Bhagavad Gita: Chapter 8, Verse 23-26

யத்1ர கா1லே த்1வனாவ்ருத்1தி1மாவ்ருத்1தி1ம் சை1வ யோகி3ன: |
ப்1ரயாதா1 யான்தி11ம் கா1லம் வக்ஷ்யாமி ப4ரத1ர்ஷப4 ||23||
அக்1னிர்ஜ்யோதி1ரஹ: ஶுக்1ல: ஷண்மாஸா உத்11ராயணம் |

1த்1ர ப்1ரயாதா13ச்12ன்தி1 ப்3ரஹ்ம ப்3ரஹ்மவிதோ3 ஜனா: ||24||
தூ4மோ ராத்1ரிஸ்த1தா2 க்1ருஷ்ண: ஷண்மாஸா த3க்ஷிணாயனம் |

1த்1ர சா1ந்த்3ரமஸம் ஜ்யோதி1ர்யோகீ3 ப்1ராப்1ய நிவர்த1தே1 ||25||
ஶுக்1லக்1ருஷ்ணே க3தீ1 ஹ்யேதே1 ஜக31: ஶாஶ்வதே1 மதே1|

ஏக1யா யாத்1யனாவ்ருத்1தி1மன்யயாவர்த1தே1 பு1ன: ||26||

யத்ர—--எங்கே; காலே--—நேரம்; து--—நிச்சயமாக; அனாவ்ருத்திம்--—திரும்புவதில்லை; ஆவ்ருத்திம்--— திரும்புகிறார்கள்; ச--—மற்றும்; ஏவ--—நிச்சயமாக; யோகினஹ-— யோகிகள்; ப்ரயாதாஹா-—-இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்பவர் புறப்பட்டு; யாந்தி-—- இலக்கை அடைகிறார்கள் ; தம்-—அந்த; காலம்-—நேரம்; வக்ஷ்யாமி--—நான் விவரிக்கிறேன்; பரத-ரிஷபா--—பரதர்களில் சிறந்த அர்ஜுனன்; அக்னிஹி-—நெருப்பு; ஐ்யோதிஹி-—ஒளி; அஹஹ--—நாள்; ஶுக்லஹ--—சந்திரனின் பிரகாசமான பதினைந்து நாட்கள்; ஷட்—மாஸாஹா----ஆறு மாதங்கள்; உத்தர--—அயனம்—சூரியனின் வடக்குப் பாதை; தத்ர---—அங்கே; ப்ரயாதாஹா--—புறப்பட்டவர்கள்; கச்சந்தி-—செல்வார்கள்; ப்ரஹ்ம--—ப்ரஹ்மன்; ப்ரஹ்ம—விதஹ--—ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள்; ஜனாஹா--—நபர்கள்; தூமஹ---புகை; ராத்ரிஹி--—இரவு; ததா--—மற்றும்; க்ருஷ்ணஹ—--சந்திரனின் இருண்ட பதினைந்து நாட்கள்; ஷட்—மாஸாஹா——ஆறு மாதங்கள்; தக்ஷிண—அயனம்——சூரியனின் தெற்குப் பாதை; தத்ர--—அங்கே; சாந்த்ர-மஸம்--—சந்திர; ஐ்யோதிஹி--—ஒளி; யோகீ-—ஒரு யோகி; ப்ராப்ய---—அடைந்தவர்; நிவர்ததே-—மீண்டும் வருகிறார்; ஶுக்ல--—பிரகாசமான; க்ருஷ்ணே--—இருண்ட; கதீ--—பாதைகள்; ஹி-—நிச்சயமாக; ஏதே-—இவை; ஜகதஹ-—பொருள் உலகத்தின்; ஶாஶ்வதே-—நித்தியமான; மதே-—கருத்து; ஏகயா-—ஒன்றால்;யாதி-—செல்பவர்; அனாவ்ருத்திம்-—திரும்பி வருவதில்லை; அநந்யயா-—மற்றதால்; ஆவர்ததே-—திரும்பி வருகிறார்; புனஹ-—மீண்டும்

Translation

BG 8.23-26: பரத வம்சத்தினரின் சிறந்தவனே, இவ்வுலகை விட்டுச் செல்வதற்கான பல்வேறு வழிகளை நான் இப்பொழுது விவரிக்கிறேன், அவற்றில் ஒன்று விடுதலைக்கும் மற்றொன்று மறுபிறப்புக்கும் வழிவகுக்கும். பரம ப்ரஹ்மனை அறிந்து, மற்றும் சூரியனின் வடக்குப் பாதையின் ஆறு மாதங்களிலும், சந்திரனின் பிரகாசமான பதினைந்து நாட்களிலும், பகலின் பிரகாசமான பகுதியிலும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லுபவர்கள், உயர்ந்த இலக்கை அடைகிறார்கள். சூரியனின் தென்கோடியில் ஆறுமாதங்கள், சந்திரனின் இருண்ட பதினைந்து நாட்கள், புகைக்காலம், இரவு ஆகிய ஆறுமாதங்களில் வேதநெறிகளை கடைப்பிடிப்பவர்கள் தேவலோக உறைவிடங்களை அடைகிறார்கள். தேவலோக இன்பங்களை அனுபவித்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார்கள். இந்த இரண்டு, பிரகாசமான மற்றும் இருண்ட பாதைகள், எப்பொழுதும் இந்த உலகில் உள்ளன. ஒளியின் வழி விடுதலைக்கும், இருளின் வழி மறுபிறப்புக்கும் வழிவகுக்கும்.

Commentary

இந்த வசனங்களில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்று, 8.2 ஆம் வசனத்தில் கேட்ட‘இறப்பின் பொழுது நாங்கள் உங்களுடன் எப்படி ஐக்கியமாக முடியும்?’ என்ற அர்ஜுனனின் கேள்விக்கு இன்னும் உரியதாக இருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டு பாதைகள் இருப்பதாக கூறுகிறார் - ஒளியின் பாதை மற்றும் இருளின் பாதை. இங்கே, சற்றே மறைவான கூற்றுகளில், ஒளி மற்றும் இருளின் கருப்பொருள்களைச் சுற்றியுள்ள ஆன்மீகக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான உருவகத்தை நாம் அறியலாம்.

ஆறு மாத சூரியனின் வடக்கு கதிர் திருப்பம், சந்திரனின் பிரகாசமான பதினைந்து நாட்கள் மற்றும் பகலின் பிரகாசமான பகுதி அனைத்தும் ஒளியால் வகைப்படுத்தப்படுகின்றன. ஒளி அறிவைக் குறிக்கிறது, இருள் அறியாமையைக் குறிக்கிறது. ஆறு மாத சூரியனின் தெற்கு கதிர் திருப்பம் மாதங்கள், சந்திரனின் இருண்ட பதினைந்து நாட்கள், இரவு, இவை அனைத்தும் இருளின் பொதுவான தன்மையைக் கொண்டுள்ளன. யாருடைய உணர்வுகள் கடவுளில் நிலைநிறுத்தப்பட்டு, சிற்றின்பத் நாட்டங்களில் இருந்து விலகியதோ, அவர்கள் ஒளியின் பாதையில் (பாகுபாடு மற்றும் அறிவு) புறப்படுகிறார்கள். கடவுள்-உணர்வில் நிலைத்திருப்பதால், அவர்கள் கடவுளின் உன்னத இருப்பிடத்தை அடைந்து ஸம்ஸார சக்கரத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் யாருடைய உணர்வு உலகத்துடன் இணைந்திருக்கிறதோ, அவர்கள் இருளின் பாதையில் (அறியாமை) விலகிச் செல்கிறார்கள். வாழ்க்கையின் உடல் கருத்தாக்கத்திலும், கடவுளிடமிருந்து பிரிந்து செல்லும் மாயையிலும் சிக்கி, அவர்கள் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் தொடர்ந்து சுழல்கிறார்கள். அவர்கள் வேத சடங்குகளைச் செய்திருந்தால், அவர்கள் தற்காலிகமாக தேவலோக உறைவிடங்களுக்கு உயர்த்தப்பட்டு, பின்னர் பூமி கிரகத்திற்குத் திரும்ப வேண்டும். இவ்வாறே எல்லா மனிதர்களும் மரணத்திற்குப் பிறகு இரண்டு பாதைகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும். அவர்களின் கர்மாக்களின் படி, அவர்கள் பிரகாசமான பாதையில் செல்கிறார்களா அல்லது இருண்ட பாதையில் செல்கிறார்களா என்பது இப்பொழுது அவர்களைப் பொருத்தது.