Bhagavad Gita: Chapter 6, Verse 9

ஸுஹ்ருன்மித்1ரார்யுதா3ஸீனமத்4யஸ்த2த்3வேஷ்யப3ன்து4ஷு |

ஸாது4ஷ்வபி11 பா1பே1ஷு ஸமபு3த்3தி4ர்விஶிஷ்யதே1 ||9||

ஸு-ஹ்ருத்--—நலம் கருதுபவர்களிடம்; மித்ர--—நண்பர்களிடம்; அரி—--எதிரிகளிடம்; உதாஸீன—--நடுநிலையாளர்களும்; மத்ய—ஸ்த----—மத்தியஸ்தர்களிடம்; த்வேஷ்ய--—பொறாமை கொண்டவர்களிடம்; பந்துஷு--—உறவினர்களிடம்; ஸாதுஷு--—தெய்வீக உணர்வு உள்ளவர்களிடம்; அபி--—அத்துடன்; ச—--மற்றும்; பாபேஷு—--பாவிகளிடம்; ஸம-புத்திஹி-----பாரபட்சமற்ற புத்தியுடன் இருப்பது; விஶிஷ்யதே--—சிறந்தவர்கள்

Translation

BG 6.9: யோகிகள் அனைவரையும் - நலம் விரும்பிகள், நண்பர்கள், எதிரிகள், பக்தியுள்ளவர்கள் மற்றும் பாவிகள் - ஒரு பாரபட்சமற்ற புத்தியுடன் பார்க்கிறார்கள். நண்பன், தோழன், பகைவர் ஆகியோரிடம் சமமான புத்தி உள்ளவராகவும், எதிரிகள் மற்றும் உறவினர்களிடையே நடுநிலையானவராகவும், நீதிமான்கள் மற்றும் பாவிகளுக்கு இடையில் பாரபட்சமற்றவராகவும் இருப்பவர், மனிதர்களிடையே தனித்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

Commentary

நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் வித்தியாசமாக பதிலளிப்பது மனித மனத்தின் இயல்பு. ஆனால் உயர்ந்த யோகியின் இயல்பு வேறு. கடவுளைப் பற்றிய அறிவைப் பெற்ற, உயர்ந்த யோகிகள் முழு படைப்பையும் கடவுளுடன் அதன் ஒற்றுமையில் பார்க்கிறார்கள். இதனால், அவர்களால் அனைத்து உயிர்களையும் சமமான பார்வையுடன் பார்க்க முடிகிறது. பார்வையின் இந்த சமநிலை பல்வேறு நிலைகளில் உள்ளது:

சமத்துவத்தின் ஒரு நிலை: ‘அனைத்து உயிரினங்களும் தெய்வீக ஆன்மாக்கள், எனவே கடவுளின் பாகங்கள்.’ எனவே, அவை அனைத்தும் சமம். இவ்வாறாக, சாணக்கிய பண்டிதர் கூறினார்: ஆத்1மவத்1 ஸர்வ பூ4தே1ஷு ய ஹ ப1ஶ்யதி 1 ஸ ப1ண்டி31ஹ ‘எல்லோரையும் ஆன்மாவாகக் கருதி, தன்னைப் போலவே பார்ப்பவர் உண்மையான பண்டிதர்.’

பார்வை உயர்ந்தது: ‘கடவுள் எல்லோரிடமும் அமர்ந்திருக்கிறார், அதனால்தான் அனைவரும் சமமாக மதிக்கத் தகுதியானவர்கள். ‘

மிக உயர்ந்த நிலையில், யோகி உள்அறிவை வளர்த்துக் கொள்கிறார்: ‘எல்லோரும் கடவுளின் வடிவம்.’ வேத ஶாஸ்திரங்கள் முழு உலகமும் கடவுளின் உண்மையான வடிவம் என்று மீண்டும் மீண்டும் கூறுகின்றன: ஈஶாவாஸ்யம் இத3ம் ஸர்வம் யத்1 கி1ஞ்ச1 ஜகத்1யாம் ஜகத்1 (ஈஶோபநிஷதம் 1) ‘முழு பிரபஞ்சமும், அதன் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற உயிரினங்களும், அதனுள் வசிக்கும் உன்னதமானவரின் வெளிப்பாடு ஆகும்.' பு1ருஷ ஏவேத3ம் ஸர்வம் (பு1ருஷ ஸூக்11ம், ரிக்3 வேத3ம்) ‘கடவுள் இந்த உலகில் எங்கும் இருக்கிறார், எல்லாமே அவருடைய ஆற்றல். எனவே, உயர்ந்த யோகி அனைவரையும் கடவுளின் வெளிப்பாடாகவே பார்க்கிறார். இந்த அளவிலான இயற்பண்புடன், ஹனுமன் கூறுகிறார்: ஸீய ராமமய ஸப3 ஜக3 ஜானீ க1ரௌன் ப்1ரணாம ஜோரி ஜுக1 பா1னீ (ராமாயணம்) 'நான் எல்லோரிடமும் சீதா ராமின் முகத்தைப் பார்க்கிறேன்.'

இந்த வகைப்பாடுகள் 6.31 வசனத்தின் விளக்கத்தில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய மூன்று வகைகளையும் குறிப்பிட்டு, ஸ்ரீ கிருஷ்ணர், அனைத்து நபர்களிடமும் சமமான பார்வையைப் பேணக்கூடிய யோகி முந்தைய ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட யோகியை விட உயர்ந்தவர் என்று கூறுகிறார். யோக நிலையை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்த வசனத்தில் தொடங்கி. அந்த நிலையை நாம் அடையக்கூடிய நடைமுறையை விவரிக்கிறார்.