அவ்யக்1தோ1க்ஷர இத்1யுக்1த1ஸ்த1மாஹு: ப1ரமாம் க3திம் |
யம் ப்1ராப்1ய ந நிவர்த1ன்தே1 த1த்3தா4ம ப1ரமம் மம ||21||
அவ்யக்தஹ---வெளிப்படாத; அக்ஷரஹ—-அழியாத; இதி--—இவ்வாறு; உக்தஹ—--கூறப்படுகிறது; தம்--—அந்த; ஆஹுஹு-—அழைக்கப்படுகின்றது; பரமாம்--—உயர்ந்த; கதிம்--—இலக்கை; யம்--—எதை; ப்ராப்ய--—அடைந்த பின்; ந--—ஒருபொழுதும் இல்லை; நிவர்தந்தே-—திரும்பி வருவர்; தத்—-அது; தாம--—வசிப்பிடம்; பரமம்—--உயர்ந்த; மம--என்னுடைய
Translation
BG 8.21: அந்த வெளிப்படுத்தப்படாத பரிமாணமே மிக உயர்ந்த இலக்காகும், அதை அடைந்தவுடன், இந்த மரண உலகத்திற்கு ஒருவர் திரும்புவதில்லை. அதுவே எனது உயர்ந்த இருப்பிடம்.
Commentary
ஆன்மீக மண்டலத்தின் தெய்வீக ஆகாயம் பரவ்யோம் என்று அழைக்கப்படுகிறது. கோலோகம் (ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடம்), ஸாகேத1 லோகம் (ஸ்ரீ ராமரின் இருப்பிடம்), வைகுண்ட லோகம் (நாராயணனின் இருப்பிடம்), சிவ லோகம் (சதாசிவனின் இருப்பிடம்), தேவி லோகம் (துர்க்கையின் இருப்பிடம்) முதலிய கடவுளின் வெவ்வேறு வடிவங்களின் நித்திய உறைவிடங்கள் இதில் உள்ளன. இந்த லோகங்களில், ஒப்புயர்வற்ற பகவான் தனது நித்திய கூட்டாளிகளுடன் தனது தெய்வீக வடிவங்களில் நித்தியமாக வசிக்கிறார். கடவுளின் இந்த அனைத்து வடிவங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அல்ல; அவை ஒரே கடவுளின் பல்வேறு வடிவங்கள். கடவுளின் எந்த வடிவத்தை ஒருவர் வணங்குகிறாரோ, கடவுளை உணர்ந்தவுடன், அந்த கடவுளின் இருப்பிடத்திற்குச் செல்கிறார். அந்த உறைவிடத்தில் ஒரு தெய்வீக உடலைப் பெற்ற பிறகு, ஆன்மா பின்னர் நித்தியம் இறைவனின் தெய்வீக செயல்பாடுகளிலும் பொழுதுபோக்கிலும் பங்கேற்கிறது.