Bhagavad Gita: Chapter 6, Verse 26

யதோ1 யதோ1 நிஶ்ச1ரதி1 மனஶ்ச1ஞ்ச1லமஸ்தி2ரம் |

11ஸ்த1தோ1 நியம்யைத1தா3த்1மன்யேவ வஶம் நயேத்1 ||26||

யதஹ யதஹ--—எப்எப்பொழுது எங்கெங்கு; நிஶ்சரதி—--அலைந்து திரிகிறதோ; மனஹ—--மனம்; சஞ்சலம்--—அமைதியற்ற; அஸ்திரம்--—நிலையற்ற; ததஹ ததஹ—--அங்கங்கிருந்து; நியம்ய—--கட்டுப்படுத்தி; ஏதத்—---இதை; ஆத்மனி—--கடவுள் மீது; ஏவ—--நிச்சயமாக; வஶம்--—கட்டுப்பாடு நயேத்----கொண்டு வர வேண்டும்

Translation

BG 6.26: அமைதியற்ற மற்றும் நிலையற்ற மனம் அலையும் போதெல்லாம், அதைத் மீண்டும் நிலை படுத்த முயற்சி செய்து, தொடர்ந்து கடவுளின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

Commentary

தியானத்தில் வெற்றி ஒரு நாளில் கிடைத்துவிடாது; பரிபூரணத்திற்கான பாதை நீண்ட மற்றும் கடினமானது. நம் மனதை கடவுளின் மீது செலுத்த வேண்டும் என்ற உறுதியுடன் நாம் தியானத்திற்கு உட்காரும்போது, ​​அது உலக ஸங்கல்பத்திலும் (பொருள்களைப் பின்தொடர்வது) மற்றும் விகல்பம் (அவற்றிலிருந்து வெறுப்பு) அடிக்கடி அலைந்து கொண்டிருப்பதைக் காண்போம். இதைச் சமாளிக்க, தியானத்தின் செயல்பாட்டில் உள்ள மூன்று செயற்பாட்டுப் படிகளைப் புரிந்துகொள்வது முக்கியம்:

- புத்தியின் பாகுபாட்டின் சக்தியால், உலகம் நமது குறிக்கோள் அல்ல என்று முடிவு செய்கிறோம். எனவே, உலகத்திலிருந்து மனதை வலுக்கட்டாயமாக அகற்றுகிறோம். இதற்கு முயற்சி தேவை.

- மீண்டும், பாகுபாட்டின் சக்தியுடன், ஒப்புயர்வற்ற பகவான் மட்டுமே நம்முடையவர் என்பதை புரிந்து கொண்டு, கடவுள் உணர்தல் ஒன்றே குறிக்கோள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எனவே, நமது கவனத்தை கடவுளின் மீது செலுத்துகிறோம். இதற்கும் முயற்சி தேவை.

- மனம் கடவுளிடமிருந்து விலகி மீண்டும் உலகத்தில் அலைந்து திரிகிறது. இதற்கு முயற்சி தேவையில்லை; அது தானாகவே நடக்கும்.

மூன்றாவது செயற்பாட்டுப்படி தானாக நடக்கும் போது, ஆன்மீக பயிற்சியாளர்கள் (​​ஸாதகர்கள்) 'கடவுளில் கவனம் செலுத்த நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன், ஆனால் மனம் உலகிற்கு திரும்பியது.' என்று அடிக்கடி ஏமாற்றமடைந்து புலம்புவார்கள். ஏமாற்றமடைய வேண்டாம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். நிலையற்ற மனதை கட்டுப்படுத்த நம்மால் முடிந்த முயற்சிகள் செய்யும் போதிலும் மனம் அலைந்து திரிகிறது என்று அவர் கூறுகிறார். இருப்பினும், அது விலகிச் செல்லும்போது, ​​​​நாம் 1 மற்றும் 2 ஆவது செயற்பாட்டுப் படிகளை மீண்டும் செய்ய வேண்டும்-மனதை உலகத்திலிருந்து எடுத்து கடவுளிடம் கொண்டு வர வேண்டும். மீண்டும் ஒருமுறை, படி 3 தானே நடைபெறுகிறது என்பதை அனுபவிப்போம். நாம் சோர்வடையாமல், மீண்டும் 1 மற்றும் 2 ஆவது படிகளை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

நாம் இதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். பிறகு மெல்ல மெல்ல, கடவுள் மீதுள்ள மனதின் பற்று அதிகரிக்கத் தொடங்கும். அதே நேரத்தில், உலகத்திலிருந்து அதன் பற்றின்மையும் அதிகரிக்கும். இது நடக்கும்போது, ​​தியானத்தை மேற்கொள்வது எளிதாகும். ஆனால் ஆரம்பத்தில், மனதை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபடும் போருக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.