Bhagavad Gita: Chapter 9, Verse 1

ஶ்ரீப43வானுவாச1 |

இத3ம் து1 தே1 கு3ஹ்யத1மம் ப்1ரவக்ஷ்யாம்யனஸூயவே |

ஞானம் விஞ்ஞானஸஹித1ம் யஞ்ஞாத்1வா மோக்ஷ்யஸே‌ஶுபா4த்1 || 1 ||

ஶ்ரீ—பகவான் உவாச--—ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்; இதம்——இது; து——ஆனால்; தே——உனக்கு; குஹ்ய—தமம்----—மிக இரகசியமான; ப்ரவக்ஷ்யாமி-—--நான் வழங்குகிறேன்; அனஸூயவே—— பொறாமை கொள்ளாததால்; ஞானம்——அறிவையும்; விஞ்ஞான——உணர்ந்த ஞானத்தையும் அறிவு; ஸஹிதம்——உடன்; யத்-—எதை; ஞாத்வா-—அறிந்த பின்; மோக்ஷ்யஸே——நீ விடுவிக்கப்படுவாய்; அஸுபாத்——பொருள் இருப்பின் துயரங்களிலிருந்து

Translation

BG 9.1: பகவான் கூறினார்: ஓ அர்ஜுனா, நீ என் மீது பொறாமை கொள்ளாததால், இந்த மிக ரகசியமான அறிவையும் ஞானத்தையும் நான் இப்பொழுது உனக்கு வழங்குகிறேன், இதை அறிந்தவுடன் நீ பொருள் இருப்பின் துயரங்களிலிருந்து விடுவிக்கப்படுவாய்.

Commentary

தலைப்பின் ஆரம்பத்திலேயே, இந்த போதனைகளைக் கேட்பதற்கான தகுதியை ஸ்ரீ கிருஷ்ணர் அறிவிக்கிறார். அநஸூயவே என்றால் 'பொறாமையற்ற' என்று பொருள்படும் அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பொறாமைபடாததால் அர்ஜுனனுக்கு இந்த அறிவை வெளிப்படுத்துவதாக அவர் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் இதை தெளிவுபடுத்துகிறார் , ஏனென்றால் அவர் இங்கே தன்னைத் தானே மகிமைப்படுத்தப் போகிறார். அநஸூயவே, ‘இகழ்ச்சி' என்றும் பொருள்படும்‘. ஸ்ரீ கிருஷ்ணரை அவர் பெருமை பேசுகிறார் என்று நம்பி ஏளனம் செய்பவர் அத்தகைய அறிவுரையைக் கேட்பதால் பயனடைய மாட்டார்கள். மாறாக, 'இந்த அகங்காரவாதியைப் பாருங்கள் அவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார்.' என்று நினைப்பதன் மூலம் அவர்கள் தங்களுக்கு தீங்கு விளைவித்துக் கொள்வார்கள்.

இத்தகைய மனப்பான்மை ஆணவத்தினாலும் பெருமையினாலும் பிறக்கிறது, மேலும் அது பக்தியின் போற்றுதலுக்குரிய தகுதியை ஒருவரிடமிருந்து பறிக்கிறது. பொறாமை கொண்டவர்கள் கடவுளுக்கு எதுவும் தேவையில்லை என்ற எளிய உண்மையை புரிந்து கொள்ள முடியாது. எனவே, அவர் செய்யும் அனைத்தும் ஆன்மாக்களின் நலனுக்காகவே. ஆன்மாக்களின் பக்தியை அதிகரிக்க மட்டுமே அவர் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார், அன்றி, பொருள் உலகின் போலி தற்பெருமை குறைபாடு உள்ளதால் அல்ல. அர்ஜுனன் பெருந்தன்மையுடையவராகவும், பொறாமையின் தவறிலிருந்து விடுபட்டவராகவும் இருப்பதால், இந்த அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்தப் போகும் ஆழ்ந்த அறிவைப் பெருவதற்கு அவர் தகுதியானவர்.

இரண்டாவது அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மாவின் அறிவை உடலிலிருந்து வேறுபட்டதாக மற்றும் தனித்தனி ஆனதாகவும் விளக்கினார். அது கு3ஹ்ய அல்லது ரகசிய அறிவு. ஏழாவது மற்றும் எட்டாவது அத்தியாயங்களில், குஹ்யதர் அல்லது அதிக ரகசியமான அவரது சக்திகளைப் பற்றிய அறிவை அவர் விளக்கினார். அதன்பின் மற்றும் அடுத்த அத்தியாயங்களில், கு3ஹ்யத1ம் அல்லது மிக மிக ரகசியமான அவரது நிர்மலமான பக்தி பற்றிய அறிவை அவர் வெளிப்படுத்துவார்.