அர்ஜுன உவாச1 |
ஸன்யாஸம் க1ர்மணாம் க்1ருஷ்ண பு1னர்யோக3ம் ச1 ஶந்ஸஸி |
யச்1ச்2ரேய ஏத1யோரேக1ம் த1ந்மே ப்3ரூஹி ஸுநிஶ்சி1த1ம் || 1 ||
அர்ஜுனஹ உவாச---அர்ஜுன் கூறினார்; ஸன்யாஸம்—பற்றற்றிருத்தல்; கர்மணாம்-—செயல்களின்; கிருஷ்ணா—--ஸ்ரீ கிருஷ்ணா; புனஹ----மீண்டும்; யோகம்—--கர்ம யோகத்தைப் பற்றி; ச---மேலும்; ஶந்ஸஸி--—நீ துதிக்கிறாய்; யத்---எது; ஷ்ரேயஹ-—அதிக நன்மை வாய்ந்த; ஏதயோஹோ--—இரண்டில்; ஏகம்--ஒன்றை; தத்---அது; மே---எனக்கு; ப்ரூஹி--—தயவுசெய்து சொல்லுங்கள்; ஸு-நிஶ்சிதம்---உறுதியாக.
Translation
BG 5.1: அர்ஜுன் கூறினார்: ஓ ஸ்ரீ கிருஷ்ணா, நீங்கள் கர்ம ஸன்யாஸத்தை (செயல்களைத் துறக்கும் பாதை) புகழ்ந்தீர்கள், மேலும் நீங்கள் கர்ம யோகத்தையும் (பக்தியுடன் வேலை செய்ய) அறிவுறுத்தினீர்கள். இரண்டில் எது அதிக பலன் தரக்கூடியது என்பதை தயவு செய்து தீர்க்கமாக சொல்லுங்கள்.
Commentary
அர்ஜுனனின் பதினாறு கேள்விகளில் இது ஐந்தாவது கேள்வி. ஸ்ரீ கிருஷ்ணர் செயலை துறத்தல் மற்றும் செயல் பக்தி இரண்டையும் பாராட்டுகிறார். இந்த முரண்பாடான போதனைகளை கேட்டு அர்ஜுனன் கலக்கமடைந்து, இந்த இரண்டு பாதைகளில் எது தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிய விரும்புகிறார்.. இந்தக் கேள்வியின் சூழலை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
முதல் அத்தியாயம் அர்ஜுனனின் துன்பத்தின் தன்மையை விவரித்தது, அதன் விளைவாக ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு ஆன்மீக அறிவை வழங்குவதற்கான சூழலை உருவாக்கினார். இரண்டாவது அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஆன்மாவின் அறிவியலை உணர்த்தி, ஆன்மா அழியாதது, அதனால் யாரும் போரில் இறக்க மாட்டார்கள் என்று விளக்கினார். எனவே வருத்தப்படுவது முட்டாள்தனம். ஒரு போர்வீரனாக தர்மத்தின் பக்கம் நின்று போரிடுவதுதான் அவரது கடமை என்பதை அர்ஜுனனுக்கு நினைவுபடுத்துகிறார். ஏனெனில் செயல்கள் மனிதனை செயல்களின் பலன்களுடன் பிணைக்கிறது. எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் தனது செயல்களின் பலனை இறைவனுக்கு வழங்குமாறு ஊக்குவிக்கிறார், இதனால் அவரது செயல்கள் கர்மயோகமாக மாறும் அல்லது 'செயலினால் இறைவனுடன் ஐக்கியமாக' முடியும்.
மூன்றாவது அத்தியாயத்தில், மனதைத் தூய்மைப்படுத்த உதவுவதால், ஒரு மனிதன் தனது கடமைகளைச் செய்வது அவசியம் என்று பரமாத்மா தெளிவுபடுத்தினார். ஆனால், மனசாட்சியை ஏற்கனவே புனித புனிதப் படுத்திக் கொண்டஒருவர் சமூகக் கடமைகளை செய்ய தேவையில்லை என்றும் அவர் கூறினார் (வசனம்-3:17).
நான்காவது அத்தியாயத்தில், இறைவனின் மகிழ்ச்சிக்காக செய்யப்படும் பல்வேறு வகையான யாகங்களை இறைவன் விளக்கினார். இம்முடிவை வழங்கிய அவர், இயந்திர சம்பிரதாயங்களை விட அறிவால் செய்யப்படும் யாகங்கள் மேலானவை என்றார். மேலும், அனைத்து தியாகங்களும் கடவுளுடன் உறவை ஏற்படுத்துவதற்கான அறிவில் முடிவடைகின்றன என்றும் அவர் கூறினார். இறுதியாக, வசனம்-4.41இல், அவர் கர்ம ஸந்நியாஸத்தின் கொள்கையை விவரித்தார், அதில் ஒரு நபர் வேத சடங்குகள் மற்றும் சமூகக் கடமைகளை துறந்து, உடல், மனம், மற்றும் ஆன்மாவுடன் இறைவனின் சேவையில் ஆழ்கிறார். இந்தப்போதனைகள் அனைத்தும் அர்ஜுனனைக் குழப்பியது. செயலைத் துறத்தல் மற்றும் கர்மயோகம் அதாவது (பக்தி நிறைந்த வேலை) முரண்பாடான இயல்புடையது என்று அவர் நினைத்தார், மேலும் இந்த இரண்டையும் ஒன்றாகப் பின்பற்றுவது சாத்தியமில்லை. அதனால்தான் அவர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.