Bhagavad Gita: Chapter 1, Verse 45-46

அஹோ ப31 மஹத்1பா11ம் க1ர்து1ம் வ்யவஸிதா1 வயம் |

யத்1ராஜ்யஸுக1லோபே4ன ஹன்து1ம் ஸ்வஜனமுத்3யதா1: ||45||
யதி3 மாமப்1ரதீ1கா1ரமஶஸ்த்1ரம் ஶஸ்த்1ரபா1ணய: |

தா4ர்த1ராஷ்ட்1ரா ரணே ஹன்யுஸ்த1ன்மே க்ஷேமத1ரம் ப4வேத் ||46||

அஹோ----அந்தோ; பத-—பேரழிவான விளைவு; மஹத்-—பெரும்; பாபம்—பாவங்கள்; கர்தும்---செய்ய;  வ்யவஸிதா ஹா-—முடிவெடுத்த; வயம்----நாம்;  யத்-—-ஆகையால்;  ராஜ்ய-ஸுக-லோபேன-—-அரச இன்பங்களுக்கான விருப்பத்தால் உந்தப்பட்டு; ஹன்தும்-—-கொல்ல;  ஸ்வஜனம்-—-சொந்த உறவினர்களை;  உத்யதாஹா-—-முனைகிறோம்;  யதி—--எனின்;  மாம்-—-என்னை;  அப்ரதீகாரம்-—-எதிர்ப்பின்றி;  அஶஸ்த்ரம்-—ஆயுதங்களின்றி; ஶஸ்த்ர-பாணயஹ-—-ஆயுதங்களை கைகளில் ஏந்திய;  தார்தராஷ்ட்ராஹா-—-த்ரிதராஷ்டிரரின் மகன்கள் ; ரணே---போர்க்களத்தில்; ஹன்யுஹு-—கொல்வது; தத்-—என்பது; மே-—எனக்கு; க்ஷேம-தரம்---மேலானதாக; பவேத்-—இருக்கும்

Translation

BG 1.45-46: அந்தோ! நாம் நமது மனதை பெரும் பாவத்தை செய்வதில் ஈடுபடுத்தி இருப்பது  எவ்வளவு விசித்திரமானது. அரச  இன்பங்களுக்கான விருப்பத்தால் உந்தப்பட்டு, நாம் நமது சொந்த உறவினர்களைக் கொல்ல விரும்புகிறோம். கையில் ஆயுதங்களைக் கொண்டு, த்ரிதராஷ்டிரரின் மகன்கள்  நிராயுதபாணியாக, போர்க்களத்தில் தடையின்றி என்னை கொல்வது மேலானது.

Commentary

வரவிருக்கும் போரில் இருந்து வரும் பல தீமைகளை அர்ஜுன் குறிப்பிட்டார். ஆனால், இந்த தீயவர்களை சமூகத்தில் மேலோங்க அனுமதித்தால் உண்மையில் தீமைகள் மேலோங்கும் என்பதை அவரால் பார்க்க முடியவில்லை. ஆச்சரியத்தை வெளிப்படுத்த அஹோ என்ற வார்த்தையைப் அவர் பயன்படுத்துகிறார். பத என்ற வார்த்தைக்கு, ‘பயங்கரமான முடிவு’ என்று அர்த்தம்.‘இந்தப் போரின் பயங்கரமான விளைவுகள் நமக்கு தெரிந்தாலும், நாம் பாவம் செய்ய முடிவு செய்திருப்பது எவ்வளவு ஆச்சரியம்’ என்று அர்ஜுன் சொல்கிறார்.

பல முறை, மக்கள் தங்கள் சொந்த தவறுகளைப் பார்க்க தவறி, அவர்களின் தவறுகளுக்காக சூழ்நிலைகள் மற்றும் பிறரை காரணம் காட்டுகிறார்கள். அதேபோல், திருதராஷ்டிரரின் மகன்கள் பேராசையால் தூண்டப்பட்டதாக அர்ஜுன் உணர்ந்தார்; அவரது இரக்கத்தின் வெளிப்பாடானது ஒரு ஆழ்நிலை உணர்வு அல்லாமல், உடல் என்ற அறியாமையின் அடிப்படையில் உருவான பொருள் மாயையின் மோகம் என்பதை அவரால் உணர முடியவில்லை. அர்ஜுனனின் அனைத்து வாதங்களிலும் உள்ள சிக்கல் என்னவென்றால், அதை அவர் அவரது உடல் ரீதியான பற்றுதல், இதய பலவீனம், மற்றும் தனது கடமையில் இருந்து தவறியதை நியாயப்படுத்த பயன்படுத்தினார். அர்ஜுனின் வாதங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதற்கான காரணங்களை ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்து வரும் அத்தியாயங்களில் விளக்குகிறார்.

Watch Swamiji Explain This Verse