Bhagavad Gita: Chapter 8, Verse 20

1ரஸ்த1ஸ்மாத்1து1 பா4வோ‌‌ன்யோவ்யக்1தோ1வ்யக்1தா1த்1ஸனாத1ன: ‌ |

ய: ஸ ஸர்வேஷு பூ4தே1ஷு நஶ்யத்1ஸு ந வினஶ்யதி1 ||20||

பரஹ---ஆழ்நிலை; தஸ்மாத்—அதை விட; து—-ஆனால்; பாவஹ-—படைப்பு; அன்யஹ-—மற்றொன்று; அவ்யக்தஹ-—வெளிப்படாத; அவ்யக்தாத்--—வெளிப்படாதலிருந்து; ஸனாதனஹ-—நித்தியமான; யஹ-—யார்; ஸஹ-—அந்த; ஸர்வேஷு--—அனைத்து; பூதேஷு--—உயிரினங்களில்; நஶ்யத்ஸு--—முடிவுற்ற போதிலும்; ந--—இல்லை வினஶ்யதி----நின்றுவிடுவது

Translation

BG 8.20: இந்த வெளிப்படுத்தப்பட்ட மற்றும், இன்னும் வெளிப்படுத்தப்படாத படைப்பிற்கு அப்பாற்பட்ட வெளிப்படுத்தப்படாத நித்திய பரிமாணம் உள்ளது. மற்ற அனைத்தும் முடிவுறும் பொழுதிலும் இந்த நித்திய பரிமாணத்தின் ஆதிக்கம் நின்றுவிடுவதில்லை.

Commentary

ஜட உலகங்கள் மற்றும் அவற்றின் நிலையற்ற தன்மை பற்றிய முறைப்பட்ட அறிக்கையை முடித்த பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் ஆன்மீக பரிமாணத்தைப் பற்றி பேசுகிறார். இது பொருள் ஆற்றலின் எல்லைக்கு அப்பாற்பட்டது மற்றும் கடவுளின் ஆன்மீக யோகமாய ஆற்றலால் உருவாக்கப்பட்டது. அனைத்து பொருள் உலகங்களும் அழியும் பொழுது அது அழிவதில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் 10.42 வசனத்தில் ஆன்மீக பரிமாணம் கடவுளின் முழு படைப்பில் நான்கில் மூன்று பங்கு என்றும், ஜடப் பரிமாணம் மீதமுள்ள நான்கில் ஒரு பங்கு என்றும் குறிப்பிடுகிறார்.