Bhagavad Gita: Chapter 1, Verse 34-35

ஆசா1ர்யா: பி11ர: பு1த்1ராஸ்த1தை2வ ச1 பி1தா1மஹா: |

மாது1லா: ஶ்வஶுரா: பௌ1த்1ரா: ஶ்யாலா: ஸம்ப3ன்தி4னஸ்த1தா2 ||34||
ஏதா1ன்ன ஹன்து1மிச்1சா2மி க்4னதோ1‌பி1 மது4ஸூத3ன |

அபி1 த்1ரைலோக்1யராஜ்யஸ்ய ஹேதோ1:கிம் னு மஹீக்1ருதே1 ||35||

ஆசார்யாஹா-—ஆசிரியர்கள்; பிதரஹ--—தந்தையார்; புத்ராஹா--—மகன்கள்;  ததா--—மற்றும்;  ஏவ-—தவிர;  ச-—மற்றும்; பிதாமஹாஹா-—தந்தை வழி பாட்டனார்கள்;  மாதுலாஹா-—-தாய்மாமன்கள்; ஶ்வஶுராஹா-—மாமனார்கள்;  பௌத்ராஹா-—பேரன்கள்;  ஶ்யாலாஹா-—மைத்துனர்கள்;  ஸம்பன்தினஹ-—சம்பந்திகள்; ததா—-மற்றும்;  ஏதான்-—-இவர்களை; ;  ந----ஒரு பொழுதும் இல்லை; ஹன்தும்-—-கொல்ல;  இச்சாமி----நான் விரும்புகிறேன்; க்னதஹ---கொல்லப்பட்டாலும்; அபி;---- கூட’; மதுஸூதன--—மது என்ற அரக்கனை கொன்ற ஓ மதுஸூதனா; அபி----மேலும்; த்ரை-லோக்ய-ராஜ்யஸ்ய—மூவுலக ஆதிக்கத்தின்;  ஹேதோஹோ-—பொருட்டு; கிம் னு—--பற்றி என்ன சொல்வது; மஹீக்ருதே-—பூமியின் ஆதிக்கத்திற்கு (ந-இச்சாமி---நான் விரும்பவில்லை)

Translation

BG 1.34-35: இங்கு தங்களது ஐஸ்வர்ய சம்பத்து மற்றும் வாழ்க்கையையே பணயம் வைத்த ஆசிரியர்கள், தந்தைகள், மகன்கள், தாத்தாக்கள், தாய்வழி மாமன்கள், பேரன்கள், மாமனார்கள், பேர மருமகன்கள், மைத்துனர்கள், மற்றும் மற்ற உறவினர்கள் கூடியுள்ளனர். ஓ மதுசூதனா, அவர்கள் என்னை தாக்கினாலும் நான் அவர்களை அழிக்க விரும்பவில்லை. நாம்  த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் அடையும் மூவுலக ஆதிக்கத்தின் பயன் தான் என்ன? பூமியின் ஆதிக்கத்தை பற்றி என்ன சொல்வது?

Commentary

துரோணாச்சாரியரும், கிருபாச்சாரியரும் அர்ஜுனின் ஆசிரியர்கள்; பீஷ்மரும் சோமதத்தரும் அவருடைய மாமாக்கள்; பூரிஷ்ரவரும் (சோமதத்தரின் மகன்) ஆகியோர் அவருடைய தந்தையைப் போன்றவர்கள்; புருஜிதன், குந்திபோஜன், ஶ்ல்யன் மற்றும் சகுனி ஆகியோர் அவரது தாய்வழி மாமன்கள்; த்ருதராஷ்டிரரின் நூறு மகன்கள் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள்; லக்ஷ்மணன் (துரியோதனனின் மகன்) அவருடய குழந்தையைப் போன்றவன். அர்ஜுனன் போர்க்களத்தில் இருக்கும் தனது பல்வேறு உறவினர்களைக் குறிப்பிடுகிறார். ‘இருந்தாலும்’ என்று பொருள்படும் அபி என்ற வார்த்தையை அவர் இருமுறை பயன்படுத்துகிறார். முதலாவதாக, ‘நான் அவர்களுடைய உறவினனாகவும், நலன் விரும்பியாகவும் இருந்தாலும், அவர்கள் ஏன் என்னைக் கொல்ல விரும்புகிறார்கள்?’ இரண்டாவதாக, ‘அவர்கள் என்னைக் கொல்ல ஆசைப்பட்டாலும், நான் ஏன் அவர்களைக் கொல்ல வேண்டும்?’

Watch Swamiji Explain This Verse