இத1ம் ஞானமுபா1ஶ்ரித்1ய மம ஸாத4ர்ம்யமாக3தா1: |
ஸர்கே3பி1 நோப1ஜாயந்தே1 ப்1ரலயே ந வ்யத2ன்தி1ச1 ||2||
இதம்--—இந்த; ஞானம்—--ஞானத்தில்; உபாஶ்ரித்ய---—அடைக்கலமடைந்தவர்கள்; மம--—என்னுடைய; ஸாதர்ம்யம்—--ஒத்த இயல்பை; ஆகதாஹா---அடைந்தவர்கள்; ஸர்கே--—படைக்கும் நேரத்தில்; அபி--—கூட; ந--—இல்லை; உபஜாயந்தே--—பிறக்கிறார்கள்; ப்ரலயே--—கலைக்கும் நேரத்தில்; ந-வ்யதந்தி--—அவர்கள் துன்பத்தை அனுபவிக்க மாட்டார்கள்; ச---மற்றும்; (ந— உபஜாயந்தே—பிறப்பதில்லை)
BG 14.2: இந்த ஞானத்தில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்னுடன் ஐக்கியமாகி விடுவார்கள். அவர்கள் படைப்பின் போது மீண்டும் பிறக்க மாட்டார்கள் அல்லது கலைக்கும் நேரத்தில் அழிக்கபடமாட்டார்கள்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம், தான் வழங்கவிருக்கும் அறிவால் தங்களைத் தயார்படுத்திக்கொள்பவர்கள், தாயின் வயிற்றில் மீண்டும் மீண்டும் அடைக்கப்படுவதை ஏற்க வேண்டியதில்லை என்று உறுதியளிக்கிறார். பிரபஞ்சத்தின் கலைப்பின் போது கடவுளின் கருவறையில் செயலற்ற நிலையில் வாழும் நிலையில் இருக்க மாட்டார்கள், அடுத்த படைப்பின் சுழற்சியில் அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள். மூன்று குணங்கள் (பொருள் இயற்கையின் முறைகள்) உண்மையில் அடிமைத்தனத்திற்குக் காரணம், அவற்றைப் பற்றிய அறிவு சுதந்திரத்திற்கான பாதையை ஒளிரச் செய்யும்.
ஸ்ரீ கிருஷ்ணர் தனது மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தான் கற்பிக்கப் போகிறவற்றின் நேரிடக் கூடிய விளைவுகளை அறிவிக்கும் உத்தியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். ந வ்யத2ந்தி1 என்ற வார்த்தைகளுக்கு ‘அவர்கள் துன்பத்தை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று அர்த்தம். அவர்கள் கடவுளைப் போன்ற ஒரு தெய்வீக தன்மையைப் பெறுவார்கள் என்பது ஸாத4ர்மியம் என்ற வார்த்தையின் பொருள். ஆன்மா பொருள் சக்தியின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படும்போது, அது கடவுளின் தெய்வீக யோகமாய சக்தியின் ஆதிக்கத்தின் கீழ் வருகிறது. இந்த தெய்வீக ஆற்றல் கடவுளின் தெய்வீக அறிவு, அன்பு மற்றும் பேரின்பத்துடன் அதை சித்தப்படுத்துகிறது. இதன் விளைவாக, ஆன்மா கடவுளின் இயல்பைப் பெறுகிறது – மேலும் கடவுளைப் போன்று தெய்வீக குணங்களைப் பெறுகிறது.