த்1ரைவித்1யா மாம் ஸோமபா1: பூ1த1பா1பா1
யஞ்ஞைரிஷ்ட்1வா ஸ்வர்க3தி1ம் ப்1ரார்த2யன்தே1 |
தே1 பு1ண்யமாஸாத்3ய ஸுரேன்த்3ரலோக1
மஶ்நந்தி1 தி3வ்யான்தி3வி தே3வபோ4கா3ன் ||20||
த்ரை-வித்யாஹா——-கர்ம காண்டத்தின் அறிவியல் (வேத சடங்குகள்); மாம்—-—நான்; ஸோமபாஹா-——சோம ரஸத்தை குடிப்பவர்கள்; பூத—-—தூய்மையடைந்த; பாபாஹா—-—பாவங்களிலிருந்து; யஞ்ஞைஹி——யாகங்கள் மூலம்; இஷ்ட்வா——வழிபட்டு; ஸ்வஹ-கதிம்——சொர்க்கத்தின் அரசனின் இருப்பிடத்திற்குவழியை; ப்ரார்த்தயந்தே——கோருகின்றனர்; தே——அவர்கள்; புண்யம்—-—தெய்வீகமானதை; ஆஸாத்ய——-அடைந்து; ஸுர—இந்திர—-—இந்திரனின்; லோகம்—-—வசிப்பிடத்தை; அஶ்நந்தி——-அனுபவிக்கின்றனர்; திவ்யான்——-தேவலோக; திவி—-—சொர்க்கத்தில்; தேவ—போகான்—-—தேவலோகத் தேவர்களின் இன்பங்களை
Translation
BG 9.20: வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ள பலன் தரும் வேதசடங்குகளில் விருப்பம் உள்ளவர்கள் சடங்குகள், யாகங்கள் மூலம் என்னை வணங்குகிறார்கள். யாகங்களில் எஞ்சியிருக்கும் ஸோம ரஸத்தைக் குடித்து, பாவத்திலிருந்து தூய்மையடைந்து, சொர்க்கம் செல்ல முற்படுகிறார்கள். தங்கள் புண்ணிய செயல்களால், சொர்க்கத்தின் அரசனான இந்திரனின் இருப்பிடத்திற்குச் சென்று, தேவலோகத் தேவர்களின் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
Commentary
முன்னதாக, வசனம் 9.12 இல், ஸ்ரீ கிருஷ்ணர் நாத்திக மற்றும் தெய்வபக்தியற்ற கண்ணோட்டங்களைத் தழுவிய நம்பிக்கையற்றவர்கள் மற்றும் அரக்கர்களின் மனநிலையையும் அத்தகைய மக்கள் எதிர்கொள்ளும் பின்விளைவுகளையும் விவரித்தார். பின்னர், தம்மிடம் அன்பான பக்தியில் ஈடுபடும் சிறந்த ஆத்மாக்களின் இயல்புகளை விவரித்தார். இப்பொழுது, இந்த வசனத்திலும் அடுத்த பகுதியிலும், பக்தர்களாக இல்லாத ஆனால் நாத்திகர்களும் இல்லாதவரை பற்றி குறிப்பிடுகிறார். அவர்கள் வேதங்களின் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்கிறார்கள். இந்த வேத சடங்கு சம்பிரதாயங்ககளின் விஞ்ஞானம் த்ரைவித்யா என்று குறிப்பிடப்படுகிறது.
த்1ரை-வித்3யாவின் அறிவியலால் ஈர்க்கப்பட்ட மக்கள் யாகங்கள் (தீபலி) மற்றும் பிற சடங்குகள் மூலம் இந்திரன் போன்ற தேவலோக தெய்வங்களை வணங்குகிறார்கள். அவர்கள் ஒப்புயர்வற்ற பகவானை மறைமுகமாக வழிபடுகிறார்கள், ஏனென்றால் தேவலோக கடவுள்கள் வழங்கும் வரங்களை அவர் மட்டுமே அங்கீகரிக்கிறார் என்பதை அவர்கள் உணரவில்லை. சம்ப்ரதாய சடங்குகள் நல்ல செயல்களாகக் கருதப்படுகின்றன, ஆனால் அவை பக்தியாகக் கருதப்படுவதில்லை. சடங்கு சம்பிரதாயங்களைச் செய்பவர்கள் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுவதில்லை. சொர்க்கத்தின் அரசனான இந்திரனின் இருப்பிடம் போன்ற ஜடப் பிரபஞ்சத்திற்குள் இருக்கும் உயர்ந்த தளங்களுக்குச் செல்கிறார்கள். அங்கே, பூமியில் கிடைக்கும் சிற்றின்ப இன்பங்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு இன்பமான நேர்த்தியான தேவலோக இன்பங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். பின்வரும் வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் பரலோக இன்பங்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்.