Bhagavad Gita: Chapter 14, Verse 11-13

ஸர்வத்3வாரேஷு தே3ஹே‌ஸ்மின்ப்3ரகா1ஶ உப1ஜாயதே1 |

ஞானம் யதா31தா3 வித்3யாத்3விவ்ருத்34ம் ஸத்1த்1வமித்1யுத1 ||11||
லோப4: ப்1ரவ்ருத்1தி1ராரம்ப4: க1ர்மணாமஶம: ஸ்ப்1ருஹா |

ரஜஸ்யேதா1னி ஜாயன்தே1 விவ்ருத்1தே44ரத1ர்ஷப4 ||12||
அப்1ரகா1ஶோ‌ப்1ரவ்ருத்1தி1ஶ்ச1 ப்1ரமாதோ3 மோஹ ஏவ ச1 |

1மஸ்யேதா1னி ஜாயன்தே1 விவ்ருத்1தே4 கு1ருநந்த3ன ||13||

ஸர்வ—--அனைத்து; த்வாரேஷு--—வாயில்கள் வழியாக; தேஹே—---உடலில்; அஸ்மின்--—இதில்; ப்ரகாஶஹ----பிரகாசம்; உபஜாயதே--—வெளிப்படுகிறது; ஞானம்—--அறிவு; யதா--—எப்போது; ததா--—அப்போது; வித்யாத்--—அறிக; விவிருத்தம்—--மேலோங்குகிறது; ஸத்வம்--—நன்மையின் முறை; இதி--—இவ்வாறு; உத—--நிச்சயமாக; லோபஹ--—பேராசை; ப்ரவ்ரித்திஹி--—செயல்பாடு; ஆரம்பஹ--—கடுமுயற்சி; கர்மணாம்--—பலன் தரும் செயல்கள்; அஶமஹ----அமைதியின்மை; ஸ்ப்ருஹா—--ஏங்குதல்; ரஜஸி---—ஆர்வத்தின் முறையில்; ஏதானி--—இவை; ஜாயந்தே—--தோன்றுகின்றன; விவ்ருத்தே--—மேலோங்கும் போது; பரத-ரிஷபா----பரத குலத்தினரில் சிறந்தவர், அர்ஜுனன்; அப்ரகாஶஹ--—அறிவின்மை; அப்ரவ்ரித்திஹி--—மந்தநிலை; ச--—மற்றும்; ப்ரமாதஹ--— அக்கறையின்மை; மோஹஹ--—மாயை; ஏவ—--உண்மையில்; ச--—மேலும்; தாமஸி—--அறியாமையின் முறையில்; ஏதானி—--இவை; ஜாயந்தே--—வெளிப்பபடுகின்றன; விவ்ருத்தே--—மேலோங்கும் போது; குரு—நந்த--– குரு வம்சத்தினருக்கு உவகை அளிக்கும், அர்ஜுனன்

Translation

BG 14.11-13: உடலின் அனைத்து வாயில்களும் அறிவால் ஒளிரும் போது, ​​அதை நன்மை முறையின் (ஸத்வகுணம்) வெளிப்பாடாகக் கருதவும். உணர்ச்சி முறை (ரஜோ குணம்) மேலோங்கும் போது, ​​அர்ஜுனா! மோகம் பேராசை, உலக இன்பங்களுக்காக உழைப்பு, அமைதியின்மை மற்றும் ஏக்கம் ஆகியவற்றின் அறிகுறிகள் உருவாகின்றன. அர்ஜுனா! செயலற்ற தன்மை, கவனக்குறைவு மற்றும் குழப்பம் ஆகியவை அறியாமை முறையின் (தமோ குணம்) முக்கிய அறிகுறிகளாகும்.

Commentary

மூன்று குணங்கள் ஒரு உயிரினத்தின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் வலியுறுத்துகிறார். நன்மை முறை (சத்வகுணம்) நற்பண்புகளின் வளர்ச்சிக்கும் அறிவின் ஒளிக்கும் வழிவகுக்கிறது . உணர்ச்சி முறை (ரஜோகுணம்) பேராசை மற்றும் உலக சாதனைகளுக்கான அதிகப்படியான செயல்களில் ஈடுபாடு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கிறது. அறியாமை முறையின் காரணமாக புத்தியில் குழப்பம், சோம்பேறித்தனம், போதையில் ஆர்வம், வன்முறை போன்றவை எழுகின்றன.

உண்மையில், இந்த குணங்கள் கடவுள் மற்றும் ஆன்மீக பாதை மீதான நமது அணுகுமுறையையும் பாதிக்கின்றன. ஒரு உதாரணத்தைச் சொல்வதானால், நல்ல குணம் மனதில் இடம்பிடிக்கும் போது, ​​'எனது குருவிடமிருந்து நான் மிகவும் அருளைப் பெற்றுள்ளேன்' என்று நாம் நினைக்கலாம். மனித பிறப்பு விலைமதிப்பற்றது மற்றும் சாதாரணமான நாட்டகங்களில் வீணடிக்கக் கூடாது என்பதால் எனது ஆத்மீக பயிற்சியில் விரைவாக முன்னேற நான் முயற்சிக்க வேண்டும்.’ என்று நாம் நினைக்கலாம். உணர்ச்சி முறை (ரஜோ குணம்) முக்கியத்துவம் பெறும்போது, ​​'நான் நிச்சயமாக ஆன்மீகப் பாதையில் முன்னேற வேண்டும், ஆனால் என்ன அவசரம்? தற்போது, ​​எனக்கு பல பொறுப்புகள் உள்ளன, அவை மிகவும் முக்கியமானவை.’ என்று நாம் நினைக்கலாம். அறியாமை ஆதிக்கம் செலுத்தும் போது, ​​நாம் நினைக்கலாம், 'கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை, ஏனென்றால் அவரை யாரும் பார்த்ததில்லை. அப்படியிருக்க, ஆன்மீக பயிற்சியில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?’ அதே நபரின் எண்ணங்கள் எவ்வளவு உயரத்திலிருந்து பக்தியின் ஆழத்திற்கு ஊசலாடுகின்றன என்பதைக் கவனியுங்கள்.

மூன்று குணங்களால் மனம் ஏற்ற இறக்கம் அடைவது மிகவும் இயற்கையானது. இருப்பினும், இந்த நிலைமையால் நாம் சோர்ந்துவிடக் கூடாது; மாறாக, அது ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கு மேல் உயர முயற்சிக்க வேண்டும். பயிற்சி என்பது மனதில் உள்ள மூன்று குணங்களின் ஓட்டத்துடன் போராடி, கடவுள் மற்றும் குருவின் மீதான பக்தி உணர்வுகளைத் தக்க வைத்துக் கொள்வது. நம் உணர்வு நாள் முழுவதும் உயர்ந்த உணர்வில் இருந்தால், ஆன்மீகப் பயிற்சி தேவையில்லை. மனதின் இயல்பான உணர்வுகள் உலகத்தை நோக்கிச் சாய்ந்தாலும், புத்தியைக் கொண்டு, நாம் அதை ஆன்மீகத் துறையில் நிலைநிறுத்த முயல வேண்டும். ஆரம்பத்தில், இது கடினமாகத் தோன்றலாம், ஆனால் நடைமுறையில் இது எளிதானது. முதலில் கார் ஓட்டுவது எப்படி சிரமமாக இருக்கிறதோ, அதே போல் பயிற்சி செய்தால் அது இயல்பாகிவிடும்.

ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது மூன்று குணங்களால் அருளப்பட்ட இடங்களையும், இந்த குணங்களைக் கடந்து செல்வதை நமது இலக்காகக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் விளக்கத் தொடங்குகிறார்.