அப்4யாஸயோக3யுக்1தே1ன சே1த1ஸா நான்யகா1மினா |
ப1ரமம் பு1ருஷம் தி3வ்யம் யாதி1 பா1ர்தா2னுசின்த1யன் ||8||
அப்யாஸ—யோக--—யோக பயிற்சியால்; யுக்தேன--—நினைவுடன் தொடர்ந்து ஈடுபடுவது; சேதஸா-—-மனத்தால்; ந அன்ய-காமினா--—விலகாமல்; பரமம் புருஷம்--—உயர்ந்த தெய்வீக ஆளுமையை; திவ்யம்-—தெய்வீகத்தை; யாதி-—ஒருவன் அடைகிறான்; பார்த-—ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; அனுசிந்தையன்——நிலையான நினைவுடன்
Translation
BG 8.8: ஓ பார்த், பயிற்சியின் மூலம், உன்னத தெய்வீக புருஷனான என்னை நினைவு செய்வதில் நீ தொடர்ந்து மனதை விலகாமல் ஈடுபடுத்தும்பொழுது, நீ நிச்சயமாக என்னை அடைவாய்.
Commentary
மனதை எப்பொழுதும் கடவுளை தியானிப்பதில் ஈடுபடுத்திக் கொள்வதற்கான இந்த அறிவுறுத்தல் பகவத் கீதையில் பலமுறை திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது.
இதோ ஒரு சில வசனங்கள்:
அனன்ய-சே1தா1ஹா ஸத1த1ம்
தே3ஷாம் ஸத1த1 -யுக்1தா1னாம் (10.10)
மயி ஏவ மன ஆத4த்1ஸ்வ (12.8)
அப்4யாஸ என்ற வார்த்தையின் அர்த்தம் பயிற்சி- கடவுளை தியானிக்க மனதை பயிற்றுவித்தல். இத்தகைய பயிற்சியானது. நாளின் குறிப்பிட்ட நேரங்களைச் சீரான இடைவெளியில் செய்யாமல், தொடர்ந்து, வாழ்க்கையின் அனைத்து அன்றாட நடவடிக்கைகளுடன் செய்ய வேண்டும்.
மனமானது இறைவனிடம் இணைந்தால், உலகியல் கடமைகளைச் செய்யும்பொழுதும் அது தூய்மை அடையும். நம் எதிர்காலத்தை வடிவமைப்பது நம் உடலுடன் நாம் செய்யும் செயல்கள் அல்ல நம் எண்ணங்கள் தான் என்பதை நினைவில் கொள்வது அவசியம். பக்தியில் ஈடுபடுவது மனமே, கடவுளிடம் சரணடைவதும் மனமே. கடவுளில் உள்ள உணர்வு முழுமையடைந்தால், ஒருவர் தெய்வீக அருளைப் பெறுவார். கடவுளின் அருளால், ஒருவர் பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவார், மேலும் எல்லையற்ற தெய்வீக பேரின்பம், தெய்வீக அறிவு மற்றும் கடவுளின் தெய்வீக அன்பு ஆகியவற்றைப் பெறுவார். அத்தகைய ஆத்மா இந்த உடலிலேயே கடவுளை உணர்ந்து, உடலை விட்டு வெளியேறி, கடவுளின் இருப்பிடத்திற்குச் செல்லும்.