வேப1து2ஶ்ச1 ஶரீரே மே ரோமஹர்ஷஶ்ச1 ஜாயதே1 || 29 ||
கா3ண்டீ3வம் ஸ்ரம்ஸதே1 ஹஸ்தா1த்1த்1வக்1சை1வ ப1ரித3ஹ்யதே1 |
ந ச1 ஶக்1னோம்யவஸ்தா2து1ம் ப்4ரமதீ1வ ச1 மே மன: || 30 ||
நிமித்1தா1னி ச1 ப1ஶ்யாமி விப1ரீதா1னி கே1ஶவ |
ந ச1 ஶ்ரேயோனுப1ஶ்யாமி ஹத்1வா ஸ்வஜனமாஹவே || 31 ||
வேபதுஹு—--நடுங்குகிறது; ச—-மற்றும்; ஶரீரே-—-உடலில்; மே-—என்; ரோமஹர்ஷஶ்ச ஜாயதே-— மயிர்கூச்செரிகிறது; காண்டீவம்-—-அர்ஜுனனின் வில்; ஸ்ரம்ஸதே--—நழுவுகிறது; ஹஸ்தாத்-—(என்) கைகளிலிருந்து; த்வக்-—சருமம்; ச-—மற்றும்; ஏவ----மிகவும்; பரிதஹ்யதே—--எரிகின்றது; ந---ஒருபோதும் இல்லை ச--—மற்றும்; ஶக்னோமி-—-என்னால் இயலும்; அவஸ்தாதும்--—நிலையாக நிற்க; ப்ரமதீ இவ—-சுழல்வது போல்; ச--—மற்றும்; மே---என் மனஹ----மனம்; நிமித்தானி-—-சகுனங்களை; ச--—மற்றும்; பஶ்யாமி----பார்க்கின்றேன்; விபரீதானி—--துரதிருஷ்டவசமான; கேஶவ---கேஶீ எனும் அரக்கனை அழித்த ஶ்ரீ கிருஷ்ணர்; ந---ஒருபோதும் இல்லை; ச—மற்றும்; ஶ்ரேயஹ—-நல்லதை; அனுபஶ்யாமி----எதிர்நோக்குகிறேன்; ஹத்வா----அழித்து; ஸ்வஜனம்----நம்முடையவர்களை; ஆஹவே—--போரில் (ந—ஶக்னோமி—-என்னால் இயலவில்லை; ந-அனுபஶ்யாமி---முன்பார்க்கவில்லை)
Translation
BG 1.29-31: என் உடல் முழுதும் சிலிர்த்து நடுங்குகிறது. எனது வில்லான ‘கா3ண்டீ3வ1ம்’ என் கையிலிருந்து நழுவுகிறது; எனது சருமம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. ஊசலடும் என் மனம் குழப்பத்தில் சுழல்கிறது. என்னால் இனி என்னை நிலையாக வைத்திருக்க முடியவில்லை. கேஶீ என்ற அரக்கனை கொன்ற ஓ கிருஷ்ணா, நான் துரதிருஷ்டவசமான சகுனங்களை மட்டுமே பார்க்கிறேன். இந்த போரில் எனது சொந்த உறவினர்களைக் கொல்வதால் எந்த பயனும் வரும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.
Commentary
போரின் பின் விளைவுகளை நினைத்து அர்ஜுனன் கவலையும் வருத்தமும் அடைந்தார். சக்தி வாய்ந்த எதிரிகளை பயமுறுத்திய அதே காண்டீபம் என்ற அவரது வில் அவருடைய கையில் இருந்து நழுவ தொடங்கியது போரிடுவதை பாவச் செயலாக எண்ணிய அவர் மனம் தவித்தது. இந்த நிலையற்ற மனநிலையில், பேரழிவுகரமான தோல்விகளையும் உடனடி விளைவுகளையும் முன்னறிவிக்கும் மூட நம்பிக்கையான சகுனங்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அவர் இறங்கினார்.