கா1யேன மனஸா பு3த்3த்4யா கே1வலைரிந்த்3ரியைரபி1 |
யோகி3ன: க1ர்ம கு1ர்வன்தி1 ஸங்க3ம் த்1யக்1த்1வாத்1மஶுத்3த4யே ||
11 |
|
காயேன--—உடலுடன்; மனஸா----மனத்துடன்; புத்த்யா—--புத்தியுடன்; கேவலைஹி—--ஒரே; இந்த்ரியைஹி--—புலன்களுடன்; அபி--—கூட; யோகினஹ----யோகிகள்; கர்ம--—செயல்கள்; குர்வந்தி--—செய்கிறார்கள்; ஸங்கம்--—பற்றுதலை; த்யக்த்வா--—கைவிட்டு; ஆத்ம—--தன்னுடைய; ஶுத்தயே—புனிதப்படுத்துவதற்காக;
Translation
BG 5.11: யோகிகள், பற்றுதலைக் கைவிட்டு, தங்கள் உடல், புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றைக் கொண்டு சுயச் சுத்திகரிப்புக்காக மட்டுமே செயல்களைச் செய்கிறார்கள்.
Commentary
யோகிகள் பொருள் ஆசைகளில் மகிழ்ச்சியை தேடுவது பாலைவனத்தில் ஒரு மாயையை தொடர்வதற்கு ஒப்பானது என்பதை புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு உணர்ந்த அவர்கள், சுயநல ஆசைகளைத் துறந்து, அவர் ஒருவரே போ4க்1தா1ரம் யஞ்ஞ த1ப1 ஸாம்----(அனைத்து செயல்களின் தலைசிறந்த அனுபவிப்பாளர்) என்பதை கருத்தில் கொண்டு கடவுளின் மகிழ்ச்சிக்காக மட்டுமே தங்கள் எல்லா செயல்களையும் செய்கிறார்கள், இருப்பினும், இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஸமர்பணத்திற்கு (எல்லா வேலைகளையும் கடவுளுக்கு அர்ப்பணித்தல்) என்ற ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டுவருகிறார். அறிவொளி பெற்ற யோகிகள் மனதை தூய்மைப்படுத்தும் நோக்கத்திற்காக தங்கள் பணிகளைச் செய்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். பிறகு எவ்வாறு படைப்புகள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன?
உண்மை என்னவென்றால், கடவுளுக்கு நம்மிடமிருந்து எதுவும் தேவையில்லை. ஸர்வவல்லமையுள்ள, பூரணமான, மற்றும் நிறைவான கடவுளுக்கு எவ்வாறு ஒரு சிறிய ஆன்மா அவரிடம் ஏற்கனவே இல்லாததை அர்ப்பணிக்க முடியும்? எனவே, கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் போது இவ்வாறு கூறுவது வழக்கம்: த்1வதி 3யம் வஸ்து1 கோ3விந்த3 து1ப்4யமேவ ஸமர்பி 1த1ம் 'கடவுளே, நான் உனது பொருளை உனக்கே திருப்பித் தருகிறேன்.' இதே உணர்வை வெளிப்படுத்தி, துறவி யமுனாச்சார்யா குறிப்பிடுகிறார்:
மம நாத1 யத்3 அஸ்தி1 யோ'ஸ்ம்யஹம்
ஸக1லம் த1த்3தீ4 த1வைவ மாத4வ
நியத1 ஸ்வம் இதி1 ப்3ரபு3த்3த4 தை4ர் அத2 வா
கி1ம் நு ஸமர்ப்ப1யாமி தே1 (ஸ்ரீ ஸ்தோத்1ரத்1னா, 50)
‘விஷ்ணு பகவானே, அதிர்ஷ்ட தேவியின் கணவரே, நான் அறியாமையில் இருந்தபோது, உங்களுக்கு பலவற்றை வழங்குவேன் என்று நினைத்தேன். ஆனால், இப்போது நான் அறிவைப் பெற்ற பிறகு, எனக்கு சொந்தமான அனைத்தும் ஏற்கனவே உன்னுடையது என்பதை நான் உணர்கிறேன். பிறகு நான் உங்களுக்கு என்ன வழங்க முடியும்?
எனவே, யோகிகள் கடவுளுக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசு, தங்கள் சொந்த இதயத்தின் தூய்மை என்பதை புரிந்துகொண்டு, அதை அடைய கடினமாக முயற்சி செய்கிறார்கள். ராமாயணத்தில், இந்தக் கோட்பாட்டின் அழகான எடுத்துக்காட்டு உள்ளது.
லங்கா போருக்கு முன் சுக்ரீவன் சற்றே பயந்திருப்பதைக் கண்ட ராமர், அவரை பின்வரும் முறையில் ஆறுதல்படுத்தினார்:
பி 1ஶாசா1ன் தா1னவான் யக்ஷான் ப்1ரிதி 2வ்யாம் சை1வ ராக்ஷஸான்
அங்கு3க்3ரேண தா1ன்ஹன்யா மிச்1ச2ன் ஹரீ கணேஸ்வரஹ
(வால்மீகீ ராமாயணம்)
பகவான் ஸ்ரீ ராமர் சொன்னார், 'உலகில் உள்ள அனைத்து அரக்கர்களும் நான், என் இடது கையின் சுண்டு விரலை மட்டும் வளைத்தால் இறந்துவிடுவார்கள், ராவணன் மற்றும் கும்பகர்ணனைப் பற்றி என்ன பேசுவது' என்று பதிலளித்தார்.
சுக்ரீவன், 'அப்படியானால், என் கடவுளே!, ராவணனைக் கொல்ல, இந்தப் படையைச் சேகரிக்க வேண்டிய அவசியம் என்ன?’
அதற்கு பகவான் கூறினார், ‘உன்னை தூய்மைப் படுத்துவதற்காக உன்னை பக்தி தொண்டில் ஈடுபடுத்த உனக்கு எல்லா வாய்ப்பையும் கொடுப்பதற்காகவே. இருப்பினும், இந்த இராட்சதர்கள்களை அழிக்க எனக்கு உங்கள் உதவி தேவை என்று நினைக்க வேண்டாம்.’
நாம் அடையும் தூய்மை மட்டுமே நமது நிரந்தர சொத்து. அது அடுத்த ஜன்மத்திற்குச் செல்கிறது, அதே சமயம் அனைத்து பொருள் சொத்துக்களும் விட்டுச் செல்லப்படுகின்றன. எனவே இறுதிப் பகுப்பாய்வில், இதயத்தின் தூய்மையை நாம் எந்த அளவிற்கு அடையச் செய்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கண்ணோட்டத்தில், உயர்ந்த யோகிகள் பாதகமான சூழ்நிலைகளை வரவேற்கிறார்கள், ஏனெனில் இவற்றை அவர்கள் இதயத்தை சுத்தப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். புனித கபீர் கூறுகிறார்
நிந்த3க்1 நியரே ராகி 2யே ஆங்க3ன் கு1டி ச2பா 3ய
நித1 ஸாபு3ன் பா1னி பி 3னா நிர்மல க1ரே ஸுபா4ய
‘உங்கள் இதயத்தை விரைவாகச் சுத்தப்படுத்த நீங்கள் விரும்பினால், விமர்சகரின் துணையை வளர்த்துக் கொள்ளுங்கள். அவருடைய கடுமையான வார்த்தைகளை நீங்கள் பொறுத்துக்கொள்ளும் போது, உங்கள் இதயம் தண்ணீரும் சோப்பும் இல்லாமல் சுத்தமடையும்.' இவ்வாறு இதயத்தை தூய்மைப்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொள்ளும்பொழுது, எதிர்ப்பு சூழ்நிலைகளை முன்னேற்றத்திற்கான கடவுள் அனுப்பிய வாய்ப்புகளாக வரவேற்று, வெற்றி மற்றும் தோல்வி இரண்டிலும் சமமாக இருப்பது இந்த முயற்சியின் அடிப்படையாகிறது. கடவுளின் மகிழ்ச்சிக்காக நாம் உழைக்கும்போது, இதயம் தூய்மையடைகிறது; இதயம் தூய்மை அடையும் போது, நாம் இயற்கையாகவே நமது எல்லா செயல்களின் பலனையும் ஒப்புயர்வற்ற இறைவனுக்கு வழங்குகிறோம்.