Bhagavad Gita: Chapter 3, Verse 26

ந பு3த்3தி4பே43ம் ஜனயேத3 ஞானாம் க1ர்மஸங்கி3னாம் |

ஜோஷயேத்1ஸர்வக1ர்மாணி வித்3வான்யுக்11: ஸமாச1ரன் ||26||

ந—--இல்லை புத்தி-பேதம்—--புத்தியில் முரண்பாடு; ஜனயேத்--—உருவாக்க வேண்டும்; அஞ்ஞானாம்--—அறியாமையில் இருப்பவர்களிடம்; கர்ம-ஸங்கினாம்—--பலன் தரும் செயல்களுடன் இணைந்திருப்பவர்களிடம்; ஜோஷயேத்--—(அவர்களை) செய்ய தூண்ட வேண்டும்; ஸர்வ—-அனைத்து; கர்மாணி—--வகுக்கப்பட்ட; வித்வான்—--ஞானமுள்ளவர்; யுக்தஹ--—அறிவூட்டப்பட்டவர்; ஸமாசரன்--- ஒழுங்காகச் செயல்பட்டு

Translation

BG 3.26: புத்திசாலிகள், பலன் தரும் செயல்களில் பற்றுள்ள அறியாமைக்குரியவர்களின் புத்தியில் முரண்பாட்டை உருவாக்கி, அவர்களை வேலையை நிறுத்தச் செய்யக்கூடாது. மாறாக, அறிவொளியுடன் தங்கள் கடமைகளைச் செய்வதன் மூலம், அவர்கள் அறியாதவர்களையும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தூண்ட வேண்டும்.

Commentary

சாதாரண மக்கள் அவர்களைப் பின்பற்றுவதால்அறிவாற்றலுள்ள பெரிய மனிதர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. எனவே, அவர்கள் அறியாமைக்குரியவர்ககளை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் எந்த ஒரு செயலை செய்யவோ அல்லது வார்த்தைகளை பேசவோ கூடாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் வலியுறுத்துகிறார். ஞானிகள் அறியாதவர்கள் மீது இரக்கத்தை உணர்ந்தால், அவர்களுக்கு உயர்ந்த அறிவை - கடவுளை உணரும் அறிவை வழங்க வேண்டும் என்று வாதிடலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வாதத்தை ந புத்தி-பேதம் ஜனயேத் என்று கூறி நடுநிலைப்படுத்துகிறார், அதாவது அறியாதவர்கள் புரிந்து கொள்ளத் தகுதியற்ற உயர்ந்த அறிவுரைகளை வழங்குவதன் மூலம் கடமைகளைக் கைவிடுமாறு கேட்கக்கூடாது.

பொதுவாக, பொருள் உணர்வு உள்ளவர்கள் இரண்டு விருப்பங்களை மட்டுமே கருதுகின்றனர். ஒன்று அவர்கள் பலனளிக்கும் முடிவுகளுக்காக கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள் அல்லது எல்லா வேலைகளும் உழைப்பு, வேதனையானவை மற்றும் தீமையால் செய்யப்பட்டவை என்ற வேண்டுகோளின் பேரில் அனைத்து முயற்சிகளையும் கைவிட விரும்புகிறார்கள். இவற்றுக்கு இடையே, முடிவுகளுக்காக வேலை செய்வது தப்பிக்கும் அணுகுமுறையை விட மிக உயர்ந்தது. எனவே, வேத அறிவில் உள்ள ஆன்மீக ஞானமுள்ளவர்கள், அறியாதவர்களைக் கவனத்துடனும் அக்கறையுடனும் தங்கள் கடமைகளைச் செய்யத் தூண்ட வேண்டும். அறியாதவர்களின் மனம் கலங்கி அமைதியற்றதாக இருந்தால், அவர்கள் வேலை செய்வதில் முழு நம்பிக்கையை இழக்க நேரிடும், மேலும் செயல்கள் நிறுத்தப்படும். அவ்வாறு நம்பிக்கையை இழந்து அறிவு தூண்டுதலும் இல்லாத பட்சத்தில் அறியாதவர்களுக்கு இருதரப்பிலும் இழப்பு நேரிடும்.

அறிவில்லாதவர்களும் ஞானிகளும் வைதீகச் செயல்களைச் செய்தால், அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன? இப்படிப்பட்ட ஒரு கேள்வியை எதிர்நோக்கி ஸ்ரீ கிருஷ்ணர் இதை அடுத்த இரண்டு வசனங்களில் விளக்குகிறார்.

Watch Swamiji Explain This Verse