Bhagavad Gita: Chapter 1, Verse 36-37

நிஹத்1ய தா4ர்த1ராஷ்ட்1ரான்ன:கா1 ப்1ரீதி: ஸ்யாஜ்ஜனார்த3ன |

பா11மேவாஶ்ரயேத3ஸ்மான்ஹத்1வைதா1னாத1தா1யின: ||36||
1ஸ்மான்னார்ஹா வயம்ஹன்து1ம் தா4ர்த1ராஷ்ட்1ரான்ஸ்வபா3ன்த4வான் |

ஸ்வஜனம் ஹி க12ம் ஹத்1வாஸுகி2ன: ஸ்யாம மாத4வ ||37||

நிஹத்ய-—கொன்றதனால்; தார்தராஷ்ட்ரான்-—த்ருதராஷ்டிரரின் மகன்களை நஹ-—-நமக்கு  கா-—என்ன;  ப்ரீதிஹி-—இன்பம்; ஸ்யாத்—-இருக்கும்; ஜனார்தன—-மக்களைக் காக்கும் ஶ்ரீ கிருஷ்ணா;  பாபம்—-பாவங்கள்; ஏவ---நிச்சயமாக;  ஆஶ்ரயேத்----வரும்; அஸ்மான்—--நமக்கு;  ஹத்வா-—-கொன்றதனால்;  ஏதான்-—இவர்களை;  ஆததாயினஹ—--ஆக்கிரமிப்பாளர்களை; தஸ்மாத்—--ஆகவே;  ந---ஒரு பொழுதும் இல்லை; ஆர்ஹாஹா—--பொருந்தும்; வயம்--—நாம்; ஹன்தும்—--கொல்வது; தார்தராஷ்ட்ரான்-த்ருதராஷ்டிரரின்மகன்களையும்;  ஸ்வபான்தவான்-—-நம்முடையவர்களுடன்;  ஸ்வஜனம்—---உற்றார் உறவினர்கள்; ஹி--—நிச்சயமாக;  கதம்-— எப்படி; ஹத்வா-—கொன்றதனால்; ஸுகினஹ-—மகிழ்ச்சியுடன்; ஸ்யாம-—இருப்போம்; மாதவ-—யோகமாயையின் கணவர் ஶ்ரீ கிருஷ்ணர்l; (ந ஆர்ஹா—--பொருந்தாதது)

Translation

BG 1.36-37: எல்லா உயிரினங்களையும் பராமரிப்பவரே, த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் நாம் என்ன இன்பத்தை பெறுவோம்? அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும், நாம் அவர்களைக் கொன்றால் நிச்சயமாக நம்மீது பாவம் வரும்.எனவே, நம்முடைய சொந்த உறவினர்களையும், த்ருதராஷ்டிரரின்  மகன்களையும், நண்பர்களையும் கொல்வது என்பது நமக்கு ஒரு பொருந்தாத செயலாகும். ஓ மாதவா, நமது சொந்த உறவினர்களைக் கொல்வதன் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எவ்வாறு நம்புகிறோம்?

Commentary

முந்தைய வசனத்தில், ‘இருந்தாலும்’ என்று இரண்டு முறை சொல்லிவிட்டு, தன் உறவினர்களைக் கொல்லக்கூடாது என்ற தன் நோக்கத்தை நியாயப்படுத்த, அர்ஜுனன் மீண்டும் சொல்கிறார். ‘நான் அவர்களைக் கொன்றாலும், அப்படிப்பட்ட வெற்றியால் நான் என்ன மகிழ்ச்சி அடைவேன்?’

பெரும்பாலான சூழ்நிலைகளில், சண்டையிடுவதும் கொல்வதும் ஒரு தெய்வபக்தியற்ற செயலாகும். இது மன வருத்தம் மற்றும் குற்ற உணர்வுகளை உருவாக்குகிறது. அஹிம்ஸை ஒரு பெரிய தர்மம் எ.ன்று வேதங்கள் கூறுகின்றன. தீவிர நிகழ்வுகளைத் தவிர, வன்முறை ஒரு பாவம்: மா ஹின்ஸ்யாத்1 ஸர்வ பூ4தா1னி '’எந்த உயிரையும் கொல்லாதே’. இங்கே, அர்ஜுன் தனது உறவினர்களைக் கொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அவர் அதை பாவம் என்று கருதுகிறார். இருப்பினும், வஸிஷ்ட ஸ்மிருதி (வசனம் 3.19) பின்வரும் ஆறு வகையான ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நம்மைத் தற்காத்துக் கொள்ள நமக்கு உரிமை உண்டு என்று கூறுகிறது: ஒருவரின் சொத்துக்களுக்கு தீ வைப்பவர்கள், ஒருவரின் உணவை விஷமாக்குபவர்கள், கொலை செய்ய முற்படுபவர்கள், மற்றவரது செல்வத்தை திருடுபவர்கள், ஒருவரது மனைவியைக் கடத்த வருபவர்கள், ஒருவருடைய ராஜ்யத்தை அபகரிப்பவர்கள். மனு ஸ்மிருதி (8.351) தற்காப்புக்காக அத்தகைய ஆக்கிரமிப்பாளரைக் கொன்றால் அது பாவமாக கருதப்படாது என்று கூறுகிறது.

Watch Swamiji Explain This Verse