நான்தோ1ஸ்தி1 மம தி3வ்யானாம் விபூ4தீ1னாம் ப1ரந்த1ப1 |
ஏஷ தூ1த்3தே3ஶத1ஹ ப்1ரோக்1தோ1 விபூ4தே1ர்விஸ்த1ரோ மயா ||40||
ந—-இல்லை; அந்தஹ-—முடிவு; அஸ்தி—--இருக்கிறது; மம---என்னுடைய; திவ்யானாம்----தெய்வீக; விபூதீனாம்---மகிமைகளின் வெளிப்பாடுகள்; பரந்தப---எதிரிகளை வென்ற, அர்ஜுனா; ஏஷஹ---இது; து---ஆனால்; உத்தேஶதஹ-----ஒரு சிறிய பகுதி; ப்ரோக்தஹ---விவரித்தவை; விபூதேஹே---(என்)மகிமைகளில்; விஸ்தரஹ---எண்ணொற்றாத; மயா---என்னால் (ந-அந்தஹ-அஸ்தி----முடிவில்லை
Translation
BG 10.40: எதிரிகளை வென்றவனே! என் தெய்வீக மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் உன்னிடம் சொன்னது என் நித்திய மகிமையின் அடையாளம் மட்டுமே.
Commentary
ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது தனது செல்வ செழிப்பின் தலைப்பை முடிக்கிறார். 20-39 வசனங்களில் இருந்து, அவர் தனது எண்ணற்ற ஐசுவரியங்களில் எண்பத்திரண்டு ஐசுவரியங்களை பற்றி விவரித்துள்ளார். இப்பொழுது அவர் பரந்த (விஸ்த1ரஹ) தலைப்பின் ஒரு பகுதியை (உத்3தே3ஶத1ஹ) மட்டுமே முன்வைத்ததாக கூறுகிறார்.
எல்லாமே இறைவனின் செல்வம் என்றால், இவற்றைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும் என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு , பதிலளிக்கும் விதமாக இந்த மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளன என்பதே பதில். மனம் இயற்கையாகவே சிறப்புகளை ஈர்க்கிறது, இதனால், இறைவன் தனது சக்திகளில் இந்த சிறப்புகளை வெளிப்படுத்தியுள்ளார். எப்பொழுது எங்கும் ஒரு விசேஷ மகிமை வெளிப்படுவதைக் காணும் போதெல்லாம், அதைக் கடவுளின் மகிமையாகக் கருதினால், நம் மனம் இயற்கையாகவே அவரிடம் கொண்டு செல்லப்படும். எவ்வாறாயினும், பெரிய மற்றும் சிறிய விஷயங்களில் எல்லாவற்றிலும் கடவுளின் மகிமை இருப்பதால், முழு உலகமும் நம் பக்தியை அதிகரிக்க எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை வழங்குவதாக ஒருவர் நினைக்கலாம். இந்தியாவிலுள்ள ஒரு பெயிண்ட் நிறுவனம், ‘நீங்கள் நிறங்களைப் பார்க்கும்போதெல்லாம், எங்களைப் பற்றி நினையுங்கள்’ என்று விளம்பரம் செய்யும். இந்நிலையில், ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்று, ‘எங்கே மகிமையின் வெளிப்பாட்டைக் கண்டாலும், என்னையே நினையுங்கள்’ என்று கூறுவதற்குச் சமம்.