Bhagavad Gita: Chapter 9, Verse 24

அஹம் ஹி ஸர்வயஞானாம் போ4க்1தா11 ப்1ரபு1ரேவ ச1 |

ந து1 மாமபி4ஜானன்தி11த்1த்1வேனாத1ஶ்ச்1யவன்தி1 தே1 ||24||

அஹம்——நான்; ஹி——உண்மையாக; ஸர்வ——எல்லா; யஞ்ஞானாம்——தியாகங்களையும்; போக்தா——அனுபவிப்பவர்; ச——மற்றும்; பிரபுஹு——இறைவன்; ஏவ——மட்டும்; ச——மற்றும்; ந——இல்லை; து——ஆனால்; மாம்——என்னை;—அபிஜாநந்தி——உணர்கின்றனர்; தத்வேன——தெய்வீக இயல்பை; அதஹ——எனவே; ச்யவந்தி——கீழே விழுகின்றனர் (ஸம்ஸாரத்தில் அலைந்து); தே——அவர்கள்

Translation

BG 9.24: நான் அனைத்து தியாகங்களையும் அனுபவிப்பவன் மற்றும் நானே அனைத்து தியாகங்களுக்கும் உரிய இறைவன். ஆனால் என் தெய்வீக இயல்பை உணரத் தவறியவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது தேவலோக தெய்வங்களை வழிபடுவதில் உள்ள குறையை விளக்குகிறார். ஒப்புயர்வற்ற கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட சக்திகளின் காரணமாக, அவர்கள் பொருள் உதவிகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களால் தங்கள் பக்தர்களை வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்க முடியாது. அவர்கள் தங்களிடம் உள்ளதை மட்டுமே மற்றவர்களுக்கு வழங்க முடியும். தேவலோகக் தெய்வங்களே ஸம்ஸாரத்திலிருந்து விடுபடாத நிலையில், எப்படித் தங்கள் பக்தர்களை அதிலிருந்து விடுவிக்க முடியும்? மறுபுறம், சரியான புரிதல் உள்ளவர்கள் தங்கள் ஆழ்ந்த பக்தி அனைத்தையும் கடவுளின் காலடியில் அர்ப்பணிக்கிறார்கள், மேலும் அவர்களின் பக்தி பூரண நிலையை அடையும் பொழுது, ​​அவர்கள் மனிதர்களின் உலகத்தைத் தாண்டி தெய்வீக இருப்பிடத்திற்குச் செல்கிறார்கள்.