Bhagavad Gita: Chapter 8, Verse 15

மாமுபே1த்1ய பு1னர்ஜன்ம து2:கா2லயமஶாஶ்வத1ம் |

நாப்1னுவன்தி1 மஹாத்1மான: ஸன்ஸித்3தி4ம் ப1ரமாம் க3தா1: ||15||

மாம்--—என்னை; உபேத்ய--—அடைந்த பின்; புனஹ--—மீண்டும்; ஜன்ம--—பிறப்பு; துஹ்க—ஆலயம்--—துன்பங்கள் நிறைந்த இடத்தை; அஶாஶ்வதம்--—தற்காலிகமானதை; ந—--ஒருபொழுதும் இல்லை ஆப்னுவந்தி--—அடைவார்கள்; மஹா—ஆத்மானஹ----பேராத்மாக்கள்; ஸந்சித்திம்--—முழுமையை; பரமாம்--—உயர்ந்த; கதாஹா——அடைந்து விட்டனர்

Translation

BG 8.15: என்னை அடைந்த பிறகு, பெரிய ஆத்மாக்கள் இந்த உலகில் மறுபிறப்பிற்க்கு உட்பட்டவர்கள் அல்ல, அது நிலையற்றது மற்றும் துன்பம் நிறைந்தது, ஏனென்றால் அவர்கள் உயர்ந்த பரிபூரணத்தை அடைந்துள்ளனர்.

Commentary

இறைவனை அடைவதன் பலன் என்ன? கடவுளை-உணர்ந்தவர்கள் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு கடவுளின் தெய்வீக இருப்பிடத்தை அடைகிறார்கள். இதனால், துன்பம் நிறைந்த இந்த ஜடவுலகில் அவர்கள் மீண்டும் பிறக்க வேண்டியதில்லை. பிறப்பின் வலிமிகுந்த செயல்முறையை நாம் அனுபவிக்கிறோம், உதவியின்றி அழுகிறோம். பின்னர் குழந்தைகளாகிய நமக்கு வெளிப்படுத்த இயலாத தேவைகள் இருப்பதால் அழுகிறோம். இளமைப் பருவத்தில், நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் உடல் ஆசைகளுடன் நாம் போராட வேண்டியுள்ளது. திருமண வாழ்க்கையில், வாழ்க்கைத் துணையின் தனித்தன்மைகளை நாம் தாங்கிக் கொள்கிறோம். முதுமை அடையும் பொழுது, ​​உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. வாழ்நாள் முழுவதும், நம் சொந்த உடலாலும், மனதாலும், மற்றவர்களின் நடத்தையாலும், மோசமான சூழலாலும் துன்பங்களை அனுபவிக்கிறோம். இறுதியாக, மரணத்தின் வலியை நாம் அனுபவிக்கிறோம்.

இந்தத் துன்பமெல்லாம் அர்த்தமற்றது அல்ல; அது கடவுளின் மகத்தான வடிவமைப்பில் ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது. பொருள் சாம்ராஜ்யம் நமது நிரந்தர வீடு அல்ல என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. நம்மைப் போன்ற கடவுளை நோக்கிப் புறப்பட்ட ஆன்மாக்களுக்கு இது சீர்திருத்தம் போன்றது. நாம் இங்கு துன்பத்தை அனுபவிக்கவில்லை என்றால், கடவுள் மீது ஆசையை வளர்த்துக் கொள்ள மாட்டோம். உதாரணமாக, நாம் நெருப்பில் கையை வைத்தால், இரண்டு விஷயங்கள் நடக்கும்- தோல் எரியத் தொடங்குகிறது, மற்றும் நியூரான்கள் மூளையில் வலியை உருவாக்குகின்றன. தோல் எரிவது ஒரு மோசமான விஷயம், ஆனால் வலியின் உணர்வு ஒரு நல்ல விஷயம். நாம் வலியை அனுபவிக்கவில்லை என்றால், நெருப்பிலிருந்து நம் கையைப் பிரித்தெடுக்க மாட்டோம், அது பெரிய சேதத்தை சந்திக்கும். வலி என்பது சரிசெய்ய வேண்டிய ஏதோ தவறு இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும், இதேபோல், ஜட உலகில் நாம் அனுபவிக்கும் வலி, நமது உணர்வு குறைபாடுள்ளது என்பதற்கான கடவுளின் சமிஞ்ஞையாகும், மேலும் நாம் ஜட உணர்வில் இருந்து கடவுளுடன் ஒன்றிணைவதை நோக்கி முன்னேற வேண்டும். இறுதியில், நாம் தேர்ந்தெடுத்த முயற்சிகளின் மூலம் நாம் நம்மை தகுதியுடையதாக ஆக்கிக்கொண்ட அனைத்தையும் பெறுகிறோம். கடவுளிடம் இருந்து திரும்பிய உணர்வுடன் இருப்பவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்தில் தொடர்ந்து சுழல்கிறார்கள்; மேலும் கடவுள் மீது பிரத்யேக பக்தியை அடைபவர்கள் அவருடைய தெய்வீக இருப்பிடத்தை அடைகிறார்கள்.