Bhagavad Gita: Chapter 3, Verse 32

யே த்1வேத13ப்4யஸூயன்தோ1 நானுதி1ஷ்ட2ன்தி1 மே மத1ம் |

ஸர்வஞ்ஞானவிமூடா4ன்ஸ்தா1ன்வித்4தி3 நஷ்டா1னசே11ஸ: ||32||

யே—--எவர்; து—-ஆனால்; ஏதத்—--இது; அப்யஸுயந்தஹ—---அற்பமான மறுத்துரைத்தல்; ந—இல்லை; அனுதிஷ்டாந்தி--—பின்பற்றவும்; மே----என்; மதம்—--போதனைகளை; ஸர்வ-ஞான--—அனைத்து வகையான அறிவிலும்; விமூதான்----மாயையில் உழன்று; தான்—அவர்கள்; வித்தி--—அறிக; நஷ்டான்—-அழிந்தவர்கள்; அசேதஸஹ----பாகுபாடு இல்லாதவர்களாக

Translation

BG 3.32: ஆனால், எனது போதனைகளில் தவறுகளைக் கண்டறிபவர்கள், அறிவு இல்லாதவர்களாகவும், பாகுபாடுகள் அற்றவர்களாகவும் இருப்பதால், அவர்கள் இந்தக் கொள்கைகளைப் புறக்கணித்து, தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகள் நமது நித்திய நலனுக்கு உகந்தவை. ஆயினும், நமது பொருள் அறிவு எண்ணற்ற குறைபாடுகளைக் கொண்டுள்ளது, எனவே அவருடைய போதனைகளின் மேன்மையை நாம் எப்போதும் புரிந்து கொள்ளவோ ​​அல்லது அவற்றின் நன்மைகளை பாராட்டவோ முடியாது. அவ்வாறு நம்மால் செய்ய முடிந்தால் நுண்ணிய ஆன்மாக்களாகிய நமக்கும் ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமைக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? இவ்வாறு, பகவத் கீதையின் தெய்வீக போதனைகளை ஏற்றுக்கொள்வதற்கு நம்பிக்கை அவசியமான ஒரு பொருளாகிறது. எங்கெல்லாம் நமது புத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லையோ, போதனைகளில் தவறுகளைக் கண்டுபிடிப்பதை விட, நாம் நமது புத்தியை சமர்ப்பிக்க வேண்டும், ‘ஸ்ரீ கிருஷ்ணர் அதைச் சொன்னார். அதில் உண்மை இருக்க வேண்டும், தற்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போதைக்கு அதை ஏற்றுக்கொண்டு ஆன்மீக சாதனையில் ஈடுபடுகிறேன். ஆன்மீக சாதனையில் ஈடுபட்டு வருங்காலத்தில் எனது ஆன்மீகப் பயிற்சிகளின் விளைவாக ஆன்மீக தேர்ச்சியில் முன்னேறும் போது என்னால் அதை புரிந்து கொள்ள முடியும்.’ என்ற மனப்பான்மையை உருவாக்கிக் கொள்வது நம்பிக்கை அல்லது ஶ்ரத்3தா என்று அழைக்கப்படுகிறது.

ஜகத்குரு சங்கராச்சாரியர் ஶ்ரத்3தா4 என்ற சொல்லை இவ்வாறு வரையறுக்கிறார்: கு3ரு வேதா3ந்த1 வாக்1யேஷு த்3ரிடோ4 விஶ்வாஸஹ ஶ்ரத்3தா4. ‘நம்பிக்கை என்பது குருவின் வார்த்தைகளிலும் வேதங்களிலும் உள்ள வலுவான நம்பிக்கையாகும்.’ இதைப் போலவே சைதன்ய மஹாபிரபு விளக்கினார்: ஶ்ரத்3தா4 ஶப்தே3 விஸ்வாஸ க1ஹே ஸுத்3ருட4 நிஶ்ச1ய (சை1தன்ய ச1ரிதாமிருத1ம், மத்4ய லீலா, 22.62) ‘அவர்களின் செய்தியை நாம் தற்போது புரிந்து கொள்ளாவிட்டாலும் ஶ்ரத்தா என்ற வார்த்தையின் அர்த்தம் கடவுள் மற்றும் குருவின் மீதுள்ள வலுவான நம்பிக்கை.’ பிரிட்டிஷ் கவிஞர் ஆல்ஃபிரட் டென்னிசன் கூறினார்: ‘எங்கு நம்மால் நிரூபிக்க முடியவில்லையோ அங்குதிட நம்பிக்கையால் மட்டுமே, நம்புவதைத் தழுவுங்கள்,‘ எனவே, நம்பிக்கை என்பது பகவத் கீதையின் புரிந்துகொள்’ளக் கூடிய பகுதிகளை ஆர்வத்துடன் ஜீரணித்து, மேலும் அவை எதிர்காலத்தில் புரிந்துகொள்ளக்கூடியதாக மாறும் என்ற நம்பிக்கையுடன் சுருக்கமான பகுதிகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.

இருப்பினும், பொருள் புத்தியின் தொடர்ச்சியான குறைபாடுகளில் ஒன்று பெருமை. பெருமையின் காரணமாக, புத்தியால் தற்போது புரிந்துகொள்ள முடியாததை, அது பெரும்பாலும் தவறானது என்று நிராகரிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகள் எல்லாம் அறிந்த இறைவனால் ஆன்மாக்களின் நலனுக்காக முன்வைக்கப்பட்டாலும், மக்கள் இன்னும் அவற்றில் தவறுகளைக் காண்கிறார்கள், அதாவது, “கடவுள் ஏன் எல்லாவற்றையும் தனக்கு வழங்க வேண்டும் என்று கேட்கிறார்? அவர் பேராசைக்காரரா? அர்ஜுனனிடம் தன்னை வணங்கச் சொல்லும் அவர் அஹங்காரவாதியா?’ அத்தகையவர்கள் ‘பாகுபாடு இல்லாதவர்கள்’ அல்லது அசேத1ஸஹ என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ஏனென்றால், அவர்களால் தூய்மையானவர் மற்றும் தூய்மையற்றவர், நீதிமான்கள் மற்றும் நீதி அற்றவர்கள், படைப்பாளர் மற்றும் படைக்கப்பட்டவர், ஒப்புயர்வற்ற எஜமானர் மற்றும் வேலைக்காரன் ஆகியோரை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அத்தகைய மக்கள் ‘தங்கள் அழிவைக் கொண்டு வருகிறார்கள்,’ ஏனென்றால் அவர்கள் நித்திய பேரின்பத்தின் பாதையை நிராகரித்து, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கிறார்கள்.

Watch Swamiji Explain This Verse