அத2 சி1த்1த1ம் ஸமாதா4து1ம் ந ஶக்1னோஷி மயி ஸ்தி2ரம் |
அப்4யாஸயோகே3ன த1தோ1 மாமிச்1சா2ப்1து1ம் த4னஞ்ஜய ||9||
அத—--ஆனால்; சித்தம்--—மனதை; ஸமாதாதும்--—நிலைநிறுத்த; ந ஶக்னோஷி--—(உன்னால்) முடியா விட்டால்; மயி--—என் மீது; ஸ்திரம்--—நிலையாக; அப்யாஸ-யோகேன--தொடரந்த பயிற்சியின் மூலம் கடவுளுடன் ஐக்கியப்பட்டு; ததஹ--—பின்னர்; மாம்--—என்னை; இச்சா--—ஆசையை; ஆப்தும்--—அடைவாய்; தனஞ்ஜய--- அர்ஜுனன், செல்வத்தை வென்றவன்
Translation
BG 12.9: அர்ஜுனன், உன்னால் என்மீது மனதை நிலையாக நிலை நிறுத்த முடியாவிட்டால், உலக விவகாரங்களிலிருந்து மனதைத் தொடர்ந்து அடக்கிக்கொண்டு பக்தியுடன் என்னை நினைவுகூறப் பழகு.
Commentary
ஸ்ரீ கிருஷ்ணரின் மீது மனதை நிலைநிறுத்துவதன் மூலம், நமது ஆன்மிகப் பயிற்சியை முழுமையாக்க முடியும். ஆனால் நாம் இந்தப் பாதையில் செல்லத் தொடங்கியவுடனேயே முழுமையடைந்துவிடுவோம் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியானால், கடவுளின் மீது தங்கள் மனதை முழுமையாக நிலைநிறுத்த முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? பக்தியுடன் அவரை நினைவுகூற முயல வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே கூறுகிறார். பழமொழி கூறுவது போல், 'பயிற்சி குறைபாடு அற்றதாக ஆக்குகிறது .' இது அப்4யாஸ யோக3ம் அல்லது 'மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் கடவுளுடன் ஐக்கியம்' என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மனம் மற்ற பொருள்கள் மற்றும் எண்ணங்களை நோக்கி அலையும் போது, பக்தன் கடவுளின் நாமங்கள் வடிவங்கள், நல்லொழுக்கங்கள்,பொழுதுபோக்குகள், உறைவிடங்கள் மற்றும் கூட்டாளிகளை நினைவுகூறுவதன் மூலம் அதை மீண்டும் கடவுளிடம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு தனது அறிவுறுத்தல்களில் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதை வலியுறுத்துகிறார்:
ஜக3த1 தே1 மன கோ1 ஹடா1 க1ர, லகா3 ஹரி மே ப்1யாரே
இஸி கா1 அப்4யாஸ பு1னி பு1னி, க1ரு நிரந்த1ர ப்1யாரே
(ஸாத4னா க1ரு ப்1யாரே)
‘அன்பரே, மனதை உலகத்திலிருந்து அகற்றி, கடவுளின் மீது நிலைநிறுத்துங்கள். தொடர்ந்து, மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யுங்கள்!’