்தையும் விட மேலானவர். அவர் எங்கும் நிறைந்திருந்தாலும், எல்லா உயிர்களும் அவரில் அமைந்திருந்தாலும், பக்தியின் மூலம் மட்டுமே அவரை அறிய முடியும்.

பரத வம்சத்தினரின் சிறந்தவனே, இவ்வுலகை விட்டுச் செல்வதற்கான பல்வேறு வழிகளை நான் இப்பொழுது விவரிக்கிறேன், அவற்றில் ஒன்று விடுதலைக்கும் மற்றொன்று மறுபிறப்புக்கும் வழிவகுக்கும். பரம ப்ரஹ்மனை அறிந்து, மற்றும் சூரியனின் வடக்குப் பாதையின் ஆறு மாதங்களிலும், சந்திரனின் பிரகாசமான பதினைந்து நாட்களிலும், பகலின் பிரகாசமான பகுதியிலும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லுபவர்கள், உயர்ந்த இலக்கை அடைகிறார்கள். சூரியனின் தென்கோடியில் ஆறுமாதங்கள், சந்திரனின் இருண்ட பதினைந்து நாட்கள், புகைக்காலம், இரவு ஆகிய ஆறுமாதங்களில் வேதநெறிகளை கடைப்பிடிப்பவர்கள் தேவலோக உறைவிடங்களை அடைகிறார்கள். தேவலோக இன்பங்களை அனுபவித்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார்கள். இந்த இரண்டு, பிரகாசமான மற்றும் இருண்ட பாதைகள், எப்பொழுதும் இந்த உலகில் உள்ளன. ஒளியின் வழி விடுதலைக்கும், இருளின் வழி மறுபிறப்புக்கும் வழிவகுக்கும்.

இந்த இரண்டு பாதைகளின் ரகசியத்தை அறிந்த யோகிகள், ஓ பார்தா, ஒருபொழுதும் திகைப்பதில்லை. எனவே, எல்லா நேரங்களிலும் யோகத்தில் (கடவுளோடு ஐக்கியமாக) நிலைத்திரு.

இந்த ரகசியத்தை அறிந்த யோகிகள், வேதச் சடங்குகள், வேதங்களைப் படிப்பது, யாகங்கள் செய்தல், துறவுகள் மற்றும் தானங்கள் ஆகியவற்றின் பலன்களுக்கு அப்பாற்பட்ட தகுதியைப் பெறுகிறார்கள். அத்தகைய யோகிகள் உயர்ந்த இருப்பிடத்தை அடைகிறார்கள்.