த்1வமாதி3தே3வ: பு1ருஷ: பு1ராணஸ்-
த்1வமஸ்ய விஶ்வஸ்ய ப1ரம் நிதா4னம் |
வேத்1தா1ஸி வேத்3யம் ச1 ப1ரம் ச1 தா4ம
த்1வயா த1த1ம் வ விஶ்வமநந்த1ரூப1 ||38||
த்வம்--—நீங்கள்; ஆதி-தேவஹ---முதன்மையான கடவுள்; புருஷஹ---தெய்வீக ஆளுமை; புராணஹ--- தொடக்கக்காலத்திற்கு உரிய; த்வம்--—நீங்கள்; அஸ்ய--—(இதன்)உடைய; விஶ்வஸ்ய--—ப்ரபஞ்சத்தின்; பரம்--—உயர்ந்த; நிதானம்--—இளைப்பாறும் இடம்; வேத்தா--—அறிபவர்; அஸி--—நீங்கள்; வேத்யம்--—அறிவின் பொருள்; ச--—மற்றும்; பரம்--—உயர்ந்த; ச—--மற்றும்; தாம--—வசிப்பிடம்; த்வயா--—உங்களால்; ததம்—--வியாபித்துள்ள; விஶ்வம்—--ப்ரபஞ்சம்; அனந்த-ரூப---எல்லையற்ற வடிவங்களை உடையவர்
Translation
BG 11.38: நீங்கள் முதன்மையான கடவுள் மற்றும் அசல் தெய்வீக ஆளுமை; இந்த ப்ரபஞ்சத்தின் ஒரே இளைப்பாறும் இடம் நீங்கள். நீங்களே அறிந்தவர் மற்றும் அறிவின் பொருள் ஆகிய இரண்டும் ஆனவர்; நீங்கள் உன்னத உறைவிடம். எல்லையற்ற வடிவங்களை உடையவரே, நீங்கள், நீங்கள் முழு ப்ரபஞ்சத்தையும் வியாபித்து இருக்கிறீர்கள்.
Commentary
அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை எல்லா காலங்களுக்கும் காரணமான அசல் தெய்வீக நபர் என்று அழைக்கிறார். ஒவ்வொரு பொருளுக்கும் மற்றும் ஒவ்வொரு ஆளுமைக்கும் அதன் உருவாக்கத்தின் மூலத்திற்கான ஆதாரம் அல்லது ஒரு காரணம் உள்ளது, பகவான் விஷ்ணுவுக்கும் ஒரு காரணம் உண்டு. அவர் கடவுளின் வடிவமாக இருந்தாலும், அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் விரிவாக்கம். இருப்பினும், ஸ்ரீ கிருஷ்ணர் எந்த ஆளுமையின் விரிவாக்கமும் அல்ல. அவர் தான் எல்லாவற்றுக்கும் காரணமற்ற முதல் காரணம். எனவே, ப்ரஹ்மா அவரிடம் பிரார்த்தனை செய்கிறார்:
ஈஶ்வரஹ ப1ரமஹ கி1ருஷ்ணஹ ஸச்1சி1தா3னந்த3 விக்3ரஹஹ
அநாதி3ராதி3 கோவிந்த3ஹ ஸர்வ கா1ரண கா1ரணம்
(ப்3ரஹ்ம ஸம்ஹிதா1 (5.1)
‘ஸ்ரீ கிருஷ்ணர் ஒப்புயர்வற்ற பகவானின் அசல் வடிவம். அவருடைய ஆளுமை அறிவும் ஆனந்தமும் நிறைந்தது. அவர் எல்லாவற்றிற்கும் பிறப்பிடம், ஆனால் அவர் தோற்றம் இல்லாதவர். எல்லா காரணங்களுக்கும் அவரே காரணம்.’
ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர் - அனைத்தையும் அறிந்தவர். மேலும், அவர் அனைத்து அறிவின் பொருளாகவும் இருக்கிறார். ஸ்ரீமத் பாகவதம் (4.29.49) கூறுகிறது: ஸா வித்4யா த1ன்மதி1ர்யயா ‘உண்மையான அறிவு என்பது கடவுளை அறிய உதவுகிறது.’ ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் கூறுகிறார்:
ஜோ ஹரி ஸேவா ஹேது1 ஹோ, ஸோயீ க1ர்1ம ப3கா2ன்
ஜோ ஹரி ப4க3தி ப3டா4வே, ஸோயீ ஸமுஜிய ஞான
(ப4க்1தி1 ஶத1க் வசனம் 66)
‘கடவுளின் சேவையில் எந்த வேலை செயதாலும், அதை உண்மை வேலை என்று தெரிந்து கொள்ளுங்கள். எந்த அறிவு கடவுள்மீது நம் அன்பை மேம்படுத்துகிறதோ, அதுவே உண்மையான ஞானமாக இருக்க வேண்டும்.’ எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுடையவர் மற்றும் அறிவின் பொருளாக இருக்கிறார்.