Bhagavad Gita: Chapter 1, Verse 21-22

அர்ஜுன உவாச1 |
ஸேனயோருப4யோர்மத்4யே ரத2ம்ஸ்தா21ய மே‌ச்1யுத1 ||21||
யாவதே3தா1ந்நிரீக்ஷே‌ஹம்யோத்3து4கா1மானவஸ்தி2தா1ன் |
கை1ர்மயா ஸஹயோத் 34வ்யமஸ்மின் ரணஸமுத்3யமே ||22||

அர்ஜுனஹ----உவாச---அர்ஜுனன் கூறினார்; ஸேனயோஹோ---படைகளின்; உபயோஹோ---இரு; மத்யே----நடுவில்; ரதம்----தேரை; ஸ்தாபய----வைப்பாயாக; மே----என்னுடைய; அ‌ச்யுத---அச்யுதா- தவறாநிலையுடைய ஸ்ரீ கிருஷ்ணரே ; யாவத்---எத்தனைய.; ஏதான்----இவர்கள்; நிரீக்ஷே----பார்க்க வேண்டும்; அஹம்--—நான்; யோத்துகாமான்----போருக்காக; அவஸ்திதான்---அணிவகுத்து இருக்கிறார்கள்; கைஹி----எவர்கள்; மயா----என்; ஸஹ----உடன்; யோத்தவ்யம்----போராட வேண்டும்; அஸ்மின்----இந்த; ரணஸமுத்யமே----மாபெரும் போரில்.

Translation

BG 1.21-22: அர்ஜுனன் கூறினார், ‘தவறாநிலைஉடையவரே, தயவு செய்து எனது தேரை இரு படைகளுக்கும் நடுவில் கொண்டு செல்லுங்கள். இதன் மூலம் நான் போராட வேண்டிய, இந்த மாபெரும் போரில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்களை என்னால் பார்க்க இயலும்.’

Commentary

அர்ஜுனன் முழுப் படைப்பின் அதிபதியான ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர். இருப்பினும், இந்த வசனத்தில், அர்ஜுனன் தனது தேரை விரும்பிய இடத்திற்கு ஓட்டுமாறு இறைவனிடம் அறிவுறுத்தினார். இது கடவுளின் பக்தர்களுடன் உள்ள உறவின் இனிமையை வெளிப்படுத்துகிறது. அவர்கள் அவர் மீது கொண்ட பக்தி கடவுளை அடிமைப்படுத்துகிறது அவர்களுக்கு அடிமைப்படுத்துகிறது. அவர்கள் தம்மீது கொண்ட அன்பிற்குக் கடன்பட்டவராக, பகவான் தம் பக்தருக்கு அடியாராகிறார்.

அஹம் ப4க்111ராதீ 4னோ ஹ்யஸ்வத1ந்த்1ர  இவ த்3விஜ

ஸாது4பி4ர் கி3ரஸ்த  ஹ்ருத3யோ ப4க்1தை1ர் ப4க்11-ஜன-ப்1ரியஹ

( பா43வத1ம் 9.4.63)

‘நான் மிகவும் சுதந்திரமாக இருந்தாலும், என் பக்தர்களால் நான் அடிமைப்படுகிறேன். அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள், அவர்களுடைய அன்பிற்காக நான் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.’ அர்ஜுனனின் பக்திக்கு கட்டுப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் தேர் ஓட்டும் பதவியை ஏற்று, பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜுனின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

Watch Swamiji Explain This Verse