Bhagavad Gita: Chapter 9, Verse 2

ராஜவித்3யா ராஜகு3ஹ்யம் ப1வித்1ரமித3முத்11மம் |

ப்1ரத்1யக்ஷாவக3மம் த4ர்ம்யம் ஸுஸுக2ம் க1ர்து1மவ்யயம் ||2||

ராஜ-வித்யா——அறிவியலின் ராஜா; ராஜகுஹ்யம்——மிக ஆழமான இரகசியம்; பவித்ரம்——தூய்மைப்படுத்துகிற; இதம்——இது; உத்தமம்——உயர்ந்த; ப்ரத்யக்ஷ——நேரடியாக அறியக்கூடியது அவகமம்——நேரடியாக உணரக்கூடியது; தர்ம்யம்——நற்குணமுள்ள; ஸு-ஸுகம்—--எளிதானது; கர்தும்——பயிற்சி செய்ய; அவ்யயம்—— நிரந்தரமானது.

Translation

BG 9.2: இந்த அறிவு அறிவியலின் ராஜா மற்றும் அனைத்து ரகசியங்களிலும் மிகவும் ஆழமானது. அதைக் கேட்பவர்களைத் தூய்மைப்படுத்துகிறது. இது நேரடியாக உணரக்கூடிய, அறியக்கூடிய தர்மத்திற்கு இணங்கிய, நடைமுறைப்படுத்த எளிதான, மற்றும் நிரந்தரமானது.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் தான் வெளிப்படுத்தப் போகும் அறிவின் முதன்மையான நிலையை வலியுருத்த 'ராஜா' என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறார். வித்யா என்றால் 'அறிவியல்'. அவர் தனது போதனைகளை மதம், கோட்பாடு, அல்லது நம்பிக்கை என்று குறிப்பிடவில்லை. தான் அர்ஜுனனிடம் விவரிக்கப் போவது அறிவியல்களின் மன்னன்‘’ என்று அறிவிக்கிறார். கு3ஹ்ய என்றால் 'ரகசியம்'. இந்த அறிவே மிக உயர்ந்த ரகசியம். தேர்ந்தெடுப்பதற்கு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே அன்பு சாத்தியமானது என்பதால், கடவுள் வேண்டுமென்றே தன்னை நேரடியான பார்வையிலிருந்து மறைத்து, அதன் மூலம் ஆன்மாவிற்கு அவரை நேசிப்பதா இல்லையா என்பதைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அளிக்கிறார். தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் இல்லாததால் ஒரு இயந்திரத்தால் நேசிக்க முடியாது. நாம் அவரை நேசிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார், எனவே அவருக்கும் மாயாவிற்கும் இடையே தேர்வு செய்வதற்கான விருப்பத்தை அவர் நமக்குத் தருகிறார். நாம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அவற்றின் பின்விளைவுகளை அவர் அறிவுருத்தி இவை இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை நம் கையில் விட்டுவிட்டார்.

1வித்1ரம் என்றால் ‘தூய்மையானது’. பக்தி பற்றிய அறிவு மிகத் தூய்மையானது, ஏனெனில் அது அற்ப சுய1நலத்தால் கறைபடாதது. இது உயர்ந்த இறைவனுக்கான தெய்வீக அன்பின் பலிபீடத்தில் சுய தியாகத்தை ஊக்குவிக்கிறது. பக்தியானது, பாவங்கள், விதை, மற்றும் அறியாமை ஆகியவற்றை அழித்து பக்தனையும் தூய்மையாக்குகிறது. பாவங்கள் என்பது தனிப்பட்ட ஆன்மாவின் முடிவில்லா வாழ்நாளின் கடந்தகால பாவங்களின் களஞ்சியமாகும். வைக்கோல் மூட்டையை நெருப்பு எரிப்பது போல் பக்தி பாவங்ககளை எரிக்கிறது. விதைகள் இருந்தால், கடந்த கால பாவங்களின் முடிவுகளை அழிப்பது போதாது, ஏனென்றால் பாவத்தின் நாட்டம் இதயத்தில் இருக்கும், மேலும் ஒருவர் மீண்டும் பாவம் செய்ய தூண்டப்படுவார். பக்தி இதயத்தைத் தூய்மையாக்குகிறது மற்றும் ஆசை என்ற பாவத்தின் விதைகளை அழிக்கிறது. பக்தி இதயத்தைத் தூய்மையாக்கி, பாவத்தின் விதைகளான ஆசை, கோபம், பேராசை ஆகியவற்றை அழிக்கிறது. இருப்பினும், விதைகளை அழிப்பது கூட போதாது. இதயம் தூய்மையற்றதாக மாறுவதற்குக் காரணம் அறியாமை. அறியாமையால் நாம் நம்மை உடலாக கருதி அதனுடன் அடையாளம் காண்கிறோம். இந்த தவறான அடையாளத்தின் காரணமாக, நாம் உடலை சுயமாக நினைத்து, சுயத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்து உடல் ஆசைகளை உருவாக்குகிறோம். இத்தகைய பொருள் ஆசைகளை நிறைவேற்றுவது மேலும் காமம், கோபம், பேராசை மற்றும் இதயத்தின் அனைத்து அசுத்தங்களுக்கும் வழிவகுக்கிறது. அறியாமை இருக்கும் வரை, இதயம் தூய்மையடைந்தாலும், அது மீண்டும் தூய்மையற்றதாகிவிடும். பக்தி இறுதியில் ஆன்மா மற்றும் கடவுள் பற்றிய உணர்தலான அறிவில் விளைகிறது, இது பொருள் இருப்பு பற்றிய அறியாமையை அழிக்கிறது. பக்தியின் பலன்கள் ப4க்1தி1 ரஸாம்ருத1 ஸிந்து4 வில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன: க்1ளேஶஸ் து1 பா11ம் த1த்பீ3ஜம் அவித்4யா சே1தி1 தே1 த்1ரிதா4 (1.1.18). ‘பக்தி பாப் (பாவங்கள்), பீஜம் (பாவங்களின் விதை), அவித்யா (இதயத்தில் உள்ள அறியாமை) ஆகிய மூன்று விஷங்களையும் அழிக்கிறது.

ப்1ரத்1யக்ஷ என்றால் 'நேரடியாக உணரக்கூடியது'. பக்தியின் அறிவியலின் பயிற்சியானது நம்பிக்கையுடன் தொடங்கி கடவுளைப் பற்றிய நேரடியான புரிதலில் முடிகிறது . இது மற்ற விஞ்ஞானங்களின் வழிமுறையைப் போல அல்ல, அங்கு நாம் ஒரு கருதுகோளுடன் ஒரு பரிசோதனையைத் தொடங்கி சரிபார்க்கப்பட்ட முடிவுடன் முடிக்கிறோம்.

4ர்ம்யம் என்றால் ‘நல்லொழுக்கம்’ என்று பொருள். பொருள்ப் பலன்களை விரும்பாமல் செய்யும் பக்தி மிகவும் புண்ணியச் செயலாகும். குரு சேவை போன்ற நேர்மையான செயல்களால் அது தொடர்ந்து போஷிக்கப்படுகிறது.

1ர்தும் ஸுஸுக1ம் என்றால் ‘பயிற்சி செய்வதற்கு மிகவும் எளிதானது’ என்று பொருள். கடவுளுக்கு நம்மிடமிருந்து எதுவும் தேவையில்லை; நாம் அவரைத் தன்னலமின்றி நேசித்தால் அவர் மிகவும் இயல்பான முறையில் அடையப்படுகிறார்.

இது உத்தமமான அறிவியல் மற்றும் நடைமுறைப்படுத்த எளிதானது என்றால், மக்கள் ஏன் தங்களை அதைக் கற்றுக்கொள்வதில் ஈடுபடுத்திக் படுத்திக் கொள்வதில்லை? இதை ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்து விளக்குகிறார்.