Bhagavad Gita: Chapter 15, Verse 9

ஶ்ரோத்1ரம் ச1க்ஷு: ஸ்ப1ர்ஶனம் ச1 ரஸனம் க்4ராணமேவ ச1 |

அதி4ஷ்டா2ய மனஶ்சா1யம் விஷயானுப1ஸேவதே1 ||9||

ஶ்ரோத்ரம்---காதுகள்; சக்ஷுஹு----கண்கள்; ஸ்பர்ஶணம்--—தொடும் உணர்வு; ச---—மற்றும்; ரஸனம்-- —நாக்கு; க்ராணம்—--மூக்கு; ஏவ--—மேலும்; ச—--மற்றும்; அதிஷ்டாய—--சுற்றி குழுவாக; மனஹ—--மனம்; ச--—மேலும்; அயம்--—அவைகள்; விஷயான்--—உணர்வு பொருட்கள்; உபஸேவதே---ருசிக்கிறது

Translation

BG 15.9: உடம்பொடு கூடிய ஆன்மா, மனதைச் சுற்றித் தொகுக்கப்பட்ட காதுகள், கண்கள், தோல், நாக்கு மற்றும் நாசியின் புலன் உணர்வுகளுடன் இந்திரியப் பொருட்களையும் அனுபவிக்கிறது.

Commentary

ஆன்மா, தெய்வீகமாக இருப்பதால், நேரடியாக சுவைக்கவோ, தொடவோ, உணரவோ, மணக்கவோ, கேட்கவோ முடியாது என்பதால், அது எப்படி இந்த உணர்வுகளை சுவைக்கிறது? புலன்களும் மனமும் அதற்கு உதவுகின்றன என்பதே பதில். புலன்களும் மனமும் உண்மையில் உணர்ச்சியற்றவை, ஆனால் அவை ஆன்மாவின் உணர்வால் ஆற்றல் பெறுகின்றன, மேலும் அவை உயிரோட்டமாகின்றன. எனவே, அவை பொருள்கள், சூழ்நிலைகள், எண்ணங்கள் மற்றும் நபர்களிடமிருந்து இன்பத்தையும் துன்பத்தையும் உணர்கின்றன. இவ்வாறு உடல் மனம் மற்றும் புலன்களின் மூலம் உலகை சுவைக்கிறது. அகங்காரத்தின் காரணமாக, ஆன்மா மனம் மற்றும் புலன்களுடன் அடையாளம் கண்டு, அதே இன்பங்களை விகாரமாக உணர்கிறது.

பிரச்சனை என்னவென்றால், புலன்களும் மனமும் எவ்வளவு இன்பத்தை ஆன்மாவிற்கு தந்தாலும் தெய்வீகமான ஆன்மா இந்த பொருள் மகிழ்ச்சியில் இருந்து ஒரு போதும் திருப்தி அடையாது. அது இன்னும் அதன் இலக்கை அடையவில்லை என்ற உணர்வு நீடிக்கிறது, மேலும் உண்மையிலேயே திருப்தி அளிக்கும் பரிபூர்ண மகிழ்ச்சியின் தேடல் தொடர்கிறது. அமெரிக்க தத்துவஞானி ரால்ப் வால்டோ எமர்சன் இதை மிகவும் அழகாகக் கூறுகிறார்: 'மனித வாழ்க்கை அற்பமானது என்று நாம் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அது அற்பமானது என்பதை நாம் எப்படி கண்டுபிடித்தோம்? இந்த அமைதியின்மையின், இந்த பழைய அதிருப்தியின் அடிப்படை என்ன? தேவை மற்றும் அறியாமையின் இந்த உலகளாவிய உணர்வு என்ன, ஆனால் ஆத்மா தனது மறைமுகக் கூற்றை ஒரு உன்னதமான நுண்ணறிவால் மட்டுமே ஆதரிக்கிறதா?’

மற்றொரு புகழ்பெற்ற தத்துவஞானி, மெய்ஸ்டர் எக்கார்ட் எழுதுகிறார்: 'ஆன்மாவில் ஏதோ ஒன்று இருக்கிறது, அது உயிருக்கு மேலே, தெய்வீகமானது மற்றும் எளிமையானது. இந்த ஒளி மிக முக்கியமான சாரத்தில் மட்டுமே திருப்தி அடைகிறது.

ஆன்மா தேடும் எல்லையற்ற, நித்திய மற்றும் தெய்வீக பேரின்பம் கடவுளிடமிருந்து மட்டுமே பெறப்படும். இதை ஒருவர் உணரும்போது, ​​அடிமைத்தனத்திற்குக் காரணமான அதே புலன்களையும் மனதையும் கடவுளின் திசையில் திருப்பி, பக்தியின் கருவிகளாகப் பயன்படுத்தலாம். இந்தி ராமாயணத்தை எழுதிய சாது துளசிதாஸ் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம்.

இளமையில், அவர் தனது மனைவியுடன் ஆழமாக இணைந்திருந்தார். ஒருமுறை,அவள் தன் பெற்றோர் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த சமயம் துளசிதாஸ் அவளைச் சந்திப்பதற்கான ஆர்வத்தால் உந்தப்பட்டப்பட்டார். அவர் தனது மாமனாரின் வீட்டிற்கு கால்நடையாகப் புறப்பட்டார், ஆனால் வழியில் ஒரு ஓடை இருந்தது, பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், எந்த படகோட்டியும் அவரைக் அக்கரைக்கு கொண்டு செல்ல தயாராக இல்லை. ஒரு பிணம் மிதந்து வந்தது. தன் மனைவியைச் சந்திக்கும் ஆவலால் உந்தப்பட்ட துளசிதாஸ், அது ஒரு மரக்கட்டை என்று எண்ணி, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு அக்கரைக்குச் சென்றார்.

வீட்டின் இரண்டாவது மாடியில் வசிக்கும் தன் மனைவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை அவரை ஆட்கொண்டது. சுவரில் ஒரு பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது. துளசிதாஸ் அதைக் கவனமாகப் பார்க்காமல், கயிறு என்று நினைத்தார். அதனால், முக்கிய வாயிற் கதவை தட்டி நேரத்தை வீணடிக்காமல், பாம்பை பிடித்து மேலே ஏறினார். ஜன்னல் வழியாக உள்ளே வந்ததும், மனைவி வியந்தார். அவர் எப்படி ஆற்றைக் கடந்து சுவரில் ஏறினார் என்று விசாரித்தார். அவர் மரத்தடி மற்றும் கயிறு என்று தவறாக நினைத்ததை வெளியே சுட்டிக்காட்டினார். இறந்த உடலையும் பாம்பையும் கண்டு அதிர்ச்சியடைந்து ‘இரத்தமும் சதையுமான இந்த உடலின் மீது உனக்கு இவ்வளவு ஆசை, நீ கடவுளை இவ்வளவு தீவிரமாக விரும்பியிருந்தால், நீ மீண்டும் இவ்வுலகில் பிறக்க வேண்டியதில்லை! உணர்ச்சி மீதூர கூறினார்.

மனைவியின் வார்த்தைகள் அவரை மிகவும் தாக்கியது, அவர் தனது முட்டாள்தனத்தை உணர்ந்து பற்றின்மையை தழுவி தனது இல்லறத்தைத் துறந்து பக்தியில் ஈடுபடச் சென்றார். அவர் கடினமாகப் பயிற்சி செய்தார், கடந்த காலத்தில் அவரைத் தொந்தரவு செய்த அதே மனம் மற்றும் உணர்வுகளின் ஆசைகள் இப்போது கடவுளை நோக்கி திருப்பி விடப்பட்டன. இவ்வாறு, பக்தியின் செயல்முறையால், அவர் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, மகா கவிஞரான துளசிதாஸ் ஆனார். பின்னர், அவர் எழுதினார்:

கா1மிஹி நாரி ப்1யாரி ஜிமி லோபி4ஹி ப்1ரிய ஜிமி தா3ம,

தி1மி ரகு3நாத2 நிரந்த1ர ப்1ரிய லக3ஹு மோஹி ராம (ராமாயணம்)

‘காமமுள்ள ஆண் அழகான பெண்ணை விரும்புவது போலவும், பேராசை கொண்டவன் செல்வத்தை விரும்புவது போலவும், என் மனமும் புலன்களும் பகவான் ராமனைத் தொடர்ந்து விரும்புகின்றன.’