Bhagavad Gita: Chapter 10, Verse 10

தே1ஷாம் ஸத11யுக்1தா1னாம் ப4ஜதா1ம் ப்1ரீதி1பூ1ர்வக1ம் |

3தா3மி பு3த்3தி4யோக3ம் த1ம் யேன மாமுப1யாந்தி1 தே1 ||10||

தேஷாம்—-அவர்களுக்கு; ஸதத--யுக்தானம்—எப்பொழுதும் உறுதியுடன்; பஜதாம்—--பக்தியில் ஈடுபடுபவர்கள்; ப்ரீதி-பூர்வகம்--—அன்புடன்; ததாமி--—நான் அளிக்கிறேன்; புத்தி-யோகம்—--தெய்வீக அறிவை; தம்--—அந்த; யேன--—இதன் மூலம்; மாம்--—என்னை; உபயாந்தி—--அடைகிறார்கள்; தே---அவர்கள்

Translation

BG 10.10: அன்பான பக்தியில் எவருடைய மனம் எப்பொழுதும் என்னுடன் இணைந்திருக்கிறதோ, அவர்களுக்கு நான் என்னை அடையக்கூடிய தெய்வீக அறிவை அளிக்கிறேன்.

Commentary

கடவுளைப் பற்றிய தெய்வீக அறிவு, நமது புத்தியின் பறப்பினால் அடையப்படுவதில்லை. எவ்வளவு சக்தி வாய்ந்த மன இயந்திரம் நம்மிடம் இருந்தாலும், நமது புத்தி மாயாவினால் ஆனது என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, நமது எண்ணங்கள், புரிதல் மற்றும் ஞானம் ஆகியவை பொருள்மண்டலத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன; கடவுளும் அவருடைய தெய்வீக மண்டலமும் நமது உடல் அறிவுக்கு அப்பாற்பட்டவை. வேதங்கள் உறுதியாக அறிவிக்கின்றன:

யஸ்ய மத1ம் த1ஸ்ய மத1ம் மத1ம் யஸ்யா வேத3 ஸஹ

அவிஞ்ஞாதம்1 விஜாநதா1ம் விஞ்ஞாத1மவிஜானதா1ம்.. (கே1னோப1நிஷத3ம்-2.3)

'தங்கள் புத்தியால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைப்பவர்களுக்கு கடவுளைப் பற்றிய புரிதல் இல்லை. அவர் தங்கள் புரிதலின் எல்லைக்கு அப்பாற்பட்டவர் என்று நினைப்பவர்கள் மட்டுமே அவரை உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்கள்.’

பி3ருஹதா3ரண்யக1 உப1நிஷத3ம் கூறுகிறது:

ஸ ஈஷ நேதி1 நேத்1யாத்1மா க்3ரிஹ்யோஹோ (3.9.26)

‘புத்தியின் அடிப்படையிலான சுய முயற்சியால் கடவுளை ஒருபொழுதும் புரிந்து கொள்ள முடியாது.’ ராமாயணம் கூறுகிறது:

ராம அத1ர்க்1ய பு3த்3தி4 மன பா3னீ, மத1 ஹமாரா அஸ ஸுனஹி ஸயாநீ.

‘ராமர் நமது அறிவு, மனம் மற்றும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்.’

இப்பொழுது, ​​கடவுளைப் பற்றிய இந்த அறிக்கைகள் அவரை அறிந்து கொள்வது சாத்தியமில்லை என்பதைத் தெளிவாகப் பறைசாற்றும் பட்சத்தில், கடவுள்-உணர்தல் ஒருவருக்கு எப்படி சாத்தியமாகும்? கடவுளைப் பற்றிய அறிவை எவ்வாறு பெற முடியும் என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே வெளிப்படுத்துகிறார். ஆன்மாவுக்கு தெய்வீக அறிவை வழங்குவது கடவுள் என்றும், அவருடைய அருளைப் பெறும் அதிர்ஷ்டமான ஆத்மா அவரை அறிய முடியும் என்றும் அவர் கூறுகிறார். யஜுர் வேதம் கூறுகிறது: த1ஸ்ய நோ ராஸ்வ த1ஸ்ய நோ தே3ஹி, ‘கடவுளின் தாமரை பாதங்களில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தில் நீராடாமல், யாராலும் அவரை அறிய முடியாது.’ இவ்வாறு, கடவுளைப் பற்றிய உண்மையான அறிவு அறிவுசார் சீருடற்பயிற்சியின் விளைவு அல்லாமல், மாறாக தெய்வீக கிருபையின் விளைவாகும். அவர் அவரது கருணையை பெறுபவர்களை விசித்திரமான முறையில் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, பக்தியில் தன்னுடன் மனதை ஒருங்கிணைப்பவர்களுக்கு அவர் கருணையை அருளுகிறார். அடுத்து, தெய்வீக அருளைப் பெறுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பேசுகிறார்.