Bhagavad Gita: Chapter 1, Verse 32-33

ந கா1ங்க்ஷே விஜயம் க்1ருஷ்ண ந ச1 ராஜ்யம் ஸுகா2னி ச1 |
கி1ம் னோ ராஜ்யேன கோ3விந்த3 கி1ம் போ4கை3ர்ஜீவிதே1ன வா ||
32 ||
யேஷாமர்தே2 கா1ங்க்ஷித1ம் னோ ராஜ்யம் போ4கா3:ஸுகா2னி ச1 |
1 இமே‌வஸ்தி2தா1 யுத்3தே4 ப்1ராணான்ஸ்த்1யக்1த்1வா த4னானி ச1 ||33||

ந----ஒரு பொழுதும் இல்லை; காங்க்ஷே----விரும்புகிறேன்;; விஜயம்-—-வெற்றியையோ; க்ருஷ்ண---ஓ க்ருஷ்ணா;  ந---ஒரு பொழுதும் இல்லை ச---அல்லது;  ராஜ்யம்--—ராஜ்யத்தையோ; ஸுகானி----இன்பங்களையோ; ச—--மற்றும்; கிம்—--என்ன; நஹ---நமக்கு; ராஜ்யேன—-ராஜ்யத்தினால் கோவிந்த---புலன்களுக்கு இன்பமளிக்கும் மற்றும் பசுக்களிடம் அன்பு செலுத்தும் ஶ்ரீ கிருஷ்ணர்;  கிம்—--என்ன போகைஹி---இன்பங்களிலோ; ஜீவிதேன---வாழ்வதிலோ;  வா---அல்லது; யேஷாம்-—-எவர்;  அர்தே---பொருட.டு;  காங்க்ஷிதம்----எதிர்பார்க்கப்படும்;  நஹ---நம்மால்;  ராஜ்யம்----ராஜ்யம்; போகாஹா--—இன்பங்கள்; ஸுகானி---மகிழ்ச்சி; ச--—மற்றும்; தே-—அவர்கள் இமே--—இந்த; அவஸ்திதாஹா----இருக்கும்; யுத்தே—-போரில்; ப்ராணான்—--உயிரையும்; த்யக்த்வா—--இழக்க; தனானி---பொருளையும்; ச—-மற்றும் (ந காங்க்ஷே—-விரும்பவில்லை)

Translation

BG 1.32-33: ஓ கிருஷ்ணா, எனக்கு ராஜ்யம் மற்றும் வெற்றியை அடைவதிலும் மற்றும் அவற்றினால் வரும் மகிழ்ச்சியிலும் விருப்பமில்லை. நாம் யாருக்காக ஆவலுடன் ராஜ்யம், இன்பங்கள், தவிர இந்த வாழ்க்கையையே வாழ விரும்புகிறோமோ அவர்களே நம்முன் போரிட நிற்கும்பொழுது இந்த ராஜ்யம், இன்பங்கள், தவிர வாழ்க்கையின் பயன் தான் என்ன?

Commentary

ஒருவரை கொல்வது என்பது பாவச்செயலாகும். மேலும் ஒருவரின் உறவினர்களைக் கொல்வது இன்னும் மோசமான செயலாக கருதப்படுவதால் அர்ஜுனனின் குழப்பம் மேலோங்கியது. இப்படிப்பட்ட இதயமற்ற செயலில் ஈடுபட்டாலும் அந்த வெற்றி தனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று அர்ஜுனன் உணர்ந்தார். இந்த வெற்றியை அடைய அவர் கொல்ல வேண்டிய அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அந்த வெற்றியின் பெருமையை பகிர்ந்து கொள்ள முடியாது.

இங்கே, அர்ஜுனன் தனது தாழ்ந்த உணர்வுகளை உன்னதமான உணர்வுகளோடு ஒப்பிட்டு குழப்பம் அடைகிறார். உலக உடைமைகள் மற்றும் பொருள் சேமிப்பு பற்றிய அலட்சியமான போக்கு போற்றத்தக்க ஆன்மீக நற்பண்பு. ஆனால், அர்ஜுனன் ஆன்மீக உணர்வுகளை அனுபவிக்க வில்லை. மாறாக அவரது மாயை போலித்தனமான இரக்க வார்த்தைகளாக மாறிவிட்டது. நல்லொழுக்க உணர்வுகள் உள் நல்லிணக்கத்தையும், திருப்தியையும், ஆன்மாவின் மகிழ்ச்சியையும் தருகின்றன. அர்ஜுனனின் இரக்க உணர்வானது ஆழ்நிலை உணர்வை அடிப்படையாகக் கொள்ளவில்லை. அவரது இரக்கம் ஆழ்நிலை உணர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தால் அந்த உணர்வால் அவர் உயர்த்தப்பட்டு இருப்பார். ஆனால் அவரது அனுபவம் முற்றிலும் நேர்மாறானது--எனவே, கையில் இருக்கும் பணியில் அதிருப்தி மற்றும் ஆழ்ந்த மகிழ்ச்சி அற்று அவர் தனது மனதிலும் புத்தியிலும் முரண்பாட்டை உணர்கிறார். அவரது உணர்வின் விளைவு, அவரின் இரக்கம் மாயையிலிருந்து உருவானது என்பதைக் குறிக்கிறது.

Watch Swamiji Explain This Verse