Bhagavad Gita: Chapter 8, Verse 19

பூ41க்3ராம: ஸ ஏவாயம் பூ4த்1வா பூ4த்1வா ப்1ரலீயதே1 |

ராத்1ர்யாக3மே: வஶ பா1ர்த2 ப்1ரப4வத்1யஹராக3மே‌ ||19||

பூத—கிராமஹ---உயிரினங்களின் கூட்டம்; ஸஹ---இவை; ஏவ--—நிச்சயமாக; அயம்--—இது; பூத்வா பூத்வா—திரும்பத் திரும்ப பிறவி எடுப்பது; ப்ரலீயதே-—கரைகிறது; ராத்ரி—ஆகமே--—இரவின் வருகையுடன்; அவஶஹ-—உதவியற்ற; பார்த--—ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; ப்ரபவதி--—வெளிப்படுத்தப்படுவது; அஹஹ ஆகமே--—நாளின் வருகையுடன்

Translation

BG 8.19: ப்ரஹ்மாவின் வருகையுடன் பல உயிரினங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன, மேலும் அண்ட இரவின் வருகையில் மீண்டும் உள் வாங்கப்படுகின்றன, அடுத்த அண்ட நாளின் வருகையில் தானாகவே வெளிப்படும்.

Commentary

வேதங்கள் நான்கு பிரளயங்களை (கலைப்புகளை) பட்டியலிடுகின்றன:

நித்ய பிரளயம்: இது ஆழ்ந்த உறக்கத்தின் பொழுது நடைபெரும் நமது நனவின் தினசரி கலைப்பு ஆகும்.

நைமித்திக் பிரளயம்: இது ப்ரஹ்மாவின் நாளின் முடிவில் மஹர் லோகம் வரை உள்ள அனைத்து உறைவிடங்களையும் கலைப்பதாகும். அந்த நேரத்தில், இந்த உறைவிடங்களில் வசிக்கும் ஆன்மாக்கள் வெளிப்படாது. அவர்கள் விஷ்ணுவின் உடலில் இடைநிருத்தப்பட்ட நிலையில் வசிக்கிறார்கள். மீண்டும், ப்ரஹ்மா இந்த லோகங்களை உருவாக்கும்பொழுது, ​​அவர்கள் தங்கள் கடந்தகால கர்மங்களின்படி பிறக்கிறார்கள்.

மஹா பிரளயம்: இது ப்ரஹ்மாவின் ஆயுட்காலத்தின் முடிவில் பிரபஞ்சம் முழுவதும் கரைவது. இந்த நேரத்தில், ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் மகா விஷ்ணுவின் உடலில் இடைநிருத்தப்பட்ட அசைவூட்ட நிலைக்குச் செல்கின்றன. அவற்றின் மொத்த (ஸ்தூல) மற்றும் நுட்பமான (ஸுக்ஷ்ம) உடல்கள் (ஶரீர்) கரைந்துவிடும், ஆனால் காரண உடல் (காரண் ஶரீர்) எஞ்சியுள்ளது. சிருஷ்டியின் அடுத்த சுழற்சி நிகழும்பொழுது, ​​அவர்கள் தங்கள் காரண உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் ஸம்ஸ்காரங்கள் மற்றும் கர்மாக்களின் படி மீண்டும் பிறக்கிறார்கள்.​​

ஆத்யந்திக் பிரளயம்: ஆன்மா இறுதியாக கடவுளை அடையும் பொழுது, ​​அது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறது. ஆத்யந்திக் பிரளய என்பது எண்ணற்ற வாழ்நாட்களாக ஆத்மாவை தனது கட்டுக்குள் வைத்திருந்த மாயையின் பிடியிலிருந்து விடுதலை பெருவது.