ஸாங்க்2யயோகௌ3 ப்1ருத2க்3பா3லா: ப்1ரவத3ன்தி1 ந ப1ண்டிதா1: |
ஏக1மப்1யாஸ்தி2த1: ஸம்யகு3ப4யோர்வின்த3தே1 ப2லம் || 4 ||
ஸாங்க்ய—--செயல்களைத் துறத்தல்; யோகௌ—--செயல்களின் யோகம்; ப்ரிதக்--—வேறுபட்ட; பாலாஹா--—அறியாதவர்கள்; ப்ரவதந்தி---பேசுகிறார்கள்; ந--—ஒருபோதும் இல்லை; பண்டிதாஹ----கற்றவர்கள்; ஏகம்—--ஒன்றில்; அபி—--கூட;;ஆஸ்திதஹ---—இருப்பவர்;ஸம்யக்--—முற்றிலும்;உபயோஹோ—--இரண்டிலும்;விந்ததே---அடைவர்; ஃ பலம்--–-விளைவை
Translation
BG 5.4: அறிவில்லாதவர்கள் மட்டுமே ஸாங்க்ய யோகம் (செயல்களைத் துறப்பது), மற்றும் கர்ம யோகம் (பக்தியுடன் பணிபுரிதல்) ஆகியவற்றை வேறுவிதமாகப் பேசுகிறார்கள். இந்த பாதைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம், இரண்டின் பலனையும் அடையலாம் என்று உண்மையிலேயே கற்றவர்கள் கூறுகிறார்கள்.
Commentary
இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் ஸாங்க்ய என்ற வார்த்தையை கர்ம ஸன்யாஸம் அல்லது அறிவை வளர்ப்பதன் மூலம் செயல்களைத் துறப்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். துறப்பது இரண்டு வகையானது என்பதை இங்கே புரிந்துகொள்வது முக்கியம்: . ஃ பல்கு3 வைராக்3யம் மற்றும் யுக்த1 வைராக்3யம். ஃ பால்கு வைராக்யம் தப்பிக்கும் மனோபாவம் கூடிய மற்றும் நிலை அற்றதாகும் இந்த வகையான துறப்பு இந்த நபர்களின் சிரமங்களில் இருந்து தப்பிக்கும் விருப்பத்தால் தூண்டப்படுகிறது . அத்தகைய நபர்கள் ஆன்மீகப் பாதையில் சிரமங்களைச் சந்திக்கும் போது, அவர்கள் அங்கிருந்து பிரிந்து, உலக வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புவார்கள். யுக்த வைராக்யம் என்பது உலகம் முழுவதையும் கடவுளின் ஆற்றலாகப் பார்க்கிறது. அவர்கள் தங்களிடம் உள்ளதை தங்களுக்கு சொந்தமானது என்று பார்க்க மாட்டார்கள். மேலும், அதை அனுபவிக்க விரும்புவதில்லை. மாறாக, கடவுள் தங்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையால் அவர்கள் தூண்டப்படுகிறார்கள். யுக்த வைராக்கியம் நிலையானது மற்றும் சிரமங்களைச் சந்திக்கும் போது சிதறடிக்க படாது.
கர்ம யோகிகள், தங்கள் அன்றாடக் கடமைகளை செய்யும்போது, யுக்த வைராக்யம் அல்லது நிலையான துறவு உணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களை வேலையாட்களாகவும், கடவுளை அனுபவிப்பவராகவும் பார்க்கிறார்கள், எனவே, அவர்கள் அனைத்தையும் அவரது மகிழ்ச்சிக்காகச் செய்யும் உணர்வில் நிலைத்திருக்கிறார்கள். இந்த முறையில், தெய்வீக உணர்வில் முழுமையாக மூழ்கியிருக்கும் கர்ம ஸன்யாஸிகளைப் போலவே அவர்களின் உள் நிலையும் மாறுகிறது, அவர்கள் இம்மை தொடர்புடைய மக்களாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் மனதளவில் ஸன்யாஸிகளுக்குக் குறைவானவர்கள் அல்ல.
புராணங்களும் இதிகாசங்களும் இந்திய வரலாற்றில் உள்ள பெரிய அரசர்களின் உதாரணங்களைக் கூறுகின்றன, அவர்கள் வெளிப்புறத்தில் தங்கள் அரச கடமைகளை விடாமுயற்சியுடன் ஆற்றி, அரச செழுமையுடன் வாழ்ந்தாலும், மனதளவில் கடவுள்-உணர்வில் முழுமையாக மூழ்கியிருந்தனர். ப்ரஹலாத், த்ருவ், அம்பரீஷ், ப்ருது, விபீஷணன், யுதிஷ்டிரர் மற்றும் பலர் அத்தகைய முன்மாதிரியான கர்மயோகிகள். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:
க்3ரீஹித்3வாபி3ந்த்ரியைர் அர்த்2தா2ன் யோ ந த்3வேஷ்டி1 ந ஹ்ரிஷ்யதி1
விஷ்ணோர் மாயாம் இத3ம் ப1ஶ்யன் ஸ வை பா4க3வத்1தோ1த்1த1மஹ. (11.2.48)
ஆற்றல் என்றும், அவருடைய சேவையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தெய்வீக உணர்வில் புலன்களின் பொருள்களை ஏற்றுக்கொள்பவர் அவைகளுக்காக ஏங்காமல், அவற்றிலிருந்து ஓடாமல்- ஏற்றுக்கொள்பவர், உயர்ந்த பக்தன்.' கர்ம யோகத்திற்கும் கர்ம ஸன்யாஸத்திற்கும் வித்தியாசம் இல்லை. அவற்றில் ஒன்றைப் பின்பற்றுவதன் மூலம், இரண்டின் முடிவுகளும் அடையப்படுகின்றன.