Bhagavad Gita: Chapter 18, Verse 56

ஸர்வக1ர்மாண்யபி1 ஸதா3 கு1ர்வாணோ மத்3வ்யபா1ஶ்ரய: |

மத்1ப்1ரஸாதா33வாப்1னோதி1 ஶாஶ்வத1ம் ப11மவ்யயம் ||56||

ஸர்வ—--எல்லாவிதமான; கர்மாணி—--செயல்களை ; அபி—--எனினும்; ஸதா--—எப்பொழுதும்;குர்வாணஹ- செய்தாலும்; மத்-வியாபாஶ்ரயஹ----என்னிடமே முழு அடைக்கலம் அடைந்து; மத்-ப்ரஸாதாத்---என் அருளால்; அவாப்நோதி----அடைகிறார்கள்; ஶாஶ்வதம்---—நிரந்தரமான; பதம்—--இருப்பிடத்தை; அவ்யயம்----அழியாதது.

Translation

BG 18.56: என் பக்தர்கள், எல்லாவிதமான செயல்களைச் செய்தாலும், என்னிடமே முழு அடைக்கலம் அடைகிறார்கள். என் அருளால் அவர்கள் நிரந்தரமான மற்றும் அழியாத இருப்பிடத்தை அடைகிறார்கள்.

Commentary

முந்தைய வசனத்தில், பக்தியின் மூலம் பக்தர்கள் அவரைப் பற்றிய முழு விழிப்புணர்வை அடைகிறார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கினார். முழு விழிப்புணர்வுடன் அவர்கள் கடவுளுடன் அதன் தொடர்பில் அனைத்தையும் பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் உடல், மனம் மற்றும் புத்தியை கடவுளின் ஆற்றல்களாகப் பார்க்கிறார்கள்; அவர்கள் தங்கள் பொருள் உலக உடைமைகளை கடவுளின் சொத்தாகப் பார்க்கிறார்கள்; அவர்கள் எல்லா உயிரினங்களையும் கடவுளின் இன்றியமையா பாகங்களாக பார்க்கிறார்கள்; மற்றும் தங்களை அவரது சிறிய பணியாளர்களாக பார்க்கிறார்கள். அந்த தெய்வீக உணர்வில், அவர்கள் வேலையை விட்டுவிடுவதில்லை. மாறாக, அவர்கள் வேலையைச் செய்பவர்கள் மற்றும் அனுபவிப்பவர்கள் என்ற பெருமையைத் துறக்கிறார்கள். அவர்கள் எல்லா வேலைகளையும் ஒப்புயர்வற்ற இறைவனுக்கு செய்யும் பக்திச் சேவையாகவே பார்க்கிறார்கள. மேலும் அதன் செயல்திறனுக்காக அவரைச் சார்ந்திருக்கிறார்கள்.

பின்னர், தங்கள் உடலை விட்டு வெளியேறியவுடன், அவர்கள் கடவுளின் தெய்வீக உறைவிடத்திற்குச் செல்கிறார்கள். ஜடப்பொருள் மண்டலம் ஜட சக்தியால் ஆனது போல, தெய்வீக மண்டலம் ஆன்மீக ஆற்றலால் ஆனது. எனவே, இது ஜட இயற்கையின் குறைபாடுகளிலிருந்து விடுபட்டது மற்றும் எல்லா வகையிலும் குறைபாடற்றது. இது ஸத்-சித்-ஆனந்தம், அதாவது நித்தியமான, அறிவு மற்றும் பேரின்பம் நிறைந்தது. அவருடைய தெய்வீக மண்டலத்தைப் பற்றி, ஸ்ரீ கிருஷ்ணர் 15.6 வது வசனத்தில் கூறினார்: 'சூரியனோ, சந்திரனோ, நெருப்போ என்னுடைய அந்த உன்னத இருப்பிடத்தை ஒளிரச் செய்ய முடியாது. அங்கு சென்ற பிறகு, ஒருவர் மீண்டும் இந்த ஜட உலகுக்குத் திரும்புவதில்லை.’

கடவுளின் பல்வேறு வடிவங்கள் ஆன்மீக உலகில் தங்களுடைய சொந்த வசிப்பிடங்களைக் கொண்டுள்ளன, அங்கு அவர்கள் தங்கள் பக்தர்களுடன் நித்திய அன்பான பொழுது போக்குகளில் ஈடுபடுகிறார்கள். தன்னலமற்ற அன்பான சேவையை அவருக்குச் செய்தவர்கள் அவர்கள் வழிபட்ட கடவுளின் உறைவிடத்திற்குச் செல்கிறார்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பக்தர்கள் அவருடைய இருப்பிடமான கோ3லோக1த்திற்கு செல்கிறார்கள். விஷ்ணு பகவானை வழிபடுபவர்கள் வைகுண்டம் செல்கின்றனர் ; ராமரின் பக்தர்கள் சாகேத் லோகம் செல்கிறார்கள்; சிவனை வழிபடுபவர்கள் சிவலோகத்திற்கு செல்கின்றனர்; அன்னை துர்காவை வழிபடுபவர்கள் தேவி லோகம் செல்கின்றனர். இந்த தெய்வீக இருப்பிடங்களை அடையும் பக்தர்கள், அவரை அடைந்து, ஆன்மீக ஆற்றலின் பரிபூரணத்துடன் நிறைந்த அவரது தெய்வீக பொழுது போக்குகளில் பங்கேற்கிறார்கள்.