ஶ்ரீப4க3வானுவாச1 |
ப1ரம் பூ4ய: ப்1ரவக்ஷ்யாமி ஞானானாம் ஞானமுத்1த1மம் |
யஞ்ஞாத்வா முனய: ஸர்வே ப1ராம் ஸித்3தி4மிதோ1 க3தா1: || 1 ||
ஶ்ரீ-பகவான் உவாச-—தெய்வீக பகவான் கூறினார்; பரம்—--சிறந்த; பூயஹ--—மீண்டும்; ப்ரவக்ஷ்யாமி--—நான் விளக்குகிறேன்; ஞானானாம்--—அனைத்து அறிவிலும்; ஞானம் உத்தமம்--—சிறந்த ஞானம்; யத்--—எதை; ஞாத்வா--—அறிந்து; முனயஹ—--துறவிகள்; ஸர்வே----அனைத்து; பராம்—--உயர்மிக்க; சித்திம்--—முழுமையை; இதஹ--—இதன் மூலம்; கதாஹா--—அடைந்தனர்
Translation
BG 14.1: ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்: எல்லா அறிவிலும் சிறந்த எந்த உன்னதமான ஞானத்தை அறிவதன் மூலம் எல்லா மகான்களும் உயர்ந்த பரிபூரணத்தை அடைந்தார்களோ அந்த உன்னதமான ஞானத்தை நான் மீண்டும் உனக்கு விளக்குகிறேன்.
Commentary
முந்தைய அத்தியாயத்தில், அனைத்து உயிர்களும் ஆன்மா மற்றும் பொருளின் கலவையாகும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கினார். ஆன்மாவின் (புருஷ்) செயல்பாடுகளின் துறையை உருவாக்குவதற்கு பிரகிருதி (பொருள் இயல்பு) பொறுப்பு என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். இது சுயாதீனமாக நடக்காமல், உயிரின் உடலுக்குள்ளேயே அமர்ந்திருக்கும் பரமாத்மாவின் வழிகாட்டுதலின் கீழ் நடக்கிறது என்று அவர் கூறினார். இந்த அத்தியாயத்தில், அவர் பொருள் இயற்கையின் மூன்று குணங்களைப் பற்றி விரிவாக விவரிக்கிறார். இந்த அறிவைப் பெறுவதன் மூலமும், உணர்ந்த ஞானமாக நம் நனவில் உள்வாங்குவதன் மூலமும், நாம் மிக உயர்ந்த பரிபூரணத்தை அடைய முடியும்.