Bhagavad Gita: Chapter 8, Verse 18

அவ்யக்1தா1த்3வ்யக்11ய: ஸர்வா: ப்1ரப4வன்த்1யஹராக3மே |

ராத்1ர்யாக3மே ப்1ரலீயன்தே11த்1ரைவாவ்யக்11ஸந்ஞகே1 ||18||

அவ்யக்தாத்---வெளிப்படுத்தப்படாதவற்றிலிருந்து; வ்யக்தயஹ--—வெளிப்படுத்தப்பட்டது; ஸர்வாஹா--—அனைத்தும்; ப்ரபவந்தி--—வெளிப்படுகின்றன; அஹஹ--ஆகமே--—ப்ரஹ்மாவின் பகலின் வருகையில்; ராத்ரி—ஆகமே—ப்ரஹ்மாவின் இரவின் வீழ்ச்சியில்; ப்ரலீயந்தே-—அவை கரைகின்றன; தத்ர-—அதற்குள்; ஏவ--—நிச்சயமாக; அவ்யக்த-ஸஞ்ஞகே--—வெளிப்படாதது என்று அழைக்கப்படுவதில்

Translation

BG 8.18: ப்3ரஹ்மாவின் நாளின்தோற்றத்தில், அனைத்து உயிரினங்களும் வெளிப்படையான மூலத்திலிருந்து வெளிப்படுகின்றன. மேலும் அவரது இரவில், அனைத்து உடலமைந்த உயிரினங்களும் மீண்டும் அவற்றின் வெளிப்படுத்தப்படாத மூலத்தில் ஒன்றிணைகின்றன.

Commentary

பிரபஞ்சத்தின் அற்புதமான இயலுலக அண்டத்துக்குரிய விளையாட்டில், பல்வேறு உலகங்களும் (இருப்பு தளங்கள்) மற்றும் அவற்றின் கிரக அமைப்புகளும் மீண்டும் மீண்டும் உருவாக்கம், (ஷ்ருஷ்டி1, பாதுகாத்தல் ஸ்தி2தி1 மற்றும் கலைத்தல் (ப்1ரளய) சுழற்சிகளுக்கு உட்படுகின்றன. ப்3ரஹ்மாவின் நாளின் முடிவில், 4,320,000,000 வருடங்களின் ஒரு கல்பத்திற்குப் பொருத்தமாக, மஹர் லோக் வரையிலான அனைத்து கிரக அமைப்புகளும் அழிக்கப்படுகின்றன. இது நைமித்1தி1க்1 ப்1ரளய (பகுதி கரைதல்) என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீமத் பாகவதத்தில், ஸுகதேவ் பரீக்ஷித்திடம் கூறுகிறார், ஒரு குழந்தை பகலில் பொம்மைகளைக் கொண்டு கட்டிடங்களை உருவாக்கி, தூங்கும் முன் அவற்றை அகற்றுவதைப் போலவே, ப்ரஹ்மா எழுந்ததும் கிரக அமைப்புகளையும் அவற்றின் வாழ்க்கை முறைகளையும் உருவாக்கி தூங்குவதற்கு முன் அவற்றை அகற்றுகிறார்.

ப்ரஹ்மாவின் நூரு ஆண்டுகால வாழ்வின் முடிவில், முழுப் பிரபஞ்சமும் கரைகின்றது. இந்த நேரத்தில், முழு பொருள் உருவாக்கமும் முடிவடைகிறது. பஞ்ச மஹா பூதங்கள் பஞ்ச தன்மாத்திரங்களிலும், பஞ்சதன்மாத்திரங்கள் அஹங்காரத்திலும், அஹங்கார் மஹானிலும், மஹான் ப்ரகிருதியிலும் இணைகிறது. ப்ரகிருதி என்பது பொருள் ஆற்றலின் நுட்பமான வடிவம், மாயா. பிறகு, மாயா, மகா விஷ்ணுவின் உடலில் சென்று அமர்ந்து கொள்கிறது. இது ப்1ராக்1ரித்1 பிரளய அல்லது மஹா ப்1ரளய (பெரிய கலைப்பு) என்று அழைக்கப்படுகிறது. மீண்டும், மகா விஷ்ணு படைக்க விரும்பும்பொழுது, ​​அவர் ப்ரகிருதியின் வடிவில் உள்ள ஜட சக்தியைப் பார்க்கிறார், அவருடைய வெறும் பார்வையால், அது வெளிவரத் தொடங்குகிறது. ஆகாஶ கங்கையில் நூரு பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாக நவீன கால விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். ஆகாஶ கங்கையைப் போலவே, பிரபஞ்சத்தில் நூரு கோடி . விண்மீன் திரள்கள் உள்ளன. எனவே, விஞ்ஞானிகளின் மதிப்பீட்டின்படி, நமது பிரபஞ்சத்தில் 1020 நட்சத்திரங்கள் உள்ளன. வேதங்களின்படி, நமது பிரபஞ்சத்தைப் போலவே, பல்வேறு அளவுகள் மற்றும் அம்சங்கள் கொண்ட எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் மகாவிஷ்ணு மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்பொழுது வரம்பற்ற பிரபஞ்சங்கள் அவரது உடலின் துளைகளிலிருந்து வெளிப்படுகின்றன, மேலும் ஸ்ரீமகாவிஷ்ணு மூச்சுக் காற்றை வெளியேற்றும் பொழுது, ​​அனைத்து பிரபஞ்சங்களும் கரைந்துவிடும். ஆக, ப்ரஹ்மாவின் நூறு வருடங்கள் மகா விஷ்ணுவின் ஒரு மூச்சுக்கு சமம். ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் ஒரு ப்ரஹ்மா, ஒரு விஷ்ணு, ஒரு சங்கர். ஆக, எண்ணற்ற பிரபஞ்சங்களில் எண்ணற்ற ப்ரஹ்மாக்கள், விஷ்ணுக்கள் மற்றும் சங்கரர்கள் உள்ளனர் . அனைத்து பிரபஞ்சங்களிலும் உள்ள அனைத்து விஷ்ணுக்களும் மகா விஷ்ணுவின் விரிவாக்கங்கள்.