Bhagavad Gita: Chapter 17, Verse 22

அதே3ஶகா3லே யத்3தா3னமபா1த்3ரேப்4யஶ்ச1 தீ3யதே1 |

அஸத்1க்1ருத1மவஞ்ஞாத1ம் த1த்1தா1மஸமுதா3ஹ்ருத1ம் ||22||

அதேஶ—--தவறான இடத்தில்; காலே—--தவறான நேரத்தில்; யத்--—எது; தானம்----கொடை; அபாத்ரேப்யஹ--—தகுதியற்ற நபர்களுக்கு; ச—-மற்றும்; தீயதே--—கொடுக்கப்படுகிற; அஸத்-கிருதம்-----இகழ்ச்சியுடனும்; அவஞ்ஞாதம்—--அவமதிப்புடன்; தத்--—அது; தாமஸம்--—அறிவின்மையின் இயல்புடையதாக;உதாஹ்ருதம்--—என்று கருதப்படுகிறது..

Translation

BG 17.22: தகுதியற்ற நபர்களுக்கு தவறான இடத்திலும், தவறான நேரத்திலும் மரியாதை காட்டாமலும், இகழ்ச்சியுடனும் கொடுக்கப்படும் கொடை, அது அறிவின்மையின் இயல்புடையதாக கருதப்படுகிறது.

Commentary

சரியான இடம், நபர், அணுகுமுறை அல்லது நேரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அறியாமை முறையில் செய்யப்படும் தானத்தில் எந்த நன்மையான நோக்கமும் இல்லை. உதாரணமாக, ஒரு குடிகாரனுக்கு தானமாக கொடுக்கப்பட்ட பணத்தை உபயோகித்து அவன் குடித்துவிட்டு ஒரு கொலையை செய்தால், கொலைகாரன் கண்டிப்பாக செயல்களின் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவான். ஆனால், அக்குற்றத்திற்கு தர்மம் செய்த நபரும் தார்மீக ரீதியாக குற்றவாளியாக கருதப்படுவார். இது தகுதியற்ற நபருக்கு அறியாமை முறையில் வழங்கப்படும் தானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.