Bhagavad Gita: Chapter 8, Verse 9-10

1விம் பு1ராணமனுஶாஸிதா1ர மணோரணீயாம்ஸமனுஸ்மரேத்3ய: |

ஸர்வஸ்ய தா4தா1ரமசி1ன்த்1யரூப1 மாதி3த்1யவர்ணம் த1மஸ: ப1ரஸ்தா1த்1 ||9||
ப்1ரயாணகா1லே மனஸாச1லேன ப4க்1த்1யா யுக்1தோ1 யோக33லேன சை1வ |
ப்4ருவோர்மத்4யே ப்1ராணமாவேஶ்ய ஸம்யக்1 ஸ த1ம் ப1ரம் பு1ருஷமுபைதி1 தி3வ்யம் ||10||

கவிம்—--கவிஞர்; புராணம்—--பழமையானது; அனுஶாஸிதாரம்--—கட்டுப்படுத்துபவர்; அணோஹோ---அணுவை விட; அணீயாந்ஸம்--—சிறியது; அனுஸ்மரேத்--—எப்பொழுதும் நினைவில்; யஹ--—யார்; ஸர்வஸ்ய—--எல்லாவற்றிலும்; தாதாரம்—--ஆதரவு; அசிந்த்ய--—நினைக்க முடியாதது; ரூபம்--—தெய்வீக வடிவம்; ஆதித்ய-வர்ணம்—--சூரியனைப் போல பிரகாசமாக; தமஸஹ--—அறியாமை இருளுக்கு; பரஸ்தாத்--—அப்பால்; ப்ரயாண-காலே—இறக்கும் நேரத்தில்; மனஸா—--மனம்; அசலேன—--நிலையாக; பக்த்யா—--மிகுந்த பக்தியுடன் நினைவு செய்தல்; யுக்தஹ—--ஒன்றுபட்ட; யோக—பலேன—--யோக சக்தியின் மூலம்; ச--—மற்றும்; ஏவ--—நிச்சயமாக; ப்ருவோஹோ—--இரண்டு புருவங்கள்; மத்யே—--இடையில்; ப்ராணம்--—உயிர் காற்றுகள்; ஆவேஶ்ய--—நிலைநிறுத்தி; ஸம்யக்—-முற்றிலும்; ஸஹ—அவர்; தம்—--அந்த; பரம் புருஷம்—--உயர்ந்த இறைவனை; உபைதி—அடைகிறார்; திவ்யம்——தெய்வீக

Translation

BG 8.9-10: கடவுள் ஸர்வ ஞானமும் பெற்றவர், மிகவும் பழமையானவர், கட்டுப்படுத்துபவர், நுட்பமானதை விட நுட்பமானவர், அவர் அனைவரின் ஆதரவு, மற்றும் கற்பனை செய்ய முடியாத தெய்வீக வடிவத்தை உடையவர்; அவர் சூரியனை விட பிரகாசமானவர் மற்றும் அனைத்து அறியாமை இருளுக்கும் அப்பாற்பட்டவர். எவரொருவர், மரணத்தின் சமயம் யோகப் பயிற்சியால் அசையாத மனதுடன் புருவங்களுக்கு இடையே பிராணனை (உயிர் காற்றை) நிலைநிருத்தி, மிகுந்த பக்தியுடன் தெய்வீகப் பெருமானை நிலையாக நினைவு கூறுவாரோ, அவர் கடவுளை நிச்சயமாக அடைவார்.

Commentary

கடவுளைப் பற்றிய தியானம் பல்வேறு வகைகளில் இருக்கலாம். ஒருவர் கடவுளின் பெயர்கள், வடிவங்கள், குணங்கள், பொழுது போக்குகள், இருப்பிடங்கள் அல்லது கூட்டாளிகளை தியானிக்க முடியும். ஒப்புயர்வற்ற தெய்வீகத்தின் இந்த வெவ்வேறு அம்சங்கள் அனைத்தும் அவரிடமிருந்து வேறுபட்டவை அல்ல. இவற்றில் ஏதேனும் ஒன்றோடு நம் மனதை இணைக்கும்பொழுது, ​​நம் மனம் தெய்வீக மண்டலத்திற்குள் வந்து தூய்மையடைகிறது. எனவே, இவற்றில் ஏதேனும் அல்லது அனைத்தையும் தியானத்தின் பொருளாக மாற்றலாம். இங்கே, தியானிக்கக்கூடிய ஒப்புயர்வற்ற கடவுளின் எட்டு குணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

1வி என்றால் கவிஞர், மெய்யுணர்வாளர், அல்லது எல்லாம் அறிந்தவர் என்று பொருள்படும். 7.26 ஆவது வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, கடவுள் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலத்தை அறிவார்.

பு1ராணம் என்றால் ஆரம்பம் இல்லாதது மற்றும் மிகவும் பழமையானது. கடவுள் ஆன்மீகம் மற்றும் பொருள் அனைத்திற்கும் பிறப்பிடம், ஆனால் அவர் எதிலிருந்தும் தோன்றியதில்லை, அவருக்கு முந்தியது எதுவுமில்லை.

அனுஶாஸிதா1ரம் என்றால் ஆட்சியாளர் என்று பொருள். ப்ரபஞ்சம் இயங்கும் சட்டங்களை உருவாக்கியவர் கடவுள்; அவர் அதன் விவகாரங்களை நேரடியாகவும், அவரால் நியமிக்கப்பட்ட தேவலோக மாயையின் மூலமாகவும் நிர்வகிக்கிறார். இதனால், அனைத்தும் அவரது ஆட்சியில் உள்ளது.

அணோரணீயான் என்றால் நுட்பமானதை விட நுட்பமானது என்று பொருள். ஆன்மா பொருளை விட நுட்பமானது, ஆனால் கடவுள் ஆன்மாவிற்குள் அமர்ந்திருக்கிறார், எனவே, அவர் அதை விட நுட்பமானவர்.

ஸர்வஸ்ய தா4தா1 என்றால் அனைத்தையும் தாங்குபவர் என்று பொருள், கடல் அதிலிருந்து வெளிப்படும் அனைத்து அலைகளுக்கும் ஆதரவாக இருப்பது போல.

அசி1ந்த்1ய ரூப1 என்றால் கருதுதற்கியலாத வடிவம். நம் மனம் ஜட வடிவங்களை மட்டுமே கருத்தில் நிறுத்த முடியும் என்பதால், கடவுள் நம் ஜட மனதின் எல்லைக்கு அப்பாற்பட்டவர். இருப்பினும், அவர் தனது அருளை வழங்கினால், அவருடைய யோகமாய சக்தியால் நம் மனம் தெய்வீக இயல்புடையது ஆகிறது மற்றும் சிந்திக்கக்கூடியதாகிறது.

ஆதி3த்1ய வர்ண என்றால் சூரியனைப் போல பிரகாசிக்கிறார்.

1மஸஹ ப1ரஸ்தா1த்1 என்றால் அறியாமை இருளுக்கு அப்பால் என்று பொருள். எப்படி சூரியன் மறைந்து விட்டதாக நமக்குத் தோன்றினாலும் அதை மேகங்களால் மறைக்க முடியாதோ அதைப்போலவே கடவுள் இந்த உலகில் ஜட சக்தியுடன் தொடர்புடன் இருந்தாலும் ஜட சக்தியால் அவரை ஒருபொழுதும் மறைக்க முடியாது.

பக்தியில், மனம் கடவுளின் வடிவங்கள், குணங்கள், பொழுதுபோக்குகள், மற்றும் பலவற்றின் தெய்வீக பண்புகளில் கவனம் செலுத்துகிறது. பக்தியை சுயமாகச் செய்யும்பொழுது, ​​அது ஸூத்344க்1தி1 (தூய பக்தி) என்று அழைக்கப்படுகிறது. இது அஷ்டாங்க யோகத்துடன் இணைந்து நிகழ்த்தப்படும் பொழுது, ​​அது யோக்3-மிஸ்ர ப4க்1தி1 (அஷ்டாங்க யோக பயிற்சியுடன் பக்தி கலந்தது) என்று அழைக்கப்படுகிறது. பத்து முதல் பதின்மூன்று வரையிலான அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் இந்த யோக்-மிஷ்ர பக்தியை விவரிக்கிறார்.

இந்த பகவத் கீதையின் அழகுகளில் ஒன்று, அது பல்வேறு வகையான பயிற்சிகளைத் தழுவி, அதன் மூலம் பலதரப்பட்ட வளர்ப்பு, பின்னணிகள் மற்றும் ஆளுமைகளை அதன் அரவணைப்பில் கொண்டு வருகிறது. மேற்கத்திய அறிஞர்கள், குருவின் வழிகாட்டுதலின்றி இந்து வேதங்களைப் படிக்க முயலும்பொழுது, ​​அதன் பல்வேறு வேதங்களில் உள்ள பல்வேறு வழிகள், அறிவுறுத்தல்கள் மற்றும் தத்துவக் கண்ணோட்டங்களால் அவர்கள் அடிக்கடி குழப்பமடைகின்றனர். இருப்பினும், இந்த பல்வகை வேறுபாட்டுத் தொகுதி உண்மையில் ஒரு ஆசீர்வாதம். முடிவில்லா வாழ்க்கையின் ஸம்ஸ்காரங்கள் (போக்குகள்) காரணமாக, நாம் அனைவரும் வெவ்வேறு இயல்புகள் மற்றும் விருப்பங்களைக் கொண்டுள்ளோம். நான்கு பேர் தங்களுக்கான ஆடைகளை வாங்கச் சென்றால், அவர்கள் வெவ்வேறு வண்ணங்கள், உடைகள் மற்றும் நாகரீகங்களைத் தேர்வு செய்கிறார்கள். கடையில் ஒரே ஒரு வண்ண உடைகள் இருந்தால், அது மனித இயல்பில் உள்ள பல்வேறு வகைகளை பூர்த்தி செய்ய முடியாது. இதேபோல், ஆன்மீக பாதையிலும், மக்கள் கடந்த கால வாழ்க்கையில் பல்வேறு பயிற்சிகளைத் செய்திருக்கிறார்கள். வேத ஶாஸ்திரங்கள் அந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்கின்றன, அதே நேரத்தில் பக்தியை பொதுவான இணைப்பாக வலியுறுத்துகின்றன. அஷ்டாங்க யோகத்தில், முதுகெலும்பு நெடுவரிசையில் உள்ள ஸுஷும்னா செல்வழி மூலம் உயிர் சக்தி எழுப்பப்படுகிறது. இது மூன்றாவது கண்ணின் (உள் கண்) பகுதியான புருவங்களுக்கு இடையில் கொண்டு வரப்படுகிறது. அப்படி கொண்டு வரப்பட்ட உயிர்சக்தியை மிகுந்த பக்தியுடன் ஒப்புயர்வற்ற இறைவனின் மீது கவனமாக நிலை நிருத்தப்படுகிறது.