Bhagavad Gita: Chapter 1, Verse 38-39

யத்4யப்1யேதே2 ந ப1ஶ்யன்தி1 லோபோ41ஹத1சே11ஸ: |
கு1லக்ஷயக்1ருத1ம் தோ3ஷம் மித்1ரத்3ரோஹே ச1 பா111ம் ||38||
12ம் ந ஞேயமஸ்மாபி4: பா1பா13ஸ்மான்னிவர்தி1து1ம் கு1லக்ஷயக்1ருத1ம் தோ3ஷம் ப்1ரப1ஶ்யத்3பி4ர்ஜனார்த3ன ||39||

யதி அபி-—-ஆயினும்; ஏதே-—-இவர்கள்; ந---ஒருபோதும் இல்லை; பஶ்யன்தி-—பார்க்கிற;  லோப-—பேராசையால்; உபஹத-—ஆட்கொள்ளப்பட்ட; சேதஸஹ--—எண்ணங்களால்; குல--க்ஷய-க்ருதம்-—உறவினர்களை அழிப்பதினால்; தோஷம்--—குற்றம்;  மித்ரத்ரோஹே-—நண்பத்ரோகத்தினால்;  ச-—மற்றும்; பாதகம்-— பாவங்கள் கதம்-—எவ்வாறு; ந—-இல்லை; ஞேயம்—-அறியப்பட வேண்டும் ;  அஸ்மாபிஹி---நம்மால்; பாபாத்—- பாவங்களிலிருந்து;  அஸ்மாத்---இவை;  நிவர்த்திதும்--விலகிச்செல்ல; குல-க்ஷய---உறவினர்களை அழிப்பதினால்;க்ருதம்—--செய்த; தோஷம்--—குற்றம்; ப்ரபஶ்யத்பிஹி----காணக்கூடிய நாம்; ஜனார்-தன-—-மக்களைக் காக்கும் ஶ்ரீ கிருஷ்ணா; (ந பஶ்யன்தி--- பாரக்கவில்லை)

Translation

BG 1.38-39: அவரது எண்ணங்கள் பேராசையால் ஆட்கொள்ளப்பட்டன. மற்றும்,  அவர்கள் தங்கள் உறவினர்களை அழிப்பதிலும் அல்லது நண்பர்களுக்கு துரோகம் செய்வதிலும் எந்த தவறையும் உணரவில்லை. ஆயினும், ஓ, ஜனார்தனா(கிருஷ்ணா), நம்முடைய உறவினர்களைக் கொல்வதில் உள்ள குற்றத்தை தெளிவாகக் காணக்கூடிய நாம் ஏன் இந்த பாவத்திலிருந்து விலகக்கூடாது?

Commentary

அர்ஜுனன் போர் வீரனாக போர் புரிவதை பணியாக கொண்டிருந்தாலும் தேவையற்ற வன்முறையை வெறுத்தார். மகாபாரதப் போரின் முடிவில் நடந்த ஒரு சம்பவம் அவருடைய குணத்தின் இந்த குணத்தின் பக்கத்தை வெளிப்படுத்துகிறது.

நூறு கௌரவர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் பழிவாங்கும் விதமாக, துரோணாச்சாரியரின் மகன் அஸ்வத்தாமா, இரவில் பாண்டவர் முகாமுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்தத திரௌபதியின் ஐந்து மகன்களைக் கொன்றார். அர்ஜுனன் அஸ்வத்தாமாவை பிடித்து, மிருகம் போல் கட்டி, அழுது கொண்டிருந்த திரௌபதியின் காலடியில் எறிந்தார். மென்மையான குணத்துடன் மன்னிப்பவராக இருந்த திரௌபதி அஸ்வத்தாமா பாண்டவர்களின் குருவான துரோணாச்சாரியரின் மகன் என்பதால், அவரை மன்னிக்க வேண்டும் என்று கூறினார். மறுபுறம், பீமன், அஸ்வத்தாமாவை உடனடியாகக் கொல்ல விரும்பினார். ஒரு இக்கட்டான நிலையில், அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கி ஒரு தீர்வைத் தேடினார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், ‘'மரியாதைக்குரிய ப்ராஹ்மணர் தற்காலிகமாக அறத்திலிருந்து விழுந்திருந்தாலும் மன்னிக்கப்பட வேண்டும். ஆனால், ஆயுதம் ஏந்தி கொல்ல அணுகும் நபர் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் இரு பொருளுடைய அறிவுரைகளை புரிந்து கொண்டார். அவர் அஸ்வத்தாமாவைக் கொல்லவில்ல; அதற்குப் பதிலாக, குடுமியாக  கட்டப்பட்டிருந்த அவரது முடியை வெட்டி விட்டு அவரது நெற்றியில் இருந்த மகத்தான சக்தி வாய்ந்த மணிக்கல்லை அகற்றிவிட்டு அவரை முகாமிலிருந்து வெளியேற்றினார். எனவே, அர்ஜுனனின் இயல்பு முடிந்தவரை வன்முறையை தவிர்ப்பதுதான். இந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், உறவினர்கள் மற்றும் பெரியவர்களைக கொல்வது முறையற்றது என்று தனக்குத் தெரியும் என்று கூறுகிறார்.

ரித்1விக்1பு1ரோஹிதா1சா1ர்யைர் மாது1லாதி1தி2ஸன்ஶ்ரிதை1ஹி

பா3லவ்ரித்3தா1து1ரைர் வைத்4யைர் ஞ்யாதி1ஸம்ப3ந்தி4பா3ன்த4வைஹி

(மனு ஸ்ம்ருதி1 4.179)

“ஒருவர் - அக்னி தியாகம் செய்யும் ப்ராஹ்மணர், குடும்ப புரோகிதர், ஆசிரியர், தாய்மாமன், விருந்தினர், நம்மை சார்ந்த குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள், மருத்துவர், அல்லது உறவினர்களுடன் சண்டையிடக் கூடாது.’ இறுதியாக, பேராசையால் ஆட்கொள்ள கௌரவர்கள் உரிமையில் இருந்து விலகி பாகுபாடு உணர்வை இழந்திருக்கலாம் ஆனால் எந்த நோக்கமும் இல்லாத அவர் ஏன் அப்படிப்பட்ட சகிக்க முடியாத செயலில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

Watch Swamiji Explain This Verse