தமிழ் - இந்தி உச்சரிப்பு வழிகாட்டி
முக்கிய குறிப்புகள்:
- தமிழ் மொழியில் வாக்கியங்கள் பொருள்—பொருள்-- வினைச்சொல் (subject-object-verb) என்ற வரிசையில் எழுதப்படுகின்றன. மாறாக, ஸமஸ்கிருதத்தில் இவை மூன்றும் ஒரு வாக்கியத்தில் எந்த வரிசையலும் வரலாம். உதாரணமாக,
ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை பார்த்தார் என்ற வாக்கியத்தை ஒரே பொருள் படும்படி மூன்று விதமாக எழுதலாம். பார்த்தார் அர்ஜுனனை ஶ்ரீ கிருஷ்ணர்; அர்ஜுனனை பார்த்தார் ஶ்ரீ கிருஷ்ணர்;
- தமிழ் மொழியில் ஒரு செயலின் எதிர்ச்சொல் ‘இல்லை’ என்பதை வார்த்தையின் இறுதியில் சேர்த்து அமைக்கப்படுகிறது. மாறாக, ஸமஸ்கிருதத்தில் இல்லை என்று பொருள்படும் ‘ந’ என்ற எதிர்ச்சொல் வாக்கியத்தில் எங்கும் வரலாம். எனினும் வாக்கியத்தின் பொருள் மாறுபடாது.
- 
            உதாரணம்: ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை பார்க்கவில்லை என்பதை கீழ்கண்டபடி பல்வேறாக எழுதலாம்.
            - ஶ்ரீக்ருஷ்ணஹ அர்ஜுனம் ந பஶ்யதி [ ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை இல்லை பார்க்கிறார்]
- ந ஶ்ரீக்ருஷ்ணஹ அர்ஜுனம் பஶ்யதி [ இல்லை ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை பார்க்கிறார்]
 
- க்ரன்த மெய்யெழுத்துக்கள்
இந்த மொழிபெயர்பில் சில ஸம்ஸ்க்ருத வாரத்தைகளின் உச்சரிப்புகளை கூடுமானவரை சரியாக குறிப்பதற்கு பல இடங்களில் க்ரன்த மெய்யெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஶ் (ஶாஸ்திரங்கள்), ஜ் (ஸஞ்ஜயன்), ஷ் (புருஷ), ஸ் (ஸம்ஸார), ஹ் (துஹ்க), க்ஷ் (க்ஷீரொதக்ஷயி) ஆகிய க்ரன்த எழுத்துக்கள் ஆங்காங்கு உபயோகிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, தமிழ் வார்த்தைகள் சம்ஸ்காரங்கள் (ஸம்ஸ்காரங்கள்) சன்யாசி (ஸன்யாசி), சாஸ்திரங்கள் (ஸாஸ்திரங்கள்), சஞ்ஜயன் (ஸஞ்ஜயன்) சூத்திரங்கள் (ஸூத்திரங்கள்), சுகதேவ் (ஸுகதேவ்) சத் (ஸத்) போன்ற பல வார்த்தைகளில் வரும் ச எழுத்து வெவ்வேறு உச்சரிப்புகளாக வருகின்றன
- மொழிபெயர்ப்பில் எழுநூறு ஸம்ஸ்க்ருத வசனங்களின் சாராம்சத்தை அறிவதற்கு ஸம்ஸ்க்ருத வசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் வழங்கப்பட்டுள்ள சமஸ்கிருத வசனங்களின் வார்த்தைகளின் அர்த்தங்களின் தொகுப்பை ஒரு தேவை நோக்கீடாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
உயிரெழுத்துக்கள்
| அ | अ 
 | அம்மா என்பதில் உள்ள அ வின் உச்சரிப்பு | 
| ஆ | आ | ஆமை என்பதில் உள்ள ஆ வின் உச்சரிப்பு | 
| இ | इ | இடம் என்பதில் உள்ள இ யின் உச்சரிப்பு | 
| ஈ | ई | ஈர்ப்பு என்பதில் உள்ள ஈ யின் உச்சரிப்பு | 
| உ | उ | உரம் என்பதில் உள்ள உ வின் உச்சரிப்பு | 
| ஊ | ऊ | ஊக்கம் என்பதில் உள்ள ஊ வின் உச்சரிப்பு | 
| எ | - | இந்த உயிர் எழுத்து இந்தியில் இல்லை | 
| ஏ | ए | ஏட்டு என்பதில் உள்ள ஏ வின் உச்சரிப்பு | 
| ஐ | ऐ | ஐயன் என்பதில் உள்ள ஐ யின் உச்சரிப்பு | 
| ஓ | ओ | ஓட்டம் என்பதில் உள்ள ஓ வின் உச்சரிப்பு | 
| ஔ | औ | ஔவை என்பதில் உள்ள ஔ வின் உச்சரிப்பு | 
| ஃ | - | இந்த உயிர் எழுத்து இந்தியில் இல்லை | 
| ரி | ऋ | ரிஷி என்பதில் உள்ள ரி யின் உச்சரிப்பு | 
| ரீ | ऋ | சுரீர் என்பதில் உள்ள ரீ யின் உச்சரிப்பு | 
மெய்யெழுத்துக்கள்
தொண்டைசார் ஒலிகள் (Gutturals)
| க1 | क | கதவு என்பதில் உள்ள க வின் உச்சரிப்பு | 
| க2 | ख | துக்கம் என்பதில் உள்ள க்க வின் உச்சரிப்பு | 
| க3 | ग | மகன் என்பதில் உள்ள க வின் உச்சரிப்பு | 
| க4 | घ | கனம் என்பதில் உள்ள க வின் உச்சரிப்பு | 
| ங | ङ | திங்கள் என்பதில் உள்ள ங வின் உச்சரிப்பு 
 | 
அண்ணவொலி (Palatals)
| ச1 | च | சக்கரம் என்பதில் உள்ள ச வின் உச்சரிப்பு | 
| ச2 | छ | அழுத்தமான ச்ச வின் உச்சரிப்பு | 
| ஜ | ज | தமிழில் பங்கஜம் என்பதில் உள்ள ஜ வின் உச்சரிப்பு | 
| ச4 | झ | ஜ்ஜ அழுத்தமான ஜ வின் உச்சரிப்பு | 
| ந | ञ | தமிழின் ந வின் உச்சரிப்பு | 
நுனி நாக்கின் மேல்வாயிலிருந்து முன்நோக்கிய அசைவின் ஒலிகள் (Cerebrals)
| ட1 | ट | டாடா என்பதில் உள்ள ட வின் உச்சரிப்பு | 
| ட2 | ठ | மட்டம் என்பதில் உள்ள அழுத்தமான ட வின் உச்சரிப்பு | 
| ட3 | ड | குடம் என்பதில் உள்ள ட வின் உச்சரிப்பு | 
| ட4 (ட்3ஹ) | ढ | ட3 வின் அழுத்தமான உச்சரிப்பு | 
| ண | ण | மணம் என்பதில் உள்ள தமிழ் ண வின் உச்சரிப்பு | 
நாக்கின் நுனி மேல்வரிசை பற்களைத் தொட்டு விலகும் ஒலிகள் (Dentals)
| த1 | त | தமிழ் என்பதில் உள்ள த வின் உச்சரிப்பு | 
| த2 (த்த) | थ | அழுத்தமான த1 வின் உச்சரிப்பு | 
| த3 | द | மனிதன் என்பதில் உள்ள த வின் உச்சரிப்பு | 
| த4 (த்3ஹ) | ध | அழுத்தமான த3 வின் உச்சரிப்பு | 
| ன | न | மனம் என்பதில் உள்ள 'ன' வின் உச்சரிப்பு 
 | 
உதட்டொலிகள் (Labials)
| ப1 | प | பயன் என்பதில் உள்ள ப வின் உச்சரிப்பு | 
| ப2 (ஃப) | फ | ஃப்ராங்லின் என்பதில் உள்ள ப வின் உச்சரிப்பு | 
| ப3 | ब | பயம் என்பதில் உள்ள 'ப' வின் உச்சரிப்பு | 
| ப4 (ப்3ஹ) | भ | அழுத்தமான ப3 யின் உச்சரிப்பு | 
| ம | म | மனம் என்பதில் உள்ள ம வின் உச்சரிப்பு 
 | 
அரை-உயிரெழுத்துக்கள் (Semi-vowals)
| ய | य | வயல் என்பதில் உள்ள ய வின் உச்சரிப்பு | 
| ர 
 | र | ரதம் என்பதில் உள்ள ர வின் உச்சரிப்பு | 
| ள | 
 | இந்த மெய் எழுத்து இந்தியில் இல்லை | 
| வ | व | வரம் என்பதில் உள்ள வ வின் உச்சரிப்பு | 
| ழ | 
 | இந்த மெய் எழுத்து இந்தியில் இல்லை | 
| ல | ल | லயிப்பு என்பதில் உள்ள ல வின் உச்சரிப்பு | 
சீறொலி (Sibilants)
| ஶ | श | சாந்தி என்பதில் உள்ள ச வின் உச்சரிப்பு | 
| ஷ 
 | ष | உஷா என்பதில் உள்ள ஷ வின் உச்சரிப்பு | 
| ஸ | स | வேத வியாசர் (வியாஸர்) என்பதில் உள்ள ச வின் உச்சரிப்பு | 
| ஸூ | सू | ப்ரஹ்ம சூத்திரங்கள் (ஸூத்திரங்கள்) என்பதில் உள்ள ஸூ வின் உச்சரிப்பு | 
மூச்சொலி (Aspirate)
| ஹ | ह | ஹரி என்பதில் உள்ள ஹ வின் உச்சரிப்பு | 
 
விஸர்கம் (Visarga)
| : | ह | : (விஸர்கம்) என்பது ஒரு அழுத்தமான மூச்சொலி ஹ என்று உச்சரிக்கப்படும். அதன் முன்வரும் உயிரெழுத்தின் ஒலிக்கேற்ப மாறுகிறது. 
 மற்றும் விஸர்கம் முன்வரும் உயிரெழுத்தை நீட்டுக்கிறது. 
 ஸம்ஸ்க்ருத வசனங்களில் உள்ள வார்த்தைகளின் ஒலிக்கேற்ப மாறும் மற்றும் நீளும் உயிரெழுத்துக்களின் சில உதாரணங்கள் கீழ்வருமாறு 
 | |||
| 
 | 
 | வசனம் | வசனத்தில் வார்த்தை | முன்வரும் உயிரெழுத்து | வார்த்தையின் அர்த்தம் | 
| 
 | 
 | 2:38 | து:க | - | துஹ்க * | 
| 
 | 
 | 1.4 | மஹாரத: | அ | மஹாரதஹ | 
| 
 | 
 | 1.6 | மஹாரதா: | ஆ | மஹாரதாஹா | 
| 
 | 
 | 2.4 | இஷுபி: | இ | இஷுபிஹி | 
| 
 | 
 | 3.12 | தை: | ஈ | தைஹீ | 
| 
 | 
 | 1.14 | ப்ரதத்மது: | உ | ப்ரதத்மதுஹு | 
| 
 | 
 | 1;23 | துர்புத்தே: | ஏ | துர்புத்தேஹே | 
| 
 | 
 | 1.21 | ஸேனயோ: | ஓ | ஸேனயோஹோ | 
*து:க எனும் வார்த்தையில் விஸர்கம் நடுவில் வருவதால் வார்த்தை துஹ்க என்று எழுதப்பட்டுள்ளது.
மூக்குசார் ஒலி (Anusvara Nasalized)
| ம் 
 ந் 
 ன் | . 
 
 | ம் / ந் / ன் மூக்குசார் ஒலி மற்றும் முன்வரும் உயிரெழுத்தை நீட்டுக்கறது. அந்த என்பதில் உள்ள ந் இன் உச்சரிப்பு உதாரணம் ஸம்சாரம் / இந்திரியங்கள் | 
| மூக்குசார் ஒலி உதாரணங்கள்; | ||
| है | ஹை | இங்கு ஹை யின் இறுதியில் மூக்குசார் ஒலி இல்லை | 
| हैं | ஹைந் | இங்கு ஹை யின் இறுதியில் மூக்குசார் ஒலி இருக்கிறது | 
| नही | நஹீ | இங்கு ஹை யின் இறுதியில் மூக்குசார் ஒலி இல்லை | 
| वहीं | வஹீந் | இங்கு ஹை யின் இறுதியில் மூக்குசார் ஒலி இருக்கிறது | 
| सेवहिं | சேவஹின் (5.19 வர்ணணை) | இங்கு ஹி யின் இறுதியில் மூக்குசார் ஒலி இருக்கிறது | 
| मन हरि में | மன் ஹரி மேன் (3.7 வர்ணணை) | இங்கு மே யின் இறுதியில் மூக்குசார் ஒலி இருக்கிறது | 
மற்றவை
| க்ஷ | क्ष | அக்ஷய பாத்திரம் என்பதில் உள்ள க்ஷ வின் உச்சரிப்பு 
 | 
| ஞ | ज्ञ | 
 | 
| 
 | ड़ | ர ड़ என்பதற்கு தமிழில் சின்னம் கிடையாது. ர போன்றே உச்சரிப்புடையது | 
| 
 | ढ़ | 
 ற ढ़ என்பதற்கு தமிழில் சின்னம் கிடையாது. ற போன்றே உச்சரிப்புடையது | 
