ப3ன்து4ராத்1மாத்1மனஸ்த1ஸ்ய யேனாத்1மைவாத்1மனா ஜித1: |
அனாத்1மனஸ்து1 ஶத்1ருத்1வே வர்தே1தா1த்1மைவ ஶத்1ருவத்1 ||6||
பந்துஹு--—நண்பர்; ஆத்மா--—மனம்; ஆத்மனஹ—--நபருக்கு; தஸ்ய—--அவருடைய; யேன—-யாரால்; ஆத்மா--—மனம்; ஏவ--—நிச்சயமாக; ஆத்மனா—--தன்னால்; ஜிதஹ—--வெற்றி பெற்ற; அனாத்மனஹ----வெற்றி பெறாத மனதைக் கொண்டவர்களுக்கு; து--—ஆனால்; ஶத்ருத்வே--—ஒரு எதிரிக்கு; வர்தேத—--திகழும்; ஆத்மா--—மனம்; ஏவ--—நிச்சியமாக; ஶத்ரு-வத்----எதிரியைப் போல்
Translation
BG 6.6: மனதை வென்றவர்களுக்கு அது நண்பன். அவ்வாறு செய்யத் தவறியவர்களுக்கு, மனம் எதிரியைப் போல் செயல்படுகிறது.
Commentary
நாம் நமது சிந்தனை சக்தி மற்றும் ஆற்றலின் பெரும்பகுதியை நமக்கு எதிரிகளாகவும் தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் கருதும் நபர்களை எதிர்த்துப் போராடுவதில் சிதறடிக்கிறோம்; மிகப் பெரிய எதிரிகளான காமம், கோபம், பேராசை, பொறாமை, மாயை மற்றும் பிற எதிர்மறை உணர்ச்சிகள்-நமது சொந்த மனதில் தங்கியிருப்பதாக வேத ஶாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த உள் எதிரிகள் வெளிப்புற எதிரிகளை விட மிகவும் ஆபத்தானவர்கள். வெளிப்புற பேய்கள் நம்மை சில நேரம் காயப்படுத்தலாம், ஆனால் நம் மனதில் அமர்ந்திருக்கும் பேய்கள் நம்மை நிலையான துன்பத்தில் வாழ வைக்கும் திறன் கொண்டவை. உலகில் சாதகமாக எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும், துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்தவர்களை நாம் அனைவரும் அறிவோம், ஏனெனில் அவர்களின் சொந்த மனம் அவர்களை மனச்சோர்வு, வெறுப்பு, , பதட்டம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் இடைவிடாது அவர்களைத் துன்புறுத்தியது.
வேத தத்துவம் எண்ணங்களின் பரவலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நோய் என்பது நுண்ணுயிர்க் கி௫மிகளால் மட்டுமல்ல, நம் மனதில் இருக்கும் எதிர்மறைத் தன்மைகளாலும் ஏற்படுகிறது. யாராவது தற்செயலாக உங்கள் மீது கல்லை எறிந்தால், அது சில நிமிடங்களுக்கு வலிக்கலாம், ஆனால் அடுத்த நாள், ஒருவேளை நீங்கள் அதை மறந்துவிடுவீர்கள். இருப்பினும், யாராவது விரும்பத்தகாத ஒன்றைச் சொன்னால், அது பல ஆண்டுகளாக உங்கள் மனதைக் கிளர்ச்சியடையச் செய்யலாம். இது எண்ணங்களின் மகத்தான சக்தியைக் காட்டுகிறது. பௌத்த வேதமான தம்மபதத்தில் (1.3), புத்தர் இந்த உண்மையை தெளிவாக வெளிப்படுத்தினார்:
நான் அவமதிக்கப்பட்டேன்! நான் காயப்பட்டேன்! நான் அடிக்கப்பட்டேன்! நான் கொள்ளையடிக்கப்பட்டேன்! இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களிடம் துன்பம் நீங்குவதில்லை.
நான் அவமதிக்கப்பட்டேன்! நான் காயப்பட்டேன்! நான் அடிக்கப்பட்டேன்! நான் கொள்ளையடிக்கப்பட்டேன்! இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களிடம் கோபம் நீங்குவதில்லை.
நம் மனதில் வெறுப்பை வளர்க்கும் போது, நம் வெறுப்பின் பொருளை விட எதிர்மறை எண்ணங்கள் நம்மை சேதப்படுத்துகின்றன. இது மிகவும் புத்திசாலித்தனமாக கூறப்பட்டுள்ளது: 'மனக்கசப்பு என்பது விஷம் குடித்து, மற்றவர் இறந்துவிடுவார் என்று நம்புவது போன்றது.' பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான மக்கள் தங்கள் கட்டுப்பாடற்ற மனம் தங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது என்பதை உணரவில்லை. எனவே, ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் அறிவுறுத்துகிறார்:
மன கோ1 மானோ ஶத்1ரு உஸ்கி1 ஸுனஹு ஜனி கசு2 ப்1யாரே (ஸாத4ன் பக்1தி1 த1த்1வ)
'அன்புள்ள ஆன்மிக ஆர்வலரே, உங்கள் கட்டுப்பாடற்ற மனதை உங்கள் எதிரியாகப் பாருங்கள். அதன் ஆதிக்கத்தில் வராதீர்கள்.'
இருப்பினும், அதே மனதை ஆன்மிகப் பயிற்சியின் மூலம் புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால் அது நமது சிறந்த நண்பராக மாறும் சாத்தியம் உள்ளது. ஒரு உளதாந்தன்மை எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் தவறாக பயன்படுத்துவதற்கான ஆபத்தும் அதிகமாகிறது. மேலும், அதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் அதிகமாகிறது. மனம் நம் உடலில் பொருத்தப்பட்ட ஒரு சக்திவாய்ந்த இயந்திரம் என்பதால், அது இரு முனைகள் கொண்ட வாளாக வேலை செய்யும். இவ்வாறு, தங்கள் சொந்த மனதினால் சீற்றமிக்க நிலைகளுக்குச் செல்கிறார்கள், அதே சமயம் தங்கள் தூய்மையான மனதின் காரணமாக உயர்ந்த உயரத்தை அடைகிறார்கள்ள். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இதை மிக அருமையாக வெளிப்படுத்தினார்: 'மக்கள் விதியின் கைதிகள் அல்ல, ஆனால் அவர்களின் சொந்த மனதின் கைதிகள் மட்டுமே.' இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனுக்கு நம் மனம் நமக்கு அளிக்கக்கூடிய தீங்கு மற்றும் நன்மைகளைப் பற்றி விளக்குகிறார்.
பின்வரும் மூன்று வசனங்களில், யோக்-ஆருட (யோகத்தில் மேம்பட்டவர்) ஒருவரின் பண்புகளை ஸ்ரீ கிருஷ்ணர் விவரிக்கிறார்.