Bhagavad Gita: Chapter 6, Verse 28

யுந்ஜன்னேவம் ஸதா3த்1மானம் யோகீ3 விக311ல்மஷ: |

ஸுகே2ன ப்3ரஹ்மஸந்ஸ்ப1ர்ஶமத்1யன்த1ம் ஸுக2மஶ்னுதே1 ||28||

யுந்ஜன்—--ஒருங்கிணைந்து (கடவுளுடன் சுயத்தை); ஏவம்—--இவ்வாறு; ஸதா--—எப்பொழுதும்; ஆத்மானம்--—தன்னை; யோகி—--ஒரு யோகி; விகத—--விடுவித்து; கல்மஷஹ—--பாவங்களிலிருந்து; ஸுகேன--—எளிதாக; ப்ரஹ்ம-ஸன்ஸ்பர்ஶம்--—ஒப்புயர்வற்ற கடவுளுடன் தொடர்பில் இருப்பது; அத்யந்தம்—--உயர்ந்த; ஸுகம்---—ஆனந்தத்தை; அஶ்னுதே--—அடைகிறார்

Translation

BG 6.28: சுயக்கட்டுப்பாடு கொண்ட யோகி, இவ்வாறு தன்னை இறைவனுடன் ஐக்கியப்படுத்தி, பொருள் மாசுபாட்டிலிருந்து விடுபட்டு, ஒப்புயர்வற்ற கடவுளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால், முழுமையான மகிழ்ச்சியின் உயர்ந்த நிலையை அடைகிறான்.

Commentary

மகிழ்ச்சியை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:

ஸாத்1விக1ம் ஸூக2மாத்1மோத்12ம் விஷயோத்1தம்2 து1 ராஜஸம்

தா1மஸம் மோஹ தை1ன்யோத்12ம் நிர்கு3ணம் மத3பா1ஶ்ரயம்

(பா43வத1ம்11.25.29)

தா1மஸ (அறியாமையால் முறையில் உண்டாகும்) மகிழ்ச்சி: இது போதை, மது, புகைப்பிடித்தல், இறைச்சி பொருட்கள், வன்முறை, தூக்கம் மற்றும் பலவற்றிலிருந்து பெறப்படும் இன்பம்.

ராஜஸ (ஆர்வத்தின் முறையில் உண்டாகும்) மகிழ்ச்சி: இது ஐந்து புலன்கள் மற்றும் மனதின் திருப்தியினால் கிடைக்கும் இன்பம்.

ஸாத்1வீக1 (நன்மையின் முறையில் உண்டாகும்) மகிழ்ச்சி: இரக்கம், மன்னிப்பு, பிறருக்குச் சேவை செய்தல், அறிவை வளர்த்தல் மற்றும் மனதை அமைதிப்படுத்துதல் போன்ற நற்பண்புகளைப் பயிற்சி செய்வதன் மூலம் அனுபவிக்கும் இன்பம் இதுவாகும். ஞானிகள் ஆன்மாவில் மனதை நிலைப்படுத்தும்போது அவர்கள் அனுபவிக்கும் சுயத்தை உணரும் பேரின்பம் இதில் அடங்கும்.

நிர்குண: (மூன்று குணங்களும் அப்பாற்பட்ட) மகிழ்ச்சி: இது எல்லையற்ற அளவற்ற கடவுளின் தெய்வீக பேரின்பம். ஜட மாசுபாட்டிலிருந்து விடுபட்டு, கடவுளுடன் இணைந்த யோகி, பரிபூரண மகிழ்ச்சியின் இந்த உயர்ந்த நிலையை அடைகிறார் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார். இந்த எல்லையற்ற ஆனந்தத்தை 5.21 வசனத்தில் உச்ச ஆனந்தம் என்றும் 6.21 வசனத்தில் உன்னத ஆனந்தம் என்றும் கூறியுள்ளார்..

இதை அவர் 5.21 ஆவது வசனத்தில் வரம்பற்ற பேரின்பம் என்றும் 6.25 வது வசனத்தில்உற்சாகம் என்றும் கூறியுள்ளார்