Bhagavad Gita: Chapter 9, Verse 23

யே‌ப்1யன்யதே3வதா14க்1தா1 யஜன்தே1 ஶ்ரத்34யான்விதா1: |

தே1‌பி1 மாமேவ கௌ1ன்தே1ய யஜன்த்1யவிதி4பூ1ர்வக1ம் ||23||

யே——யார்; அபி——எனினும்; அந்ய——மற்ற; தேவதா——தேவலோக தெய்வங்கள் ; பக்தாஹா——பக்தர்கள்; யஜந்தே——வழிபடுகிறார்கள்; ஶ்ரத்தயா அன்விதாஹா——விசுவாசமாக; தே——அவர்கள்; அபி——மேலும்; மாம்——என்னை; ஏவ——மட்டுமே; கௌந்தேய--—குந்தியின் மகன் அர்ஜுனன்; யஜந்தி——வழிபடுகின்றனர்; அவிதி—பூர்வகம்——தவறான முறையால்

Translation

BG 9.23: குந்தியின் மகனே, மற்ற தெய்வங்களை உண்மையாக வணங்கும் பக்தர்களும் என்னையும் வழிபடுகின்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு தவறான முறையில் செய்கிறார்கள்.

Commentary

பரமாத்மாவை வழிபடுபவர்களின் நிலையை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்தூல ஆதாயங்களுக்காக கீழ்நிலை கடவுள்களை வழிபடுபவர்களின் நிலையை இப்பொழுது விளக்குகிறார். அவர்களும் நம்பிக்கை உடையவர்கள், மேலும் அவர்களின் வேண்டுதல்களுக்கு தேவலோகக் தெய்வங்கள் பதிலளிக்கலாம், ஆனால் அவர்களின் புரிதல் முழுமையடையாதது. தேவலோக ஆளுமைகள் தங்கள் சக்திகளை கடவுளிடமிருந்து பெறுகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. இதன் விளைவாக, அவர்கள் மறைமுகமாக இருந்தாலும், ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமையை வணங்குகிறார்கள். உதாரணமாக, ஒரு குடிமகனின் முறையீட்டை ஒரு அரசங்க அதிகாரி நிவர்த்தி செய்தால், அவர் கருணையுள்ளவர் என்று வரவு வைக்கப்படுவதில்லை.அவர் தனது அதிகார வரம்பில் அரசங்கத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார். அவ்வாறே, தேவலோக தெய்வங்களின் அனைத்து சக்திகளும் ஒப்புயர்வற்ற கடவுளிடமிருந்து வந்தவை. எனவே, மேம்பட்டபுரிதல் உள்ளவர்கள் நேராக இல்லாத வழியில் செல்வதில்லை; அவர்கள் அனைத்து ஆற்றல்களின் ஆதாரமான கடவுளையே வணங்குகிறார்கள் .ஒப்புயர்வற்ற கடவுளுக்கு செய்யப்படும் இத்தகைய வழிபாடு தானாகவே அனைத்துபடைப்பையும் திருப்திப்படுத்துகிறது:

யதா21ரோர் மூல-நிஷேச1னேன

த்1ரிப்1யந்தி11த்1ஸ்க1ந்த4பூ4ஜோப1ஶாகா2ஹா

ப்1ராணோபா11ஹாச்11 யதே2ந்தி3ரியாணாம்

1தை2வ ஸர்வார்ஹணம் அச்1யுதே1ஜ்யா

(பா43வத1ம் 4.31.14)

‘ஒரு மரத்தின் வேறுக்கு நாம் தண்ணீர் பாய்ச்சும்பொழுது, ​​அதன் தண்டு, சுள்ளிகள், கிளைகள், இலைகள், பூக்கள் அனைத்தும் ஊட்டமடைகின்றன. உணவை நம் வாயில் வைக்கும்பொழுது, ​​அது தானாகவே உயிர் காற்று மற்றும் புலன்களுக்கு ஊட்டமளிக்கிறது. அவ்வாறே, ஒப்புயர்வற்ற கடவுளை வழிபடுவதன் மூலம், தேவலோக தேவர்கள் உட்பட அவருடைய அனைத்து அங்கங்களும் வழிபடப்படுகின்றன. இருப்பினும், அதன் வேர்களை அலட்சியம் செய்து ஒரு மரத்தின் இலைகளுக்கு தண்ணீர் பாய்ச்சத் தொடங்கினால்,மரம் அழிந்துவிடும். அவ்வாறே, தேவலோக தெய்வங்களுக்குப் படைக்கப்படும் வழிபாடுகள் நிச்சயமாக இறைவனை அடையும், ஆனால் அத்தகைய பக்தர்களுக்கு ஆன்மீக பலன்கள் கிடைக்காது. இது அடுத்த வசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.